Sunday, 6 December 2009

நின்னை ரதி யென்று





கருவில் கறுப்பென்று
குங்குமப் பூ
கருப்பையில் நீயென்று
காதல் மலர்

சிந்தனை செய்முன்
தொட்டிலில் அழுகுரல்
சிரித்து பழகுமுன்
கைகள் பரிமாற்றம்

ஒட்டின உறவென்று
ஒட்டாத சொந்தமொன்று
எட்டிப் பார்க்கையில்
முடியுது சம்மந்தம்

பட்டு பாவடையில்
தொட்டு பழகையில்
துணை யென்று
சொல்லுது ஊரு

பள்ளிக்கு துணை
பருவம் துணை
சொந்தம் கூடையில்
சொத்துக்கும் துணை

காதுகுத்துக்கு மாப்பிள்ளை
ஆடுவெட்டி பிரமாதம்
மாப்பிளை எங்கோ?
வீதியல பல்லாங்குழி

பனை வளருது
பாவாட தாவணி
தென்னை காய்க்குது
முக்கால் முழுக்கால்

முகம் பார்க்குது
நாணம் சேரல
முத்தம் கேக்குது
சத்தம் சேரல

நாணமும் காதலும்
ரெட்டையில் பிறந்தவை
முத்தமும் சத்தமும்
இரண்டென போனவை



பார்த்தும் பார்த்தும்
ஏக்கம் தோனல
பழகியும் பேசியும்
வார்த்த தேடல

காத்திருந்து கரையல
தெருவோரம் பாடல
கண்ணாடி காணல
காதல் வரல

காலம் வருது
கால் கணக்கு
முடியுது பேச்சு
ஊர் வாயல

முத்தமிடாத உதடு
நினைக்காத மனது
தீண்டலிலா விரல்
நடக்குது முதலிரவு

தொடர் வாழ்
நிசப்த இரவு
காமம் ஏது
காதல் இல்?

கட்டை காற்சட்டை
பட்டு பாவாடை
கேட்டதா காதல்?
சொன்னதா நேசம்

நேரில் பார்க்காமல்
நெருடல் கொள்ளினும்
நின்னை ரதியென்று
நினைக்கச்செய்யும் பந்தம்....

Tuesday, 3 November 2009

நீ... நான்... அவள்...




நிலைத்த வாழ்வு
நிசப்த்த பூமி
கொட்டும் இன்பம் இல்
சொட்டும் துன்பம்
துணைக்கொரு நட்ப்பென்று
அடிக்கடி நச்சரிப்பு
ஆரம்ப காதல்
இதயத் துடிப்பில்...

கொண்டது காதலென்று
கண்டது நெஞ்சம்
கொள்வது அதையென்று
அறியாமல் சொல்லும்

பார்ப்பதில் சுடும்
கண்களில் பேசும்
வார்த்தைகள் உச்சரிக்க
புதுமொழி கேட்க்கும்
என்றுமே உரையாடல்
அவளோடு மாயை

தொடுதல் கேட்பில்
மறுதலை காட்டும்
காதல் செய்தின்
காமம் கொள்ளும்

இதயம் வலிப்பில்
அவள்முகம் காணும்
இதமாய் சுகம்
பேச்சில் கேட்க்கும்

காலம் கடப்பில்
காதல் சொல்லும்
காதல் கனிய
கடிதம் வரையும்


முழுமை காதல்
முழுதாய் பெறுமுன்
முத்தம் ஒன்று
முதல் கேட்க்கும்

நச்சரித்த நட்ப்பது
இடைவெளி கொள்ளும்
நாளும் அவள்மடி
பொழுதும் தேடும்

கவியென பேனா
கிறுக்கலை எழுதும்
அதுவும் கவியென
சொல்லும் புன்னகை

சிணுங்கும் தொலைபேசி
சொல்லும் விடியலை
அடங்கும் ஓசையில்
காணும் அவளை

ஆண்டு மடல்
காதல் பரிசோடு
அவளின் நினைவுகள்
நெஞ்சின் வலியோடு

மடலோடு வருமது
திருமண அழைப்பிதல்
உள்ளத்தால் வாழ்த்துக்கள்
அவனுக்கு மட்டுமாய்

வாழ்த்துக்கு காரணம்
மதுவோடு கேட்கையில்
நச்சரித்த நடப்புக்கு
இன்னொரு காதல்...

Saturday, 5 September 2009

புத்தனும் பித்தனும்



புத்தமொன்று பித்தம்கொண்டு
யுத்தமொன்று யானதே

நித்தமொரு பிண்டமென்று
ரத்தஆறு ஓடுதே

காட்டிலொரு யானையொண்டு
மதம் பிடிக்கப்பார்த்ததே

குட்டியந்த யானையென்று
பால் கொடுத்து சென்றதே

நாட்டில் நல்ல மனிதம் காண
மதம் என்று சொல்லுதே

நல்ல புத்தம்அது நிலை கொள்ள
இனமொன்று கொல்லுதே

விதி சொல்லி பிள்ளையொன்று
பிணமென்று ஆனதே

வரும் நதி போன்ற கூட்டமொன்று
தாய்மண் இழக்குதே

மனிதம் வளர்ப்பார்
நெஞ்சில் மதமும் வளர்ப்பார்
பிஞ்சில் சொல்ல மறுப்பார்
இனம் சொல்லி மரிப்பார்

புத்தமொன்று பித்தம்கொண்டு
யுத்தமொன்று யானதே

இனமொன்று மரணமென்று
முடிவொன்று சொன்னதே

நாட்டிலொரு படையொன்று
பிக்கு வாக சென்றதே

வாக்கு இன்றி தேர்தலின்றி
நாடுஆள பாக்குதே

பூனையொன்று சாது என்று
காவி ஆடை கட்டுதே

அதிலொன்று எலியென்று
உயிர் கொள்ளபபக்குதே

முற்றுமது துறந்ததென்று
காவியது காட்டுதே

இனம்கொன்று வாழ்ந்துபார்க்க
சாவியது கொடுக்குதே

நீர் கேட்டு மா நிலமொன்று
கையேந்தி நிக்குதே

நிலம் பிரிக்கும் அதுசொந்தமென்று
இன்னும் கூட்டம் நம்புதே

போதனை செய்வார்
நல்ல அறிவும் சொல்வார்
யாதும் தேசம் என்பார்
புத்தம் கொலையும் செய்வார்

புத்தமொன்று பித்தம்கொண்டு
யுத்தமொன்று யானதே

பிஞ்சுப்பிள்ளை கையில்அது
தாயின் ரத்தம் பூசுதே

வீட்டிலொரு சொந்தமொன்று
போராடி கேக்குதே

மனிதனில்லை நீயென்று
போதிமரம் சொல்லுதே

பறவையொன்று கூடுகட்டி
குஞ்சுஒன்று பொரிக்குதே

குருவியொன்று இடம்தேடி
கூட்டைஅது கலைக்குதே

பாவம் அந்த பறவையென்று
ஐயிந்தறிவு சொல்லுதே

மீதியது கலைக்குமுன்னே
இறக்கை கட்டி பறக்குதே

பக்கம் வந்த பித்தனொன்று
காரணம் கேட்டதே

உயிர்கொண்டு மண்திருட
நான் புத்தனில்லை என்றதே

புத்தமொன்று பித்தம்கொண்டு
யுத்தமொன்று யானதே

இனம்மொன்று வேலியிட்டு
சிறைஎன்று போனதே

நாளை என்ன என்று சொல்ல
மதம் என்ன செய்யுமோ

புத்தம் சரணம்... புத்தம் சரணம்.....

மதம் பிடித்த மனிதன் கொல்ல
புத்தன் ஒருத்தன் பிறப்பானோ

கையிலொரு தீயேந்தி
தன்மதம் அழிப்பானோ.......

Friday, 21 August 2009

உணர்வுகள் பேசும் புத்தகம்

தொலைபேசி சிணுங்கள் அவசர காதல்... புகையிரத நிலையம் காதலன் தொலைபேசி கண்ணிய அழைப்பு, செல்ல கோபத்தோடு வார்த்தைகள் உச்சரிக்க உன் ஜாபகத்தில் உறைந்த அந்த நிமிடத்தில் பேனா எழுதிய அவசர கற்பனை இது




உணர்வுகள் பேசும் புத்தகம்

அந்த வெட்கம்
ஒரு தரம் முகம் பார்க்கும் முன்
தொலைபேசி சிணுங்களில்
சத்தங்கள் பரிமாறலில்
மௌனங்கள் மட்டும் பேசும்
உச்சரிப்பின் வெட்க்கம்

முதல் ஹாய்
பெயர் சொல்லி மறுநிமிஷம்
ஒருநொடி நிசப்தத்தில்
குரல் கூட வாசிக்கும்
ஹார்மோனியம்

இலக்கணப் பிழையின்றி
அடுத்த வார்த்தை தேடும் அரை நொடி

எத்தனை வார்த்தைகள்
தாய்மொழியில் தேடியும்
நலம் விசாரிக்க
இலக்கியம் வழங்கும் அடுத்த வார்த்தை

ஒருவழியாய் மௌனம் கலையும்
முத்தம் கேட்க்காத உதடுகள்
முகம் பார்க்க அழைக்கும்
கனவு காணாத கண்கள்
கவி பாட தேடும்

கண்ணீர் பேசும் வார்த்தைகளோடு

நினைவோடு நினைந்தவளில்
நிலையான வார்த்தைகள்
நிதம் ஒலிக்கும் மென்று
காதுகள் சேமிக்கும் ஒவ்வொரு
உளறல்களின் உச்சரிப்புக்களையும்

செல்லக்கோபம் சின்ன சமாதனம்
ஒற்றையாய் உதட்டுக்கடி
ஓராயிரம் கண் சிமிட்டல்
ஒரு வரிக்கவிதை
மெல்லிய புன்னகை
இத்தனையும் தாண்டி

உன் ஒவ்வொரு திட்டிலும்
எனக்கான அக்கறை

நேரம் தடுமாறும்
தொலைபேசி சுடும்
கால்கள் வழிப்போக்கனாகும்
கைகள் இடம்மாற்றும்
சுற்றம் தொழையும் சூழால் மறக்கும்
நீ நான் பேச்சு மட்டுமாய்

பேச்சுக்களோடு
அருகிலிருக்கும் உன் புகைப்படம்
உதடுகள் அசைக்கும்
முரண்பாடுகளின்றி கண்சிமிட்டும்
புன்னகை செய்யும்

புகைப்படம் காதல் செய்து கவியும் சொல்லும்

வார்த்தைகள் தேடி தேடி
அகாரதிப்புத்தகங்கள் மூடப்படும்போது
உன் உதடுகள் உச்சரிக்கும் அந்தவார்த்தை
“உன்ன மறுபடியும் பாக்கணும்”

ஒரு சொல்லில் தற்கொலை செய்ததுண்டா
ஒற்றை வார்த்தை தூக்கில் இட்டதுண்ட
குரல் ஒன்று இதயம் கிழித்ததுண்ட
எங்கேயாவது
மொழி உயிர் கொள்ளுமா

வலி உணர்ந்திருக்கிறேன்
அந்த ஒரு சொல்லில்
அத்தனை வலியும் உணர்கிறேன்

தொலைபேசி துண்டிப்போடு.....

Tuesday, 11 August 2009

கட்டிலில் கலையொன்று




தொட்டிலில் கிடந்த பிண்டமொன்று
கட்டிலில் கதறுது கைக்காசுக்கு

என் பூஜை அறை கலைத்தேவதை
பிண்டமென்றேன் உன்னை

உடல் மட்டுமே விலை போகிறது
ஆன்மா தூய்மைபடுகிறது
புறக்கண் கொண்டு
உடல் தீண்டப்போவதில்லை
உன் அகம் தீண்டி
புறம் தள்ளி புனிதம் காணவே
பிண்டமென்றேன் உன்னை

அந்தப்பிரசவம்
வாடகைமுக தரிசிப்பில்
கலைமகள் என்ற உலகம்
இந்தப்பிரசவத்தில்
மெய்யுடல் காணாது
விலைமகள் என்கிறது

மஞ்சள் நீராட்டில் நனை உடல்
பூப்பெய்தி தொட்ட நாணம்
சடங்குகளில் வளர்த்த கட்டுப்பாடு
அத்தனையும் விலைபோகிறது
அந்த முதல் சந்தையில்
இருந்தும் உன் கற்பு மட்டும்
போலிப்புன்னகையில் புதுமையடைகிறது

தினம் தினம் எச்சில்கள்
தேநீர் கோப்பைகள் எழுதுகிறது
உடையும் வரை தேயப்போவது
உவமைகள் அற்ற உடல்களே
உன் உடலுக்கு உவமை தரப்போவதில்லை
உனக்கென்ற நாமம் உடலுக்கில்லை
நீ துய்மையானவள் புனிதப்பட்டவள்

எரிகின்ற மேடையில் தூக்கிப்போட்டும்
தீயில் தினம் வதைத்தெடுத்தும்
சாம்பலாகும் முடிவுமட்டும் உனக்கில்லாமல்
விலைபேசி எரிகிறது உன்னுடல்
மரணித்தும் வாழவைத்து
இறந்தும் உயிர்த்து
இறை விஞ்சி உயிர் சுமக்கிறது உன் உடல்

வருகிறார்கள் ரிஷிகள்
பிரம்மரிஷி ஆசைகளோடு?
முன்னே வருவது முற்றும் துறந்தவர்
கையில் எதற்கு வெண்கலப் பாத்திரம்
பின்னோடு யார் கவிஞனா?
கனவுகளோடு வாழ்பவன் நீ தானோ?

கட்டிலோடு ஆசை காமனோடு கரைகிறதே
ஆசையழித்த நீ பிரம்மரிஷி
கற்பும் ஆன்மாவும் உனக்கென கொண்டு
முற்றும் துறந்த நீ முனி
மெய்யழித்து நிஜம் புதைத்து
கனவோடு வாழ்வதால் நீ கவிஞன்

காணவில்லை மறையவில்லை
இருட்டோடு நிர்வாணம்
கருப்பில் தன்மானம்
கட்டிலில் கிடப்பது தவம்
இறந்த உடலை நுகர்கிறது
ஆயிரம் புழுக்கள்
கட்டியணைப்பது உயர்தினையல்ல
நித்தம் அறுவடைசெய்த அஃறிணை

இதயம் மட்டும் அழுகிறதே
உன் ஒவ்வொரு புன்னகையிலும்

நீ போதனைகளுக்காக பிறந்தவள்
புத்தன் வழியில் புனிதம் பெற்றவள்
ஜேசுவோடு பாவம் சுமப்பவள்
பிற மகிழ்ச்சியில் உயிரிழந்தவள்
இறைவனுக்கு ஏது இதயம்?

வார்த்தைகள் சுடும் உன்னை
வாழ்க்கை உனக்கேது

நீ வாழும்போதே ஆன்மாவனவள்
வளரும்போது உடல் கொன்றவள்
தொடுதலில் உன்னை அழித்தவள்
தீண்டலில் தற்கொலை செய்தவள்

வாடகை உடல் உனக்கெதற்கு
சரீர கடன் உலகிலேயே தீர்த்தவள்

நீ நீயாகிறாய்
தினம் கொட்டிவிட்ட உன் உணர்வழித்து
நாளோடு உடல் தின்று
பிரபஞ்சம் அடங்காத பிரபஞ்சம்
உனக்குள் வைத்து
மனிதம் மரணித்து.....

Sunday, 9 August 2009

நேர இயந்திரம்

(கல்லோடு கல் உரசி தீயை கண்டுபிடிக்க மனிதனுக்கு முன்னால் ஒரு பறவையோ மிருகமோ வெற்றி கண்டிருந்தால்... கொஞ்சம் தண்ணியில ஏதோ கிறுக்கினது...)

நேர இயந்திரம்




கொட்டிலில் ஒன்று
தொட்டிலில் ஒன்று
நிர்வாண வெட்கம்
நிலையறியா புத்தி
பெரியவன் எவனோ
பெறாமகனுக்கு பசிதீர்ப்பவன்

பக்கத்து வீட்டில் பேரம்பேச்சு
ஐந்நூறு ரூபாய்க்கு குட்டி
இரண்டாயிரத்துக்கு தாய்
நூறுக்கு பத்துக் குறைச்சல்
நாணயம் நாகரீகம்
மாட்டுக்கும் ஆட்டுக்கும்
முடியுது வியாபாரம்..

தாய்க்கெண்டு சமயல்கட்டு
குட்டிக்கெண்டு ஊர்க்கோயில்
அம்மா அம்மா சத்தம்
அடுத்த நொடி தாய் மடி
எஜமானி விஸ்வாசம்
சொல்லுது ஆடு...

மாளிக மாட்டுக்கொட்டில்
பக்கத்தில குடிச பண்ண
பன்னிக்கும் மாட்டுக்கும்
தகராறு வேலயில
சட்டத்தில முடிவில்ல எண்டு
சமத்துவம் சொல்லுது மாடு...

ஜனநாயக கரடி பாசிச புலி
இனத்துகில்ல ஆட்சி ...
பணத்திலில்லா உலகச்சந்த
பாராளுமன்றம் பயனுமில்ல
காதல் செய்யுது கிளியும் பருந்தும்
சேர்த்து வைக்குது கொக்கும் மீனும்....

காகம் கும்பிடப்போவதில்லை
கிளி சாலம் செய்வதில்லை
புறா விரதம் பிடிப்பதில்லை
பூச்சி ஞானஸ்தானம் பெறுவதில்லை
இருந்தும் பிறப்பும் இறப்பும்
வேதாந்தம் என்று எலி வேதம் படிப்பதுமில்லை

நாய்க்கெண்டு தாசி வீடு தெரியாது
பூனைக்கு ஏது வப்பாட்டி
கொலைகார மான் கிடையாது
எங்கேயாவது வெட்டுக்கிளி
பொய் சாட்சி சொல்லுமா
சட்டம் தெரியாது சாரைப்பம்புக்கு...

கோழி புரட்ச்சி அறியாது
வரலாறு சொல்லுமா
மாட்டுக்கொட்டில் புரட்ச்சியையும்
நத்தைகூட்டு புரட்ச்சியையும்
புரட்ச்சிகளில் அரசியல் முறையுருவாக்க
சிங்கங்கள் ஒன்றும் புரட்ச்சியாளர் அல்ல

சாஸ்திரங்கள் வரலாறுகள்
ரத்தங்காணும் அருவாக்கள்
புரட்ச்சிகள் யுத்தங்கள்
புதுமை சொல்லும் புத்தகங்கள்
அறிவியலாளர் அகம் பார்ப்பதில்லை
மதவியல் புறம் காண்பதில்லை

வறுமை வாழாவெட்டி
மிருகங்களுக்கில்லை
எரிச்சல் பொறாமை
பறவைகள் உணர்வதில்லை
உதவும் இனமென்று
தத்துவமும் பேசுவதில்லை

கொண்டது பகுத்தறிவு
செய்தது சிந்தனை
பிறந்தது உணர்வு
நினைத்தது உயர்ச்சி
மீண்டும் காட்டில்
கல்லோடு கல் உரசி......

Saturday, 8 August 2009

அமுதமான காத்திருப்பு

கால இடைவெளியில்
மழை நீர் சிந்தி கரையாத வானம்
கண்ணீர் ஏந்தி அழியாத பூமி
கரை படாத காதல்
பூப்பெய்தியும் காய்க்க மறுத்த கனி
கலங்கப்படாத பருவம்
இத்தனயும் தாண்டி

பல ஆண்டுகள்
பெயர் சொல்லி ஆளாகி
முற்றத்தில் முத்தம் பார்த்து
முழுநிலவில் முகம் தேடி
காத்தோடி கடிதம் வரைந்து
கனவோடு சோகம் வளர்த்து

கன்னியெனும் தன்மையது
காலத்தோடு கரைந்திடினும்

உள்ளமது உனக்கென்று
உறவுக்காய் காத்திருந்த
உத்தமிக்கு உவகை செய்ய


வருவான் காதல் கவிஞ்ஞன் இவனென
காலமொடு காத்திருந்த என் கன்னிக்கு

நெஞ்சோடு கவி தெளித்து
நேசத்தோடு மடல் அனுப்பி
பின்னோடு வருவது நாயகனன்றி
நாணம் கலைக்கும் காதலனென்று
முகநூலோடு முகம் பத்திதும்
முழுதும் அறியா பாவையாய்...

காலம் கடந்த முன் நினைவுகள்
கவிதன்னில் சொல்லிடினும்
அறைதன்னில் தனிமைதேடி
மாலைசூடும் நினைவுகள்
கனவுகள் தானென
கண்ணீர் கடன் வாங்குவதேனடி

மனசோடு நினைவு வந்து
மார்போடு கட்டியனச்சு
வரப்போட போனதென்று ...

வீதியோட நடந்து
விரல் நுனி பிடிச்சு
ஊருக்குள்ள பேசி
முடிஞ்சுவெச்ச நேசம்
மஞ்சள் தாலி குங்குமமத்தில்
கடைவது நனவன்று
நெஞ்சோடு சேர்ப்பதேனடி...

காதல் வந்தும் வார்த்தை யின்றி நீ
வார்த்தை தேர்ந்தும் சந்தர்ப்பமின்றி நான்




காலம் வரைந்தும் கவி சொல்லியும்
பாஷைகள் மௌனிக்கும்
இதயம் உச்சரிக்கும்

முற்றும் தீரும் வார்த்தை
முழுதாய் வற்றும் முன்
சற்றும் தாமதம் தள்ளி
உன் விழியருகில்

கனவென்று ஒருதரம்
கைநுனி கிள்ளி
காதலில் பல தரம்
கால்நுனி கீறி
வெட்கத்தில் இருதரம்
நாநுனி கடித்து

மண்பார்த்து தலை தூக்கி
முகம் பார்த்து நாணம் கொள்ளில்
கை நகம் கடித்து


அமுதமான உன் காத்திருப்பு
அழகாய் சொல்லியது
இருவிழி நதியோடி
என் கால் தனை தொட்ட
உன் கண்கள் எடுத்த ஊற்று

கட்டியனத்த தழுவலில்
கரைந்தது காதல்
மறைந்தது நினைவு

காலை தலயணை ஈரமாய்

அமுதமான காத்திரிப்பு தொடர்கிறது
என்றும் உலராத உன் தலையனையோடு

ஜீவனாய் என் கவி தொடர்கிறது
ஜன்னலில் ஒழிந்திருக்கும் உன் முகம்தேடி...

தலையணையோடாவது பேசுகிறது உன் கண்ணீர்
மௌனித்திருக்கும் நான் உன் மடி சாயும்வரை மட்டுமே...

Friday, 7 August 2009

ஆன்ம கலவி முத்தம்




அந்த ஒரு முத்தம்
அமிர்தம் இடை வெளி
மௌனம் முழு மொழி
அர்த்தம் நால்வையில்
நாணம் உயிர்வரை

அந்த ஒரு சேர்தல்
செவ்விதழ் இணைதலில்
இவ்மொழி உணர்தலில்
தேன் கல தேவமிர்தம்
வாய் வழி தொடுதலில்

அந்த ஒரு சிலிர்ப்பு
மெல்லின மேனியில்
சில்லென இலக்கணத்தில்
வல்லின தீண்டல்
ஆன்மா வரை ஃ ம்

அந்த ஒரு மோகம்
ஆதியந்த சலனமத்தில்
உணர்வின் கானம்
நாடியின் தீ
உயிரத்தலில் மரணம்

அந்த ஒரு வெட்கம்
ஆடைவரை தட்பமத்தில்
நான் மறை வேதமும்
ஐம்புல ஓசையும்
கற்ப்பிக்கும் பிரம்மம்

அந்த ஒரு நொடி
இரு ஜீவா பிரளயத்தில்
தலைவன் மடி சாய்தலில்
தலைவி குழல் கலைதலில்
பிறப்பிக்கும் ஜென்மம்

அந்த ஒரு ஆசை
விடைபெற்ற வெட்கத்தில்
தேவ கலச உண்ணலில்
உதடுகள் ததும்பலில்
இதயம் முவ்வுலகில்

அந்த ஒரு பரிமாறல்
சொர்க்கம் வழங்கும் மழையதில்
உச்சி தொட்ட வியர்வையது
உடல் வரை துளிர்ப்பதில்
ஆயிரசூரியன் உதிர எரிக்கை

அந்த ஒரு தருணம்
உடல் முழுதில் தகணித்து
ஏன் என்ற இதய கேள்வியில்
எது என்ற கல மோதலில்
எவை என்ற நாள அழிதலில்
ஆன்மாக்கள் இரண்டும்

நாம நாண ஐம்புல ஐஸ்வர்யா
காம கலச கன்னிக வாத்ஸ்யாயன
மன ஆன்ம ஆத்மசம்யுக்த சொர்க்கம்

நமக நமக உயிர் உருகும் உன் உடல்தனில்
மெய் உருகி பிரம்மம் இணையும் எம்
தேக ஸ்ப்ரிஸமதில் நமக நமக

Thursday, 9 July 2009

வானொலியில் மறுபக்கம் வீணாய்போகும் திறமைகளாய்......

வானலைகளில் ஒரு தடவையேனும் தங்கள் குரலை ஒலிக்கச்செய்ய, திறமைகளை கையில் வைத்து நீண்ட கால போராட்டத்தோடு, பல அறிவிப்பு பயிர்சிக்கலூரிகளில் காலத்தோடு பணத்தையும், கனவுகளோடு வாழ்கையையும் விரயமாக்கும் என் அன்பு சகாக்களுக்கு, சில கசப்பான உண்மைகளோடு ஒரு கடிதம்





வணக்கம் தோழரே

ஆரம்ப கால தனியார் வானொலிகளின் தீவிர ரசிகன் நான், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, அவற்றின் தரம், இளவயதில் ஆர்வம் ஆற்றல் மிக்க அறிவிப்பாளர்கள் என தனியார் வானொலிகளின் வருகை இலங்கையின் வானலைகளை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல ஊடகங்களையும் திரும்பிப்பார்க்கச்செய்த காலமது. சூரியன் சக்தி ஒருவருக்கொருவர் சலைத்தவரல்லர் என நிகழ்சிகளை பரிமாறிக்கொண்ட காலம்.

வானொலி வரலாற்றில் புதிய சாதனை என இவ்விரண்டு வானொலிகளின் வருகையை பெருமையோடு சொல்லலாம். மிக முக்கியமாக நிகழ்ச்சி வழங்கும் அறிவிப்பாளர்களின் திறமையும் நிகழ்ச்சி கொண்டிருக்கும் பொருளும், அதுவரை காலமும் இலங்கை வானலை கண்டிராத புதுமைகளை காணச்செய்தது என்று குறிப்பிட்டால் பொருத்தமானது.

அதுவரை காலமும் வெறுமனவே பாடல்கள், ஏதோ ஒண்டிரண்டு விவாதம், இது போக சிறுவர் நிகழ்ச்சி, ஒரு சில அரசியல் கலந்துரையாடல், இல்லையென்றால் மங்கையர் நிகழ்ச்சி என நேயர்கள் தொடமுடியாத தர எல்லையோடு நிகழ்ச்சிகள் வழங்குவோமென இளைய தலைமுறை அறிவிப்பையும் திறமையையும் குறுகிய வட்டத்துக்குள் நிறுத்திய ஒரு சில வானலைகளுக்கு எங்கள் நட்பு அறிவிப்பாளர்கள் கொடுத்தது சரியான அடி.

ஒரு நிகழ்ச்சியில் நேயர்களின் பங்களிப்பு எவ்வளவு, எதன் அடிப்படையில் நேயர்கள் நிகழ்ச்சிகளோடு ஒன்றிணைவார்கள், சக நண்பர்களோடு பேசுவது போல நேயர்களோடு பேசும் வழக்கம் வானொலிகளில் நுழைய இப்படியும் நிகழ்ச்சிகளை தொகுக்கலாம் என அறிந்து கொண்டது பல வானலைகள்.


இத்தனை பல சாதனைகளோடு களமிறங்கிய இலங்கையின் தனியார் வானொலிகள் காலப்போக்கில் அரசியல் பொருளாதார வியாபார கணக்கோடு தரம் மாறியதும், பல அறிப்பளர்களின் திறமைகளிலும் ஊடக சுதந்திரங்களிலும் முகாமைத்துவம் தலையிட்டதும், ஒருசில திறமையான அறிப்பாளர்களை இலங்கை தமிழ் வானொலிகள் இழக்க காரணமாய் அமைந்தன மிக வருந்தத்தக்க விடயமாகியது.

இதேபோல் மிக திறமையோடு அறிவிப்புத் துறைக்கு வந்த பல இளம் அறிவிப்பாளர்கள், ஊடகங்களின் சுதந்திரங்கள் தங்கள் திறமைகளுக்கு தடையானவை என்றும், வானொலிகள் வெறுமனவே பிரபல்யங்களுக்கு மட்டுமே, இன்றைய சூழலில் தங்கள் பொருளாதார நிலைமைகளை மாற்றி அமைக்க அறிவிப்புத்துரையை ஒரு ஊதிய தொழிலாக கொள்ளமுடியதெனவும் உணர்ந்தவிடத்து, பல சிறந்த அறிவிப்பாளர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை வானொலிகளுக்கு ஏற்ப்பட்டது என்பது உண்மையின் கசப்புக்கள், இருந்தும் இந்த விடயங்களில் எந்தளவு உண்மை இருக்கின்றதென்பது இன்னமும் வானொலி முகாமைதுவமிடமிருக்கும் சிதம்பர ரகசியங்கள்.

இன்றும் வானலைகளில் தங்கள் குரலை ஒரு அறிவிப்பாளராக ஒலிக்கச் செய்ய காத்திருக்கும் என் அன்பிலும் மேலான தோழர்களுக்கு வானொலி என்பது உங்கள் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு ஊடகம் நீங்கள் நேயர்களாய் இருக்கும் வரை, அதுவே உங்களை வானொலி அறிவிப்பாலனாக்கின் நீங்கள் அத்தனை கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்ட ஒரு தொழிலாளி மட்டுமே. உங்கள் திறமைகளுக்கு களம் எதுவென கண்டறியவேண்டியவர்கள் நீங்களே.

தோழமையுடன்
ரஜீவன்

Wednesday, 8 July 2009

உனக்குள் நீயே பெண்ணே




உன் மரபுகள் மாற்றுகையில்
மருபுள்ளியில் மனிதம் தேடுகிறது
கலாச்சாரம்


உன் மை விழிகூட
கரையாமல் கண்ணீர் சிந்துகிறது
நாகரீகம்

குனிந்து கிடக்கும் தலைதூக்கி
உன் விம்பம் பார்க்கச்செய்கிறது
நிழல் நீ என நிலம் பார்க்கையில்
நிஜம் எதுவென ஆகாயம் தொடச்செய்கிறது
ஏளனம் ஏமாற்றம் முடிவை தருகையில் முக்கால
முடிவென பெருமிதம் காண்கிறது
ஆணினமே வணக்கம் நாகரீகப்
பெண்களிடம் நீ காட்டும் பண்பிற்கு

சீதனம் கள்ளிப்பால் சிலேடை
அடக்குமுறை சுயசிந்தனை தொழில்
ஒருகால் பேச்சு ஒருகை சுதந்திரம்
வரைமுறை தாலி ஐயோ பாவம்
அரைநூரண்டுகளாய் ஆண் மேல் குற்றம்

சீதனம் அம்மாவிற்கு
அவசரமாய் சமஞ்ச அக்கா விற்கு
அப்படியே அடுத்து சமயும் தங்கைக்கு
எடுத்த பிடியில் ஒரு கை கூடயில்லை
ஏதோ ஒரு மோட்டாரில் உல்லாச பயணம்
பாவம் சுமந்து பழி கொண்டு

கள்ளிப்பால் கையிலில்லை
கையிருப்போடு கணக்குப்போடும்
சாயங்கால முற்றம் விலை பேசும்
பெண்ணின் கற்புக்கு

அடியே பாக்கியம் பக்கத்து வீட்டு
அம்புஜம் பொண்ணு போறாளாம்
வேலைக்கு
போற இடத்தில
பல் துளக்கிக்கு விளம்பரம்மாம்
வியாபாரி பேசாமலா இருப் பான்
விலை

ஊரு சொல்லுது ஊரு வாய்
அத்தனைக்கும் வித்துக்கள்
மணி மணி முத்துக்கள்
எங்கள் வீட்டு அடுப்பங்கரைகள்
பத்தியம் மட்டும் பாவமாய் போன
வீட்டு எஜமான்கள்

பாவாடையில் முடிஞ்சுவெச்ச பத்து காசு
பாளையத்தம்மனுக்கு நேன்துவேச்சு
கடாவெட்டிப் பொங்கள்...
பக்கத்து வீட்டு பசிச்சவாயிறு
பரவாயில காயட்டும்..
அவுசாரி பட்டம் சொல் கொடுக்க
ஒருவாய் சோறில்லா கை கொடுக்க

உன் விதிமுறைகளில் வழுவில்லை
உன் விடுதலையில் காரணமில்லை
ஏதோ கொடுக்க ஏதோ வாங்க
வந்து விட்டது பெண் விடுதலை

உடல் உள்ளம் உனக்கென செதுக்கப்பட்டது
ஆண் வேறு பெண் வேறு
அடிமைத்தனம் இதுவல்ல

பருவங்களின் வெளிப்பாடு பொதுவானது
தாய்மை புட்டிப்பால்
நாகரீகம் இதுவல்ல

கடின உழைப்பு
கருவோடு அலங்காரம்
அடிக்கடி சண்டை
அவசர முடிவு

தாய்மயில்லா பெண்மை
தலைமுடியில்லா கூந்தல்
அணைப்பில்லா படுக்கை
அவசிய தீண்டல்
பொறுப்பில்லா கல்வி
பொருமையில்லா மனை
கட்டவிழ்த்த சுதந்திரம்
கற்பு கடைவீதி
ஆசையில் ஆட்சி
அரியணையில் மூடநம்பிக்கை

அவ்வப்போது இடையூறு
ஐயயோ ஆணாதிக்கம்

இத்தனையும் கொடுப்பவனே
பண்ணுகிறான் ஆணாதிக்கம்

உண்மையில் பெண்மையை
உணர்திலன் அவனே

உடலோடு உள்ளமும்
பெண்மையை உணர்தவன்
காப்பான் என்றும்
மரபுகள் மாறது
இது என்ன பெண் அடிமையா?
ஆண் ஆதிக்கமா?

Monday, 6 July 2009

பனையோடு விளையாடி... அத்தியாயம் 5



எழவு விழுந்த வீடும் ஓரவு முறிஞ்ச வீடும் ஒன்னென்னு சொல்லுவாக ஊருக்குள்ள, ரெண்டிதிளையும் கண்ணக்கசக்கீட்டு ஊரே கூடிநிக்கும், என்ன ஒன்னு எழவு வீடின்ன ஒரவ முரிச்சவக கூட கடசியப் போர, உசிரப் பிரிஞ்ச வெறும் ஒடம்புக்கு மரியதக்கென்னச்சும் வருவாக, ஓரவு முறிஞ்சா முறிஞ்ச ஓரவவோட சேந்தவாக கூட வாழுற உசிரிட மூஞ்சேல கூட முளிக்கமாட்டக,

விழுந்தது எழவு அதுலயும் ஊருப் பெரிசு சிவப்பியோட அக்கா புருஷன், என்ன தான் ஒரவ வெட்டி தள்ளி இருந்தாலும், புருசனைப் பிரிஞ்சு ஒத்தையில வந்து நிக்கிறா ராசம்மா, ஆறுதல் சொல்லவும் மனசத்தேத்தவும் ஒன்னுக்கு ரெண்டு சனம் வந்தாத்தானே தாயிக்கு மனசு ஆறுதலடையும், சேதி கேட்ட சனமெல்லாம் ஆளுக்கொரு நடபோட்டு சூரியனோட வந்துசேரயில தூங்காமக்கிடந்த ராசம்மா மூஞ்சயில ஈ கூட ஆடல.

காலைக்கு பட்டிநிப்பண்டம் நானெண்டு சொல்லிவெச்சு, அரிசிமா இடியப்பத்தோட ரெண்டு தேங்க புழிஞ்சு வெச்ச பால் சொதியாயும் கொண்டுவந்து உள்ளவெச்சிட்டு மங்கமாட்ட ஒரு வர்த்த சொல்லீட்டு ராசம்மக்கு ஆறுதல் சொல்லப்போகயில கூட நிண்ட கிழவிகள் கூட்டம் சேருது இந்திரி யோட சேர்ந்து ஒப்பாரிக்கு,

எழவு விழுந்த வீட்டுக்கு ஒப்பாரி வெக்கவெண்டே ஊருக்குள்ள கூட்டமிருக்கும், ஒன்னாக்கூடிநின்னு போன உசிரு பண்ணினதயெல்லாம் பாட்டப் படிப்பாக, கலியாண வீடெண்டா மஞ்சள் குங்குமத்தோட வரவேக்கிற சனம் ஏழவின்ன வெப்பாக ஒப்பாரி, வார சனம் வரையில நின்ன ஒப்பாரி மறுபடி தொடங்கிடும்

எதுக்கு வந்தாயிங்க ஏன் வந்தாயிங்க
மாமன் இருக்கானோன்னு பாத்தியோ
இல்ல அத்தயிட கோலம் பாத்தியோ
கண்ணால காணலயே கடசியில ஒன் முகத்த
ஆனாலும் நிக்கிறியே எண்ட நெஞ்சுக்குள்ள
கடசியில போகயில புகையில குடுத்தியே
பாடையில போவியின்னு சொல்லீட்டுப்போகலையே

வார சனத்தோட ஒப்பாரிவெக்கயில சொல்லியனுப்பின சனத்தோட சொல்லிக்காம வருது ஊரு.

"பாத்துக்க ஒடம்பு கூடயில்லயென்னு பாடையில போறவனுக டயரக் கொளுத்தி எரிச்சிடானுகலாம்"
உள்ள போயி ஆறுதல் சொல்லி வீட்டிட தாழ்வாரத்தில தல படாம வந்த செல்லக்கண்ணு சொல்லிக்கொண்டே வெளியவர, எழவு வீட்டில ஒப்பாரியையும் மிஞ்சுது சனங்கலிட பேச்சு.

"மட்டுமுனயில நடந்த கலவரத்தில ராசம்மா புருஷன் சுந்தரத்த நடுரோட்டில சுட்டு பிணம் கூட சட்ச்சியில்லமா ஏறிச்சுப்போட்டணுகள் படுபாவியல், உவ ராசம்மா புள்ளயல் ரெண்டையும் கூட்டிட்டு வந்திருக்க யின்க, என்னதான் செய்யப்போகுதோ ஒத்த மனுசியா, அதுவும் ரெண்டும் சமயப்போரதுகள்"

சிவப்பியரிட கவலையெல்லாம் ரசம்மவ பத்தினதுதான், திண்ணயில கிடந்திருந்து ஆறுதல் சொல்லவும் வழியில்லாம வாரவ போரவயளிட்ட உலரிக்கிடக்கிராறு.

எழவென்னு வந்தாலே போனவன விட்டிட்டு, இழந்த சனத்துக்கு நாலு ஆறுதல் வார்த்த சொல்லணும், உது தானே எங்க ஊரு வழக்கம். செல்லத்தாயி சொல்றதும் உதத்தான், வந்தமா கடமைக்கு போனமா என்டில்லமா, எழவுவீட்டில நிண்டு நாலு ஆறுதல் சொன்னாதானே இழந்த சனத்திட மனசாரும்.

வந்தவக எல்லாம் பேச்சுக்கில்லமா ராசம்மாக்கு சமாதானம் சொல்லிப்போரக, என்னதான் சொன்னாலும், லாடம் கட்டின மாட்டுக்கு பரிதிக்கொட்டையும் புண்ணாக்கும் அள்ளி அள்ளி வெச்சாலும் வலி என்னமோ மாட்டுக்குத் தானே.

வெளிச்சம் ஓடிப்போறேங்க நெலவு விடமாட்டேங்க, இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் போராட்டம் அந்த பௌர்ணமி சாயங்காலம், சனம் கொஞ்சம் கொரயாக்கிடக்கயில வருது சேதி கேட்ட வேம்படி சனங்க, முடிஞ்ச ஒப்பாரி மறுபடி தொடங்குது.

வேம்படிப்பவளக்கொடி சிவப்பியோட அம்மாவோட கூடப்பிறந்தவன கட்டிக்கிட்டவ, சிவப்பியருக்கும் ராசம்மக்கும் அத்த முறவேணும், இவக புள்ள அம்பலத்தார் அந்தக்காலத்திலயே வெளிநாடு போயி படிச்சவர், அவனுக்குத்தான் ராசம்மாவ குடுக்கிறதா பேச்சிருந்திச்சு, இடையில எல்லாம் மாறிப்போச்சு.

என்ன ஒரு பதினெட்டு வருசமிருக்கும், சிவப்பியோட அம்மா உசிரோடயிருந்த நேரம், தம்பியிட புள்ளக நாலிடத்தில போயி வம்சம் அடியோட அழியக்கூடதின்னு பவளக்கொடியோட கூடிப்பேசி சம்மந்தத்துக்கும் ஏற்ப்பாடு செஞ்சாங்க, பாவி மகள கேக்காம செஞ்சதுதான் தப்பா போயிருச்சு.

இந்த ஊரிலேயே எவளுக்குமேயில்லாத செவத்த தோல் ராசம்மாவுக்கு, அழகின்ன அழகு கொள்ளயழகு, அவ அழகப்பாக்கவென்னே குழந்தெல இருந்து கொமரன் வர வேலீக்க கேடப்பாக ஆனா இவ மட்டும் குனிஞ்ச தல நிமிர மாட்ட அப்பிடியொரு புள்ளைய எவன் தான் மனசக் கெடுத்தானோ

அப்பதான் ஆறு மாசத்துக்கு முன்னாடி விவசாயத்தில ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு, இந்த ஊரில விளயுரதுகல ஆராச்சி செஞ்சு அனுப்புரதுகெண்டு அரசாங்கம் அனுப்பிவேச்சுது சுந்தரத்த, கிடக்கிற பொரம்போக்கு நிலத்தில மண்ண சோதிச்சு பயிர வெக்கிரதில பயல அடிக்க ஒருத்தநில்ல எல்லேக்க அவ்வளவு கெட்டிக்காரன், இதனாலேயே ஊருக்க வந்த மூனே நாலேக்க இருக்கிற பெரிகிகளிட்டயெல்லாம் நல்லபெயரெடுத்திட்டான் சுந்தரம்.

ஆள் பாக்கிறதுக்கு கருப்பயிருந்தாலும் ஊருக்க எவனிடயுமில்லாத படிப்பும் ஒடம்பும் இவன்கிட்ட, சாயங்காலம் சைகிள்ல ஏறி ரெண்டு மிதிமிதிசு சந்துகல கடக்கயில ஊருப்பாட்டியெல்லாம் பாரதிராஜா ஹீரோண்டு கிண்டலடிக்க, வயசுப்பொண்னுகலேல்லாம் வாயப்பிளந்து பாப்பாக அப்பிடி ஒரு வசிய கண்ணு அவனுக்கு

நாள் போகிது சைக்கிள் கடக்கிது அடிக்கடி சிவப்பியர் வீட்டு படலையில மணிச்சத்தம், சைக்கிளோட சேர்ந்து கால் கொலுசு போடுது தாளம்.

பாத்துக்கிடதில பேசிக்கிட்டத்தில்ல இருந்தும் மனசுகிடந்து அடிச்சிக்கும் அந்த சாயங்கால ஆறரை மணிக்கு, சுந்தரத்தபத்தி ஊரு பேசுரதிலையும் ராசம்மா அழகப் பத்தி பெடியங்கள் கதக்கிரதிளையும் பூத்தது இந்த படலக்காதல்.

ஆறரை மணி கேக்கப்போகிது சைக்கிள் சத்தம் வரப்போகிது ,வழமயா முடக்கில சைககிள் திரும்பயில மணி தான அடிச்சுக்கும் வாறன் வாரனென்டு. அண்டைக்கு சத்தமில்ல மணியும் ஏழுக்கு பத்து குசுனிப்படியில குத்தவெச்சு உக்காந்தது தரயில கிடந்த தாவனிஎடுத்து நெத்திப்பூவ துடைச்சு மறுபடி மணியப்பாத்திட்டு கால் நடக்குது படலயப்பாத்து

ராசம்மா இதுவர அனுபவிச்சதில்ல இப்பிடியொரு தவிப்பா, அவனுக்கு நானேன் காத்திருக்கோனும் முகத்த வெட்டி எச்சி முழுங்கி தனக்குள்ளேயே கேட்டாவு, காத்திருக்கிற காதலீக்க இவ மட்டும் விதிவிலக்கா.

கொலுசுசத்தம் கேக்கயில படலயிட விழிம்போட வருது கை உள்ள, கையோட கிடக்குது காகித கடிதம், எதிர்பாத்த மணிச்சத்தம் கூடவேகேக்கிது.

மெல்ல கடிதம் விழ, வளையல் கை கடிதம் தாங்க, ஒட்டவிளுந்த வேலிக்க ஓரசிக்குது கண்ணுக மட்டும், தாவணி தெரியல வளையல் காணல கொலுசு பாக்கல முஞ்சி விளங்கல கண்ணு மட்டும் பேசுது ஓலையில கிடந்த விருசல் வழியா

கடிதத்த விரிச்சுப்படிச்சு சேதி அறிஞ்சு கால்கொலுசு சொல்லுது சம்மதம், சைக்கிள் மணி யடிக்குது மகிழ்ச்சியில

என் உசிர் ராசம்மாக்கு,

நான் சுந்தரம், என்னப்பத்தி நீ என்னவிட அதிகம் அறிஞ்சிருப்ப தெரிஞ்சிருப்ப, ஒன்ன நான் அடிக்கடி பாக்கிறன் பேசிறன் என் கனவில மட்டுமா, ஊரு பேசிரதிலயோ இல்ல பருவ மோகத்திலயோ உன்ன நான் காதலிக்கல, என் வருகைக்கு காத்திருந்து உன் கொலுசு அனுப்பிற தூதுக்கு நாளுக்கு நாள் உன் மௌனமும் காத்திருப்புமா உன்ன யென் இதயத்தில நெரந்தரமா இருக்கச்சென்சது.

காதல் கூடி உன்ன கைப்பிடிக்க காத்திருக்கி்றன், ஒருமுறை உன் தரிசனம் கிட்ட பிளாவடிப்பிளையார் கோயில்ல காத்திருப்பன் நாள சாயங்காலம்.

என்றும் உன்னினைவாய் வாழும்
சுந்தரம்

கால் கொலுசு போட்ட சத்தம் இந்த கடித்த்துக்குத்தான்,

சாமியக்கும்பிர்ரமாதிரி நாலு சுத்து சுத்தி மணி அடிச்சிட்டு சைக்கிள் கிளம்பிது

சம்மதம் கொலுசு சொல்லியும் ராத்திரியோட போராட்டம் ராசம்மாக்கு, தூங்காமா கிடக்கிறது விளக்கு மட்டுமில்ல ராசம்மகவும்தான்,

அவன எப்பிடிப்பாக்கிறது? பாக்கலாமா? பேசலாமா? பலகலாம? இது முடிய அவன் எப்பிடியிருப்பான்னு இல்லாத அவன்கூட வெக்கப்பட்டு பக்கத்தில கிடந்த வெளக்கிட்ட பேசீட்டு கண்னயரயில பக்கத்து வீட்டுகோழி பாட்டுப்பாடிக் கூவிச்சு.


காலையில இருந்து மணிக்கொருமுற மணிபாத்தும் நாளிகயாகல சாயங்காலத்துக்கு, நாளுமுற தாவணிமாத்தி முனுமுறை தலசீவி முப்பதுதரம் கண்ணாடி பாத்து ரெண்டுமுற பொட்டு வெச்சு கடசிய பூவ தலையில வெக்கயில சாயங்காலப் பூசைக்கு விநாயகர் துதி பாடிச்சு கோயில் ஒலிபெருக்கி.

அவசரமா பூசத்தட்டெடுத்து கிளம்பயில காலிலயிருந்து உச்சிவர தொடுது வெக்கம், கால் நடக்கல கை அசயல மனசு பேசல அவ மட்டும் போற வீதிய பாத்து. கோயில் சேருது, நெஞ்சு அடிக்கிது, தேடாம தேடுது கண்ணுக, கோயில் வீதி கடவீதி உள்வீதி கண்ணோட காலும் சுத்தி கர்ப்பக்கிரம்வந்து சாமி பூசசெஞ்சு கண்ணமூடி கன் விழிச்சுப்பாக்கயில நெத்திதிருநீரோட நிண்டான் சுந்தரம்.

ராசம்மா பாக்கல இவன்தான் சுந்தரமெண்டு அறிஞ்சத சொல்லிச்சு கொலுசோட சேர்ந்து கால் விரல் நுனி போட்ட கோலம். பேசல குனிஞ்ச தலயில ஒருஅசைவில்லமா கண்னிம அசஞ்சு குடுக்க கண்மட்டும் பாத்திச்சு சுந்தரத்த, விளக்கோட சொன்ன அழகுதான்,

நெத்தியில விழுற முடி, அளவான உடம்பு, கவர்ச்சியான மீசேக்க களவா ஒரு சிரிப்பு, ராசம்மவ வெச்ச கண்ணு வெட்டமலே பாத்துநின்னு காலம் பூர ரசிக்கிற அழக கண்ணுக்குள்ள கொஞ்சமா பதிய வெச்சிட்டு கிட்டப்போகயில.

வீசி நின்ன கையெடுத்து ஒருவிரல் மட்டும்நீட்டி இல்லாத நகத்த ஒரு கடிகடிச்சு முழுசா ஒரு பார்வ பாத்திட்டு சின்னதா ஒரு வெட்டு வெட்டி சிரிப்போட துள்ளி ஓடின ராசம்மா.

சொல்லுற காதல விட புரியிற காதலுக்குத்தான் உணர்வு அதிகமென்னு எங்கேயோ படிச்ச ஞாபகத்தில, புரிஞ்சுட்டு கும்பிட்டு சைக்கில் போகுது ராசம்மா வழி பாத்து.

"ராசம்மா கொஞ்சம் நில்லு" சுந்தரம் முனுங்க, மனசு நில்லேங்க கால் நிக்கமாட்டேங்க காலில வீச்சு கூடுது ராசம்மாக்கு.

மறுபடி மறுபடி ஒரே பேச்சு ஒரே மௌனம் ஒரே வேகம்

சைக்கிள்ட வேகம் கூட்டி முன்னால வந்து நிண்டு ராசம்மவப்பாத்து காதல் சொல்லயில கண்ணுரெண்டும் பேசுது கண்ணீரில

ஏய் ராசம்மா யென் அழுற, என்னப்பிடிக்கலையா?
பதில் இல்ல
சொல்லு பிள்ள என்னப்பிடிகலயா?
கண்ணீரோட மௌனம் மறுபடி
சரி நான் போகட்ட?
கொலுசு சொல்லுது பதில்

அத்தனைக்கும் ஒரே பதில் கொலுசில புரியுது சுந்தரத்துக்கு,
"நாளைக்கே வாறன் உன்ன பொண்ணு கேட்டு"
பதில சொல்லி சைக்கிள் திரும்பல கொலுசோட சேந்து வளையலும் சொல்லுது ராசம்மாட மனச.

ஊருக்க ஒருத்தநில்ல சொந்தமெண்டு தானே சீரெடுத்து தானே சிங்காரிச்சு தானே தனக்கு பொண்ணு கேக்கவேன்னு கிளம்பினான் சிவப்பியர் வீட்டப்பாத்து

ஊருக்க ஒருத்தநில்ல சொந்தமெண்டு தானே தட்டெடுத்து சீர் செஞ்சு, தன்னத்தானே அழகுசெஞ்சு, கோயில் பக்கம் போய் ஒரு கும்பிடு போட்டு சிவப்பியர் வீட்டப்பாத்து நடக்கிறான் தனக்குத் தானே பொண்ணு கேக்க.

நெஞ்சில பயமில்ல எதுக்கும் துணிஞ்சவன், சின்ன வயசில இருந்து வெளியூரில படிச்சதால எல்லாம் தனியவே செஞ்சுக்க பழகீட்டான் சுந்தரம், அதுக்காக பொண்ணு கேக்கவுமா?

வந்த சேதியரியாம வந்தவனுக்கு வரவேப்பு குடும்பம் சகிதம் வாசலில, உள்ள போயி உக்காரச்சொல்லி உபசாரம் செய்யயில, வீடே கூடி நிக்குது, அடுப்படீல நின்ன ராசம்மக்கு அர உசிரு போகுது,

திண்ணயில சிவப்பீட மாமா, உள்ள சிவப்பியும் சுந்தரமும், சிவப்பிட அம்மாவும் பவளக்கொடியும் வாசலில காலமடிச்சு சப்பனான்கொட்டி, பேச்ச தொடக்கிராக சிவப்பியோட அம்மா,

"என்ன தம்பி எதாச்சும் விசேசமா" பழத்தட்டோட வந்திருக்கீங்க மடிச்சு வெச்ச வேத்திலேல ஒருபாதி உனக்கென்னு பவளக்கொடிக்கு ஒரு கை நீட்டி மறுகை வாய்க்குள்ள போட்டு மேலயும் கீழயும் மென்னு அரக்கயில சிவப்பு எச்சி கொஞ்சம் எட்டிப்பாக்குது வாய் வழியா.

ஆமாங்க பட்டும் படாமலும் ஒரு பதில சொல்லீட்டு மரத்தில தொங்கிற கொவ்வக்க மாதிரி தலய தொங்கப்போட்டன்.

வந்தது என்னோமோ வீரமாத்தான், பேச்ச எங்க ஆரம்பிக்கிறது எப்பிடி தொடங்கிறது ஒண்ணுமே புரியல அறியல,

குசுனீக்கயிருந்த மங்கம்மாவ பவ்வியமா கூப்பிட்டு வந்தவனுக்கு குடிக்க எதாச்சும் கொண்டுவரச்சொல்லி மறுபடி குசுனீக்க அனுப்பீட்டு பேச்ச தொட்ர்ராறு சிவப்பி.

வந்த பேச்ச விட்டு ஊர்கத உறவுக்கத பேச வந்து சேருது மோர்,

திண்ணயில இருந்த மாமனாருக்கு பொறுக்கல
தம்பி வந்த விசயத்த பொசுக்கெனு சொல்லிடுப்பா பொறுக்கல,

மறுபடி கேக்க உள்ளயிருந்த கொலுசு சொல்லுது சம்மதம்

வார்த்த வருது கொஞ்சமா
"உங்க வீட்டு ராசம்மவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, என்னப்பத்தி உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும், உங்களுக்கு சம்மதமான்னு தட்டு மாத்திக்கத்தான்..."
ஒரே மூச்சில சொல்லி முடிச்சிட்டு கடசி வார்த்தயில தடுமாற, கொதிச்சு போயி எழுற ராசம்மா அம்மா

"என்ன நெஞ்சளுத்தமிருந்தா எங்க வீட்டுப்பொண்ண கேட்டு வீட்டு வாசல் மிதிச்சிருப்ப, என்ன குலமேட நீ, மட்டுமுனக்காரனுக்கு பொண்ணு குடுக்கிற அளவுக்கு எங்க சாதி ஒன்னும் கோரஞ்சுபோயிலட.."

வார்த்த தடிக்குது, சத்தம் கேக்குது ஊர் எல்லேக்கையே, பேச்சு முத்திப்போயி சுந்தரத்த கை ஒங்கயில ஊர் தடுக்குது சிவப்பியே.

ஊரே சேந்து மட்டுமுனக்காரநெண்டு அவமானப்படுத்தியும், ஒத்த வார்த்த சொல்லல ராசம்மா பத்தி,

தைரியமில்லாத கொழாயடி நீ மனசாட்சி உறுத்துது, எத்தன அவமானம் அதனையும் உனக்கா தாங்கிக்கொண்டு ஊர விட்டு போறானே, முழுசா வந்திட்டான் மனசுக்க அழுத அழுத கண்நீரோட

நடந்தது தெரிஞ்சுக்காம, சுந்தரத்த ஊரவிட்டே துரத்தீட்டு அம்பலத்த பேசி முடிச்சாங்க அடுத்த நாளே,

மனசில ஒருத்தன நினச்சிட்டு இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்டுற ஈனப்பொலப்பு பொளக்கிற பொண்ணில்ல நானென்னு, சுந்தரத்திட விலாசத்த தேடிப்பிடிச்சு கடுதாசி போட்டு கலியாணத்துக்கு முதல் நாள் போயிட்ட அவன்கூடவே.

ஊரே பாத்து நிக்க தலகுனிஞ்ச சிவப்பி குடும்பத்த வாய்க்கு வந்தபடி திட்டு போனவ தான் இப்பதான் மிதிச்சிருக்கா இந்த வாசப்படிய.

என்னயிருந்தாலும் போனவ இப்பிடி ஒத்தையில வந்திருக்காலேன்னு பவளக்கொடி வர்த்தக்கெண்டில்லமா நெஞ்சார சொல்லுற நிம்மதி ராசம்மவ அணைச்சு.

என் மவன கட்டியிருந்த வெளிநாடென்டு சுத்தியிருப்ப, இப்ப ஒத்தைக்கு இல்லாம அழுவுற ன்னு மனசுக்குள்ளயே சோகத்த பாடிட்டு ஒன்னு ரெண்டு வார்த்த சொல்லயில, வந்த அழுக இன்னும் கூடுது ராசம்மக்கு.

மன்னிச்சிடு அத்தேன்னு மனசோட சொல்லீட்டு கட்டி அழுற பவளக்கொடிய.
என்னதான் வெட்டிக்கிட்டாலும் அருத்துக்கிட்டாலும் இந்தக் காதலெல்லாம் வெறுமையா வாழிராதுக்குத்தான், கிடக்கிற அன்பயெல்லாம் அத்திட்டு காதலிக்கிறதில எனக்கு உடன்பாடில்ல சொல்லுற செல்லத்தாய்க்கு காதலே வந்ததில்ல

ஊரப்பாக்கவும் ஓரவப்பாக்கவும் வெக்கப்படல கொஞ்சமமும், நெனச்சவனத்தானே கட்டிக்கிட்டேன், சாமிக்கும் சனத்துக்கும் தெரியுமிது, காதலிச்சவன மனசில நெனச்சிட்டு இன்னொருத்தன் கூட வாழ்க்க நடத்த நானென்ன அவுசாரிய, ஊருக்கு பதில் இப்படித்தான் சொன்ன.

சொன்னதில அர்த்தமுமிருக்கு, சுந்தரம் மேல அவ வெச்ச அன்புமிருக்கு.

வந்த சனம் சேர்ந்த சனம் எல்லாம் துக்கம் சொல்லிப்போகயில, உருவத்தம்மன் கோயில்ல இருந்து வருது சேதி.

அடி பட்ட மாட்ட அர ஏக்கர் உழ வெச்ச மாதிரி, சோகத்தில கிடக்கிற சனத்துக்கு நெஞ்சில விழுது இடி,

மட்டுமுனயில நடக்கிற சண்டைக்கு ஆள் வேணுமெண்டு உருவத்தம்மன் கோயில்ல நிண்ட மாணவர் அமப்பு பிள்ளங்க எல்லாம் போய்டுதுகள் சண்டைக்கு, போனவங்களோட உங்க சுகுமாரனும் போய்ட்டான்.

ஏற்க்கனவே ஒரு உசிர குடுத்திட்டு விருசலா நிக்கிற குடும்பத்தில ஓட்டைய போடுறாரு சேதி சொன்ன பொன்னயர்.

ஐயோ ஏன்டா ராசா, ஒரு காயம் பட்டாலே தாங்க மாட்டனே அவனா சண்டைக்கு போய்டான் ன்னு தலயில அடிச்சு அழுவயில, ஊரிட ஒவ்வொரு தெருவிலயும் கேக்கிது இந்த அழுகச்சத்தம்.

வானத்தோட போன பருந்தொன்னு தூக்குது கொழிக்குஞ்ச


இன்னும் விளையாடுவோம்.............

Friday, 3 July 2009

உன்ன தாங்கவே

வலிக்குதடி... தாலாட்டின் குரல் தொலைவு, அரவணைப்பின் மடி தூரம்; முதல் முத்த உதடுகள் அருகில்லா, அத்தனையும் தாண்டி..... உன் இதய தொடுதலில் என் உயிர் வாழும், உன் அணைப்பில் ஊர் உறவு தேடும், உன் வார்த்தையில் சோகம் கலைக்கும், அந்த சுகம் அருகில்லயேல் வலிக்குதடி..

Sunday, 21 June 2009

எது கொடை




காமம் இல் காதல் பேரு
கருவது கொடை

வலியின்றி புறம் தள்ளின்
சுகப்பிரசவமது கொடை

புவி யுணர் புலன் கொள்ளின்
உடலது கொடை

அனை புலன் இயக்கின்
உணர்வது கொடை

தாய் தந்தை உடன்பிறப்பு
இல்லத்தில் கொடை

தோழி தோழன் பகை
புறத்தோடு கொடை

தாய்பாலில் பாசமது
வளர்வது கொடை


தந்தையின் அணைப்பது
தைரியக் கொடை

இளமையில் கல்வி
அறிவியல் கொடை

பருவத்தில் காதல்
ஆனந்த கொடை

காதலில் மோகம்
கவர்ச்சியில் கொடை

மோகத்தில் சல்லாபம்
இலக்கிய கொடை

நல்ல துணை
வாழ்க்கையின் கொடை

நல் வரவு
குடும்பத்தின் கொடை

பிரிவில்லா பாசம்
கடை வரை கொடை

அன்பு மக்கள்
முதுமையில் கொடை

கொடை கொடை கொடை
மானிட பிறப்பில் எத்தனை கொடை

இத்தனையிருந்தும் கொடையெது
உனக்கு
மண்ணை தின்று நேயம் மறந்து
அலை திரி தொலை
செல்வம் என்னும் நிலையில் பொருள்

கடயது கொடையெது?
மானிடா.......

Saturday, 20 June 2009

பெண்ணே நீயா?




கலைந்த கூந்தல் கிழித்த நகக்கீறல்
தொலைந்த மோகம் அழித்த ஆசை
அலைந்த கண்கள் வலித்த தேகம்
மஞ்சனை கை குழுக்கள்
நட்புக்கு வருகை காதலுக்கு பிரியாவிடை

ஒரு நாள் பார்வை
ஒரு வார பேச்சு
ஒரு மாத மோகம்
ஒரு வரை தொடர்
இனி யென
ஒரு நாள் தீண்டல்
ஒரு வார சினுங்கள்
ஒரு மாத ஊடல்
ஒரு வரை கடத்தல்

தாயின் கருவறை கர்ப்பம்
சாமி கருவறை கர்ப்பக்கிரகம்
பெண்மையின் உணர்வு
கடவுளின் படைப்பு
மடியில் ஒரு கர்ப்பம்

தொலை வாழ்கை
கலை வாழ்க்கை
கல் வாழ்க்கை
தொடர் வாழ்கை

இன்பம் கருவென
மோகம் மழலையென
காமம் குழந்தையென
மடிதவழும் வெறும் கழுத்து

இல்லறம் வெறுமை
துறவறம் சாபம்
கன்னி கட்டாயம்
கற்ப்பு அறுவடை

ஆணும் பெண்ணும் சமத்துவம்
ஆடியில் முதல்மணம் நட்புக்கு
ஆடை தொலைத்தது ஞாபகம்
ஆறுதல் சொல்லும் கணீர் மட்டும்

விதி இல்லை
ஆதி தெரியாது
சாதி பெண்
சதி நாகரீகம்

உலகம் அலட்ச்சியம்
உறவு அறுத்து
ஊர் அவலட்ச்சணம்
ஊணம் அங்கம் மட்டும்

மனசு கற்ப்பு
உடல் மானம்
கற்பு? மானம்?
விடை எது
கடை வரை

அரை மணி மோகம்
அறை தனில் சாபம்
அடி யொடு புறம்
அகம் அது தவம்

ஒரு முறை கன்னி
வரை முறை அணுகி
மறை முறை மாற்றி
தொலை முறை பின்னி

பக்கம் நஞ்சு
பாசம் பிஞ்சு
தூக்கம் தூக்கு
தூவான அழுகை
கல்லறை வாசகம்
தொட்டில் ஆணை

பிள்ளை முகம்
முல்லை சோகம்
தொல்லை காதல்
இறுதி சபதம்

கொடுத்தவன் அப்பன்
காப்பவன் சுப்பன்
ஆள்பவன் அசுரன்
அரக்கனா ஆணினம்?

எடுத்த காப்பு
கொடுத்த சாமி
அடுத்த வாரிசு
அம்மா நீயில்லை

சொல்லாது தாய்மை
ஏற்காது பிள்ளை
அம்மா தாசி
மகன் சத்தியவான்

நீண்டநாள் சந்திப்பு
விபச்சார வழக்கு
குற்றவாளி அவள்
நீதவான் அவள்கரு

குற்றம் என்ன?
உடல் காசு
கல்வி நன்கொடைக்கு
ஆடை அவிழ்ப்பு
ஆவின் பாலுக்கு
மானம் தொலைப்பு
மகன் தோற்றத்திற்கு

மறுக்கப்படுகிறது நீதவானால்

தாய்மை தள்ளி
பிள்ளை பிரிவு
செவிலி வளர்ப்பு
உறவு மறைப்பு
குற்றங்களில் அடுத்தவை

அத்தனையும் மன்னிக்கப்பட்டு


சொன்ன சாபம்
செய்த பாவம்
இழந்த கற்ப்பு
தொலைத்த மானம்
அறுத்த உறவு
குற்றங்களில் தொடர்பவை

அடுத்தநொடி விடுதலை

சரி குற்றமென்ன
கருவறை கேட்க
தண்டனை முதல்
கரு சொல்ல
உயிர் விழ

இன்பம் மட்டும்
இணை சுகம்
நானா கரு
குற்றம் மென்கரு
தண்டனை நானே
அழி என்கரு

தாய் மடி
செய் சபதம்
கொள் பெண்மை
சும உன்கரு
இழ உன்பிள்ளை
ஈன்று கொலை
நீயே செய்

பெண் அடிமை
எப்போ உனக்கு
ஆணோடு போட்டிக்கா?
தாய்மை நீ
தவம் நீ
தெய்வம் நீ

ஆணோடு நீ சமமல்ல
அதனிலும் ஒருபடி மேல்

கற்பும் கடமையும்
உன்னோடு கட்டி
குணமும் புலனும்
உயிரோடு அடக்கி

பெண்ணென நீ
வழ்ந்திடின் வாழின்...

Monday, 8 June 2009

அவள்





முழுத்திங்கள் முகம் பதித்து
கண்களில் மின்னல் துளைத்து
செவ்விதழ் உதடுகலென
நீள்தண்டில் மூக்கின் அழகெடுத்து
அவள் எழில் ஓவியமாய்....

தோரணையென ஒற்றை ஜடை
பின்னலோடு பின்னழகு தொட
இளம்பருதியில் வழியும் நதியென
நேர்வகிடின் நெத்திப்பட்டம்
அவள் நெற்றிப்பொட்டை முத்தமிட....

கூந்தல் மல்லிகை வாசம்
உடல் சந்தன வாசம்
கைகள் மகரந்த கோலம்
கால்கள் கோலம் தொட்ட கொலுசு
அவள் நடையில் நடை பழகிடு அன்னம்....


மௌனங்கள் ஆயிரம் மொழியென
புல்லங்குழால் மெல்லிசை குரலென
காலைப்பனித்துளியில் ஞாயிறு வெட்கமென
மின்மின்னிக்காட்டில் தொட்டச்சினிங்கியென கண்சிமிட்டல்
அவள் ஆதி தொடர் அந்தம் சொல்லிடும் கலை....

மார்பு தொடும் நழுவலென சேலைத்தலைப்பொடு
முத்தமிடும் முத்துக்கள் மாலையாய் சண்டையிட
இடைதொடு தடம் பதித்த பாவடை நாடாவோடு
இடையில் கவிபடிக்கு ஒட்டியாணம் யுத்தம் செய்ய
அவள் ஆபரணம் தொடும் ஆடை நுனிகள்.....

காதுகள் ரகசியம் சொல்லி கன்னங்களை முத்தமிடும் தோடு
குரல்வளை கவிபாடி கழுத்தை கொலை செய்யும் மாலை
கால்கள் உன் துள்ளல் சொல்ல இசையமைக்கும் கொலுசு
கைகள் உன் மறைவை ஒழித்து நின்று ஒலியெலுப்பும் வளையல்
அவள் பூட்டிய நகைகளே நாணம் கொள்ளும் அவள் புன்னகை....

மார்கழி குளிரென அடிக்கடி சிலிர்ப்பு
மாங்காய் கடியென அடிக்கடி நாக்கு
காதல்வேதமென அடிக்கடி உச்சரிப்பு
காற்றோடு நாணலென அடிக்கடி நிலம்தேடி
அவள் உணர்வுகள் புரிந்த மெய்யென நான்...

துளிர் காட்டின் துள்ளலென மான்குட்டி
துப்பட்டாவில் இறக்கை விரித்த பட்டம் பூச்சி
தெளித்திடும் புன்னகையில் ஆயிரம் நச்சத்திரம்
சேலை நுனி தலை மறைக்க தோகை விரித்த மயில்
அவள் பிரம்மனின் கண்கள் வரை சித்திரம்....

கொடிபடர் மெல்லிடையவல்
கொஞ்சும் மழலையவள்
தத்திடும் பறவையவள்
கள்ளமில்லா புன்னகையவள்
கவிதை வெட்கமவள்
இயல்பில் அவள் அவள்..........

வெண்ணிலா அருகமர்ந்து
தூக்கம் தட்டியெலுப்பி
காற்றோடு கண் விழிக்கையில்
மெல்லிய புன்னகையோடு வழ்வுதொலைந்தது
அவள் முதல் முறை நெற்றி முத்தமிட்ட நிமிடம்......

தூக்கம் தலைதடுவ மெத்தையெனை
யழைக்க வாவென கனவு வர
மொத்தமாய் உன்னழகு தூக்கம் கெடுக்க
சட்டென கண்கள் கசக்க
அவள் தொலைந்த மணித்துளிகள் கசப்பென...

அன்றொருநாள் அந்திமழை சாரல் செய்ய
செல்லமாய் துளிகள் கூந்தல் நனைக்க
கோபமாய் நெற்றிவழி நீர் துடைக்க
கள்ளமாய் இதயம் கொடு என அவள் கேக்க
அவள் காதல் வரமென என் இதயம் கொள்ளை....

நதியென கூந்தல், நிலவென திலகம்
முகிலென ஆடை, உணர்வென வெட்கம்
உள்ளமென புன்னகை, அழகென சினுங்கள்
அறிவென மௌனம், காதலென தேடல்
அவள் அருகிருந்த நாட்கள் தொலைய...

கண்களில் பட்டும் கைகள் தொடாத புள்ளிமான்
துள்ளி ஓடும் தடம் பதியாத தனித்தீவு
பிரம்மனின் நிலவொளிச்சேர்க்கயின் சிற்பம்
அழகென உயிரெடுத்து அகிலம் வந்தது இவளென
அவள் தனிமையின் ரகசியம் எதுவென....

வில்லொடு புருவம் அவளது மீனென கண்கள்
அருகில் இருந்தும் அவள் தொலைவென சுவாசம்
ஒருகரை அவள் மறுகரை தொலைத்த நான்
தனிமை அவள் விரல் தொட்ட முத்தம்
அவள் கண்களில் மறையும் கானல் நீர் மட்டும் தான்.....

கானல் நீரில் நானொரு மீனவன்
கடை வரை தூண்டிலிட்டு
வானவில் வண்ணத்தில் நானொரு ஓவியன்
கடைவரை தூரிகையில் வண்ணம் தேடி
அவள் வானவில் வண்ணம் தீட்டிய தங்க மீனாய்..

Saturday, 6 June 2009

உன்னோடு என்ன?

ரஜீவனின்
உன்னோடு என்ன?





காதல்
திருமண மனமாற்றம்

கவிதை
சொல்லில் அடங்கா மொழி

உன் பெயர்
நினைவிலிருக்கும் ஒரு சொல்

நீ
ஒரேயொரு நான்

நான்
நீயில்லாத நீ

நாம்
கருவறை குழந்தை

வாழ்க்கை
உன் என் பரிமாற்றம்

நம்பிக்கை
உன் விரல்நுனி

அதிஷ்டம்
உன் முத்தம்

தோல்வி
உன் இடைவெளியில்

வாழ்த்து
உன் புன்னகை

கடிதம்
கண்கள் எழுதும் வார்த்தை

தூக்கம்
நீயில்லாததா?

கனவு
தினம் நல் வரவு

தலையனை
உன் முக விம்பம்

போ
அழைப்பு

வா
திண்டல்

தா
இதழ் சுவை

சொர்க்கம்
கேள்விக்குறி

நரகம்
வியப்புக்குறி

அறிவு
உன் காதல்

அறியாமை
உன் கோபம்

ஆதி
கட்டில்

அந்தம்
தொட்டில்

அரசியல்
நம் வீட்டு படுக்கயறை

அட்ச்சி
உன் ஆடை

தேர்தல்
நீ நான்

வாக்குகள்
நகக்குறி

வாக்குரிமை
ஒமோன்களுக்கு மட்டும்

கஞ்சா
ஒரு தடவை கெஞ்சல்

விபச்சாரம்
ஒருமுறை பலவந்தம்

காமம்
புத்தகம்

பொய்
அடிக்கடி உன் செவிகளில்

மெய்
செவிகளின் நம்பிக்கை

ஊடல்
பொய்களுக்கு பின்

கூடல்
உண்மையில் ஊடல்

இதயம்
அகத்தியன் படைப்பு

கடத்தல்
உன் பார்வை

உயிர்
உன் உதடு

மழாலை
உன் பேச்சு

மௌனம்
உன் வெட்கம்

ஓவியம்
ஒற்றை முடி

காவியம்
உடலில் பயின்று

தூரிகை
நாக்கின் நுனி

போராட்டம்
வாழ்வுக்கும் உனக்கும்

விடுதலை
பணம் மறந்து

இறுதி
நீ மட்டும்

Wednesday, 3 June 2009

பொய்யுரை



இதழ் ஓவியம் வரை காவியம்
நினை உன்விழி பார் என்கவி

பொய்யென உரைப்பது
காதலின் பக்குவம்
மெய்யென வளைவது
காமனின் இச்சகம்

வாழ்வென நினைப்பது
தேடலின் கற்பகம்
சாவென காண்பது
விதிதனின் முடிவகம்

பார்வைதனில் உயிர் வாழ்
சுவாசம்தனில் இணை காதல்
இதயந்தனில் குடி இல்
முறைதனில் பிரி மறை

வா வா வாழ்
சொல் சொல் காதல்
காண் காண் இல்
போ போ மறை


செவ்வினை செய்தொரு
முன்வினை பயனது
அவ்வினை சுடுதொரு
இவ்வினை கடயது

காதல் கொடியது
சாதல் இனிதது
மோதல் மடிவது
வாழ்தல் கனவது

தொடுதலில் வளைதனில்
வில்லது உவமை
தீண்டலில் நெளிதனில்
அரவமோடு ஒப்பு

மெய்யொடு மெய்யது
ஒப்பனை மேகம்
உயிரொடு உயிரது
காப்பது மோகம்

நின்னது சினமது
கையது அணைப்பிதல்
நங்கையது மனமது
நெஞ்சது கேள்வி


கல் வலை அம்பு
சொல் கலை அன்பு
வெல் வெறி மஞ்சம்
கொள் அறி நெஞ்சம்

தலைவன் கண்
தலைவி மண்
தலையனை விண்
தனி தலில் நான்

செய்தொரு காதல்
தனதொரு நெய்தல்
தீண்டொரு மோதல்
போவொரு விநயல்

வாவென நா அழைக்கா
இல்லென ஆ மறைக்கா
வில்லென ஈ தொடுக்கா
பொய்யென ஊ தடுக்கா

அந்தி மசக்கை
ஆதவ கர்ப்பம்
சந்திர மலர்ச்சி
போதையில் உச்சம்

இரவு சொப்பணம்
நிலவு முன்பணம்
தாரகை தொடுபணம்
வாடகை எச்சம்

பெண்ணொடு முத்தம்
மதுவொடு சொர்க்கம்
மஞ்சனையில் மிச்சம்
மருத்துவன் மச்சம்

விழுந்தது காதல்
எழுந்தது மோதல்
சேர்ந்தது கூடல்
வாழ்வது முடிதல்

பெண்ணது பார்வை
வீச்சது கயிறு
இரு என கழுத்து
கொள் என உயிர்

வெட்கமது நஞ்சு
முகமது பிஞ்சு
பண்பது அஞ்சு
நெஞ்சது பஞ்சு


முடிவொரு துரத்தல்
நடயொரு வருத்தல்
அழகொரு மறுத்தல்
கொலையொரு செய்தல்

நில் நில் போ
சொல் சொல் போ
கேள் கேள் போ
வா வா போ

உறவில் சாவு
உடலில் சாவு
பணத்தில் வாழ்வு
காதல் தோல்வி

நான் நான் நான்
நீ நீ நீ
பிரி சேர் விதி
முடி ஒரு ஆதி

நஞ்சொடு அமுதம்
நெஞ்சொடு சேர்
உடலொடு ஆன்மா
பிறிடலில் கேள்


பார்வை சுவாசம்
காதல் முத்தம்
இல் வாழ்
இணை மனை
சேர் கூடல்
சொல் தீண்டல்
மஞ்சம் காமம்
பூ தேன்
மெய் ஊடல்
தொடு போ

அத்தனையும் பொய்
யுரை கடைதனில்லாவது
கல்லறை வாசக ம

Sunday, 31 May 2009

பனையோடு விளையாடி.. அத்தியாயம் 4

[காத்தோட கேட்டதென்ன கரையோட போனதென்ன வெட்டினவ உறவென்னா ஒன்னு எலவு இன்னொன்னு அவ உசிரு - வாரது ஒரவ வெட்டிவிட்ட ராசம்மா வாச்சே]




கையில ஒன்னு இடுப்பில ஒன்னு சுமயாக்கிடக்கயில அவிழப்போற தாலி கூடவே சேக்குது சுமைய, இடுப்பில கிடந்தவாணிய திண்ணயில கிடத்தீட்டு சிவப்பீட காலில கிடந்தது குளரயில பக்கத்துவீட்டோட சேந்த ஊரெல்லாம் கூடுது முத்தத்தில.

"ஐயோ என்ட கடவுளே... புருசனைக் குடுத்திட்டு, இந்த ரெண்டையும் எப்பிடி கர சேக்கப்போரனோ"
காத்தில கத்தினதில அவிழுது தாலி.

பொசுக்கின்னு எழுந்து மடிப்பில முடிஞ்ச்சு கிடந்த சேலத்தலப்ப விசுக்கின்னு எடுத்து கண்ணையும் மூக்கையும் துடச்சுப்போட்டு நடந்ததெல்லாம் சொல்லப்போகயில வேர்த்துப்போன சிவப்பியர் அரஉசிரா சாயிராறு திண்ணயில, நடந்தது என்னென்னு தனக்குள்ளேயே அறிஞ்சிட்டு தலயில அடிச்சு அழுராவு மகமாயி, நடக்கிறதையெல்லாம் நெலவபாத்த கிளி மாதிரி பாக்கிராக வீட்டில இருந்த அரக்கச்சட்டையும் அழுக்குப் பாவாடையும்.

நடந்தத தெரிஞ்சுக்காம சிக்குப்பிடிச்ச தலேக்குள்ள கையவிட்டு தேடினது போகயில பரிதமாப்போச்சு தமிழப்பாத்த ஊருக்கு, சின்னவ கலைவாணி பெரியவ தமிழ்வதனா, பேர மட்டும் விதியெண்னோட கூட்டித்தான் வெச்சாக, இப்போ உதுகள் ரெண்டும் தலவிதியத் தேடித்தான் பாக்கோணும்.

அதிஷ்டமும் அறுவையும் கேட்டு வாங்க முடியாது, செல்லத்தாயி அனுபவிச்சு சொல்லுறதும் இதத் தான்.
போனதையெல்லாம் கண்ணீரோட புதச்சிட்டு வாயில வார்த்தயெடுக்கயில மூடிக்கிடந்த படலயோட வாயி மெல்லமாத் திறக்குது மறுபடி, அரஉசிராக் கிடந்த சிவப்பியருக்கு நெஞ்சில விழுது அடி,

சிவப்பியண்ணே சத்தத்தோட முத்தத்தில கூடிக்கிடந்த சனத்தயெல்லாம் விலக்கீட்டு மூஞ்ச காட்டினின்னு சொன்னாரு
"ஊரோட கூடிக்கிடக்கு உருவத்தம்மன் கோயில், மட்டுமுனயில இருந்து வார சனத்தயெல்லாம் எங்க ஊருப்பாத்து திருப்பி விடுதுக மாணவர் அமைப்புக, வார சனத்தயெல்லாம் பந்தல்ல இருக்க வெச்சு வாரன் உங்களிட்ட"

பேச்சு முடியயில கை நீழுது மேட்ச்சட்டயோட, மங்கம்மா கையில கிடந்த சட்டய அவசரமா வேண்டி அரவாசிய போட்டிட்டு கண்ணீரோட நின்ன ராசம்மவ கொஞ்சமா சமாதானப்படுத்தீட்டு ஏறுறாரு சைக்கிள்ல மிதிக்கிராறு செல்லயர்.

கூட நின்ன கூட்டமெல்லாம் ராசம்மா கையில ஒன்னு தலயில ஒன்னு முதுகில ஒன்னு தடவிநின்னு திண்ணயில இருக்கவெச்சு சமாதானஞ் சொல்லயில, தள்ளி நின்ன தமிழயும் பக்கத்தில கிடந்த வாணியையும் கையில ஒன்னு இடுப்பில ஒன்னு துக்கிவேச்சு தர தரென்னு உள்ள போயி தீத்திராவு அவிச்சு வெச்ச புட்ட

கடலப்பாத்த மல மாதிரி நடக்கிறதையெல்லாம் பாத்து நின்ன கலைக்கும் சுகுமாரனுக்கும் நடக்குது அறிமுகம்

"டேய் என்னடா பாக்கிறீங்க உவ தாண்டா உங்க அத்த, இதுக ரெண்டும் உங்களுக்கு மச்சாள் முறை தமிழ், வாணி, இவ்வளவு காலமும் மட்டுமுனயில இருந்தாங்க இனி இங்கதான் இருப்பாங்க"

தமிழப் பாத்தா கலைக்கு என்னமோ ஒரு சந்தோசம், இதுல வேற இனி இங்க தான் இருக்கப்போரங்க என்டதும் வாய் கொஞ்சம் கூடவா நீழுது.

அழுதுநின்ன தமிழா சாப்பிட்ட கையோட ஒருகையில கலை பிடிக்க, இடுப்பில கிடந்த வாணிய மாறன் வாங்க இருட்டோட சேரப்போகுது இவக விளையாட்டு, நடக்கிறதா புரியிற வயசு மாறனுக்கு மட்டும் தான், மத்துகள் எல்லாம் ஏதோ நடக்குது ன்னு நினச்சிட்டு தங்க வேலயோட சேர்ந்திட்டாக.

திண்ணயில தொடருது குளறல் சத்தம் சத்தங் கேட்டு வார சனமெல்லாம் வஞ்சனயில்லமா வைக்குது ஒப்பாரி, நடந்ததையெல்லாம் தெரியாம நின்ன சனத்துக்கு புளியமரத்தின நின்ன பேயொன்னு சொல்லுது இவக கதைய.


****************************************


கண்ணீரோட பேசீட்டு, உறங்கப்போன சத்தத்தையும் நித்திர கொள்ளுற சந்துகளையும் எழுப்பவேண்ணாமேன்னு சத்தமில்லாம போகுது சைக்கிள், எழுப்பினாலும் பரவல்லேன்னும் நிலமா சொல்லுது சிவப்பியருக்கு, சந்து பொந்து தாண்டி ஊருக்கு போட்ட கருப்பு வீதியைத் தேடுது செல்லயரோட சைக்கிள். உருவத்தம்மன் கோயில் திருவிழாக்குப் போட்ட வெளிச்சத்த தாண்டி கண்ணையே கூசுது வண்டிகளோட வெளிச்சம், உவ்வளவு வெளிச்சத்த ஒருநாளும் கண்டதில்ல உந்த கருப்பு வீதி,

வெளிச்சம் கட்டின சைக்கிள், கூடவே சேர்ந்த உந்துருளியோட உருளிற டாக்டருக்கு நடுவில இடங்தேடுது இழுத்து வார லாண்ட்மஸ்டர், வண்டிகட்டின மாடுக வழி தெரியாம போகயில நாதிகெட்ட சனமெல்லாம் நடக்குது உருவத்தம்மன் கோயிலப்பாத்து.

அரிசி கொஞ்சம் பருப்பு கொஞ்சம்
சேர்த்து வெச்ச துணி கொஞ்சம்
காணிப்பத்திரம் அடையாள அட்டை
பாயொண்டு படுக்கையொண்டு
சொட்டுமருந்து புட்டிப்பால்

கிடந்த கிடப்பெல்லாம் கையில கிடச்சதில சுருட்டீட்டு உடம்பு போயி உறவு செத்துப் போயி எழவூர்வலம் வருகிது காரக்குடி ஊர்ப்பக்கமா

ஒட்டுமொத்தமா எண்ணியும் எண்ணாமலும் பாத்தா முப்பது குடும்பம் இருக்கும், போனதுகள் போக மின்சினதுகள் இருந்த நிலம் கிடந்த இடம் படுத்த தேசம் பிரிஞ்சு தேடிப்போகயில கண்ணுக்கு தெரிஞ்ச ஊரு காரக்குடிக்கு வந்த சனம் இத்தன.

"வாழிற இடத்தில எங்க சனத்த வாழ விடாமப்பன்னுறதில உந்த அரசுக்கு என்னதான் சந்தோசமோ, பூனைய மடீல கட்டீட்டு சகுனம் பாக்கிற கதையா முடிவ தன்னட்ட வெச்சிட்டு எங்கட இடத்த எடுக்கிறதில என்ன லாபம் வரப்போகுது உவங்களுக்கு, எங்கட சனம் இருக்கிற இடத்தில உந்த கறுப்புத் தொப்பிக்கு என்ன வேல இப்ப, உப்பிடி ஒன்னுமில்லததுக்கு ஊரயே துரத்தி விடுதே இந்த அரசாங்கம், உத எதிர்த்து என்னதான் பன்னுறதோ"
போற வழியில சும்மா கிடந்த செல்லயரோட வாய் சொன்னதெல்லாம் உண்ம சத்தியம்

கிடக்கிற சாதி சனத்தோட நிலயப்பாத்திட்டு, சேர்த்து வெச்ச சோகத்தோட கண் கலங்கிப்போச்சு சிவப்பிக்கு, கத்திற சனத்தோட சேர்ந்து நெலவுக்கு கேக்குமட்டும் ஓ ன்னு ஒப்பாரி வெச்சிட்டு ஒண்ணுமில்லாமப் போயிடோணும் னு கிடந்திச்சு.

ஊரப்பாத்து வந்த சனத்தயெல்லாம் திருவிழாக்குப்போட்ட மோர்ப்பந்தல் தண்ணீர்ப்பந்தல் சக்கரைப்பந்தளோட வலயக்கட பொம்மக்கட இனிப்புக்கட பூக்கட புடவக்கட தட்டுக்கட என்டு போட்டுவச்ச பந்தளில இருத்திவச்சு வேண்டின உதவிகள செய்யுதுகள் காரக்குடி பேரூர் அமைப்பு பிள்ளைங்க.

கூட நின்ன மாரியப்பர் எட்டி நின்ன சிவப்பிகிட்டவந்து நடந்ததெல்லாம் சொல்லயில சிலையாக் கிடக்கிடக்கிற உருவத்தம்மன்னுக்கு உசிரு இப்பவோ அப்பவோ

"ஆறு மாசத்துக்கு முன்னால மட்டுமுனப்பக்கமா ஓர்ப்பாதுகாப்புக்கெனு கருப்புத்தொப்பிக்கும்பல இறக்கிச்சு உந்த அரசாங்கம், வாழிற இடத்தில பாதுகப்பென்னு உந்த சனத்தத்யெல்லாம் அடிமப்படுதினானுகள் அவனுகள், ஜனநாயகமாம் ஜனநாயகம், உப்ப இருக்கிற உலகத்துக்கு ஜனநாயகம் எப்பிடி சரிப்படும், இந்த நாட்டில நாங்க சிருபன்மாதன், ஓட்டுப்போட்டு ஆளுறதெல்லாம் அவனுகதனே, உந்த அரசாங்கத்துக்கு எதிர நாங்க போடுற ஓட்டெல்லாம் காணாமல் போகுது, அப்டி இப்பிடின்னு எப்பிடியாச்சும் ஒருத்தன் ரெண்டுபேர அனுப்பினாலும் அவனுகள் அங்க போய் கேக்கிரதுக்கெல்லாம் கோயில் மாடு மாதிரி தலையாட்டுரங்கள் இல்ல உடனே எழும்பிவரானுகள், என்னதான் செய்யிரதோ"
மாரியப்பர் படிச்சிட்டு சொல்லுறதிலயும் உண்மை யிருக்கு,

செல்லத்தாயி சொல்லிறமாதிரி ஜனநாயக நாட்டில சிறுபான்ம ஓட்டெல்லாம் செல்லா ஓட்டுக தான், நாங்கள் அனுப்பிரவங்களும் ஆளுங்க்கட்ச்சிதான், எங்கட சனத்துக்கு என்னதான் விடிவோ

"உவனுகள் பண்ணுற அநியாயத்தப் பத்திட்டு எங்கட பிள்ளங்க ஒன்னுசேர்ந்து எதிர்த்துதுகள், உதனலையே கருப்புத்தொப்பிகும் எங்கட சனத்துக்கும் அடிக்கடி பிரச்சின, எங்கட நிலமயப்பாத்திட்டு ஏதோ ஒரு புண்ணியவான் எங்கட பிள்ளயலிட கையில ஆயுதத்த தூக்கி குடுக்கயில பிரச்சன முத்திப்போச்சு"
மட்டுமுனயில யிருந்து வந்த பொன்னையர் நடந்ததெல்லாம் சொல்லயில, இனி வரப்போற பிரச்சனைய யோசிச்சு ஊரே நடுங்கிப்போச்சு

"உவனுகள் செஞ்சதும் கொஞ்ச நஞ்ச அநியாயமே, எங்கட பொம்பிலப்பிள்ளயல் வீதில போகேலாது, எதிர்துக்கேகிரவன நடுரோட்டில டயர் போட்டு எரிச்சானுகள், காவல்துறைக்கு சொல்லப்போன, சொல்லுறவன் அடுத்தநாள் பிணம், எத்தின நாளைக்குத்தான் எங்கட பிள்ளையால் இத பாத்திட்டு இருக்கும் அதன் அதுகளும் கிடைக்கிற ஆயுதத்தாள தட்டிக்கேட்டுதுகள், அதனாலையே எங்கட ஊர அடிச்சு துரத்திச்சு உந்த வீணாப்போன அரசாங்கம்"

பந்தளுக்க கிடந்த மட்டுமுனப் பெரிசில ஒன்னு பேத்தி போன சோகத்திலேயே இதையெல்லாம் சொல்லிடு கில கிடந்த மண்ண ஏறிஞ்சு சாபம் போட்டிச்சு

கிழவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம், ஏதோ வீண் வம்புக்கு எங்கட பிள்ளகள் ஆயுதம் வேண்டி அரச எதிர்க்குதென்டுறதும் உந்த பத்திரிக்கயல் சொல்லுறதும் அண்டப்புளுகு கூட நின்ன காரக்குடி பெரிசுகள் வந்த சனத்தத்த்பபாத்து கண் கலங்கி சொன்னது இதத் தான்.

வந்த சனத்தயெல்லாம் இறக்கி ஆறுதல் சொல்லீட்டு உருவத்தம்மன் கோயில் வாசலில கூடுது கூட்டம், காரக்குடி பெரிசுகளோட சேர்ந்த காரக்குடி பேரூர் அமைப்பு பிள்ளங்க, கூட்டத்துக்கு தலமா தாங்கிராறு ஊரு விதனயர் என்டு சிவப்பியர், கிட்டத்தட்ட பஞ்சாயத்து மாதிரி.

என்னதான் சட்டம் வந்தாலும் கண்ணக்கட்டி நீதி சொல்லுறத பாக்கிரதிலயும் மனசப் பாத்து மனசோட நேசத்தைப் பாத்து நீதி சொல்லுற பஞ்சாயத்தே மேல் செல்லத்தாயி அறிவச்சொல்லுறதும் உதத்தான்

கூடின பெரிசுகளெல்லாம் இரக்கமா கதைக்கயில, கூட நின்ன விடலைகள் கைகட்டி பாக்குதுகள்

“என்னயிருந்தாலும் எங்க சாதி சனமப்பா அதுகளும் வீடு வாசல இழந்திட்டு எங்கள நம்பி வந்திருக்குதுகள், உதுகளுக்கு வேண்டின உதவியால நாங்கதான் செய்ஞ்சு குடுக்கோணும், குலம் கோத்திரம் பாக்காம இந்த சனத்துக்கு எல்லாரும் உதவோனும்”

இரவிட நெரிசளோட சனத்திட சத்தத்தோட சிவப்பியர் சொன்ன வர்த்த கேட்டு நெலவோட சேர்ந்த காத்தும் கொஞ்சம் நின்னு பாக்குது

"நீ சொல்லுறதும் சரிதான் சிவப்பி என்னதான் மட்டுமுன சனத்தோட ஒட்டில்ல ஓரவில்ல எண்டாலும் அதுகல காட்ட இது நேரமில்ல"

இரக்கமா சொல்லுற பெரிய கருப்புக்கு காரக்குடி பெரிசுகலெல்லாம் தலயாட்ட கூடவே சுத்தி நின்ன மரங்களும் ஆட்டி சொல்லுது சம்மதம்

"நாளைக்கு நடக்கப்போற உருவத்தம்மன் விழாவ இந்த வருஷம் தள்ளிவெச்சிடுவம், திருவிழாக்கு வந்த கோஸ்டிகலயெல்லாம் முட்பணத்தோட திருப்பி அனுப்பீடுங்க, மிச்சமிருக்கிற கோயில் பணத்த வெச்சு நாதி யில்லாம கிடக்கிற இந்த சனத்துக்கு எதாவது வழி செய்வம்"

"நீ சொல்லுரது சரி சிவப்பி உதுகள் தங்கட மக்கள இழந்து இங்கவந்து கிடக்கயில திருவிழா அது இதென்ன அதுகளோட மனசும் நொந்து போகும், அதோட ஊரே இப்படிக்கிடக்கயில ஊருக்கே எழவு மாதிரித் தானே, ஏலவூரில திருவிழா செஞ்சா சாமியே எத்துக்காது, அதனால திருவிழாவ தள்ளிப்போட்டு பதினஞ்சு நாள் கழிச்சு பெரியபூசைக்கு ஏட்பபாடு பண்ணுவம், எதுக்கும் பூசாரிய ஒரு வார்த்த கேப்பம்"
ன்னு தலயக்கொஞ்சம் பூசாரி பக்கம் திருப்பயில ஊரே எடுத்த முடிவில இனி என்ன சொல்ல இருக்கு அதான் சாமிகுத்தத்துக்கும் மாரியப்பர் வழி சொல்லிட்டாரே, ஊரோட சேர்ந்து தீட்டில்லமா பெரியபூச பண்ணிட்டா ஊருக்கும் கெடுதல் வராது

ஆந்தயிட சத்தமும் நிலவிட பேச்சும் முடிய முதல் கூட்டம் கலயோனும், அவசரமா தீர்க்கொனும் இந்தப்பிரச்சனயல, கொஞ்சமா மூடிக்கிடந்த ஊர் வாய் மறுபடி திறக்குது.

"ஆறுமுகத்திட காணிக்கு அங்கால சுடலைக்கு எதிர்ப்பக்கம் கிடக்கிற பொறம்போக்கு நிலம் பிலாவடிப்பிள்ளயார் கோயிலுக்கு சொந்தம் அந்தக்காலத்துல ராசயர் எழுதி வெச்சது, இப்ப அது பரிபாலக சபேட்ட கோயில் சொத்தா கிடக்கு, சுடலைக்கு பக்கமெண்ட படியா கோயில் வேலைக்கு பயநில்லயெண்டு சும்மாதான் கிடக்குது இருபது வருசமா அதில இதுகளுக்கு குடிச செய்து குடுப்பம், எத்தின நாளைக்கு தான் கோயில்லையும், குளத்திலயும் இதுகல்ட சீவியம் போகும்"

சொல்லி முடிக்கயில, பிள்ளையார் கோயில் பரிபாலகர் செல்வமய்யர் இந்த புண்ணியத்தில தனக்குமொரு பங்கிருக்குமெண்டு உருவத்தம்மனப்பாத்து ஒரு கும்பிடு போட்டு உடனே சம்மதம் சொல்லீட்டு
“வேண்டின உதவிய நான் செய்ரன் சட்டப்படி எல்லாம் சிவ்வப்பியன்னே செய்து குடுத்தா சரி”
ன்னு சொல்ல, ஊரிட மனசப்பாத்த கோயில் மணி தான அடிக்குது அதிகாலக்காத்தில,
கிட்டத்து உறவு துரத்து உறவின்னு வந்த சனத்தில ஓரவுக்கரங்க அஞ்சு போக மிதமாயிருக்கிற இருபத்தஞ்சயும் காரக்குடிக்கு சொந்தமாக்கிரங்க ஒறவு பாக்காம

"சரியப்பா நாலயிலயிருந்து வேல நடக்கட்டும், வந்தசனத்துக்கு சாப்பாட்டுக்கு ஒரு வழியப்பாத்திட்டு வெய்யில் வர முதல் வீட்டப்பாத்துப்போவமப்பா நேத்தில யறிந்து தூன்காமக்கிடக்கு சனம்" அரத்தூக்கத்தில நிண்ட பெரியகருப்பு கட்டலயாக் கேக்க,

குடிச போடும் மட்டும் சாப்பாட்டு செலவும், பொரம்போக்கு நிலத்தில குடிச போடுரத்துக்கும் கோயில் காசோட எங்க உழப்பும் இருக்குமென்னு காரக்குடி பேரூர் அமைப்பு சொல்லயில எட்டிப்பாத்த சூரியனுக்கு தெரியுது களைப்பு

ஒத்த நாளில ஒரு கூட்டத்தில இத்தன முடிவ எந்த சனம் ஒத்துப்பாக, அதுதான் காரக்குடி மண்ணோடயும் எங்க சனத்தோடயும் பெரும, சாதீன்னு சொல்லி வெட்டிக்கிருவாக ஒட்டிக்கிருவாக, ஆனா பிரச்சனென்னு வந்தா ஊரே சேந்திருவாக அதுக்காக சாதிய விட்டுக்கிற சனமில்ல இந்தசனம், எல்லாம் உதவின்னு செய்வாக ஒட்டுறவு வெச்சுக்க மாட்டாக
இருந்தாலும் வழா வந்த சனத்த ஊரோட சேத்துக்கிற மனசு எத்தின சனத்துக்கு வரும், உருவத்தம்மன் கிடக்கிற ஊருக்கு அப்பிடியொரு நல்ல மனசு

அரத்தூக்க பெரிசெல்லாம் வீட்டப்பாத்துப்போகயில, விசயம் தெரிஞ்ச சுகுமாரன் கோஷ்டி கோயிலப்பாத்து வருது,

வந்தசனத்துக்கு வேண்டின சாப்பாட்டுக்கு வழிய உதுகள் பாக்கட்டுமெண்டு பெரிசுகளெல்லாம் சொல்லயில மச்சான் கூட்டத்துக்கு வருது வேல, பேரூர் அமப்போட சேருது மச்சான் கூட்டம். விடலப்பசங்க பஞ்சாயத்து தொடருது.
இந்த சனத்துக்கு வந்த நிலமா தான் நாளைக்கு எங்களுக்கும் அதுக்கு முதல் ஏதாச்சும் பண்ணனும், உதயெல்லம் உடனே நிப்பட்டோனும், நாளைக்கு நாங்களும் ஊரவிட்டு போற நெலம வந்திரிச்சென்ன

மச்சான் கூட்டமும் பேரூர் அமைப்பும் சேர்ந்து கேக்குது கேள்வி தங்களுக்குள்ள,

ஊரக்காக்காத்தன் எங்க அமப்பையே ஆரம்பிச்சம், இப்ப உந்த அரசாங்கம் பண்ணுற அநியாயங்கலப்பாத்த எங்களால என்ன தான் செய்ய முடியும்
உதவிக்கு வந்த விடலக்கூட்டம் ஊரக்கப்பத்தப்பாக்கயில கூடகேட்டு நின்ன பொன்னையர் சொல்லுறாரு அதுக்கு வழி
மட்டுமுனையில நட்ன்ததுகலயெல்லம் அறிஞ்ச மனுசரிவர், அதனால மனுஷன் வழி சொன்ன சரியாத்தானிருக்கும்
சுகுமாரன் சொல்லயில வேகமா வந்த வண்டியொன்னு அடிக்குது பிரேக் கோயில் வீதீக்க.

பனை வளரும்....

Saturday, 30 May 2009

வரம் தருவாய் பராசக்தி

பாமரன் கைப்பொருள் பார் தேவி பராசக்தி
வரம் தருவாய் எங்கள் ஈழம் வாழா

வாழ்க தலைவன் வாழ்க தேசம் என
சொல்லிடு நாவினில் வலிமை தாராய்

ஜகம் காப்பாய் நீ ஜனனி
பாரினில் போற்றுவார் நீ சக்தி
கானமதில் காமாட்ச்சி என்பர் ஒரு
கமலமதில் வரமொடு சொல் லெடு

தருவாய் இல்லம்! தாராய் என இன விடுதலை!

காண்பார் கேட்பார் சொல்வார்
என் தேசம் - கடையில் பொய்
என உரைத்திடுமோ நின் சக்தி

காப்பாய் அருள்வாய் கருணையோடு
கண்திறவாய் அகம் எழு பரிபூரணி

நெல்லில் ஏட்டெழுதி கலைவாணி நினைதொழுதே
சரீரமோடு வேப்பிலை தனயுடுத்தி அகமகள்
உயிர் காப்பாய் யென் றினைந்தோம்

தலையோடு குடமெடுத்து பலதோத்திரம் தனயுரைத்து
கண்ணீர் கசிந்து பல் கோயில் கட்டி உனை தரித்தோம்

வழி கொடு உன் பிள் வாழ்விற்க்கு

அகம் துணை நில்
வல்லமை கொடு
பொருளோடு சொல் தா
பொறுப்பில்ல மானிடம் மாற்று

பரிபூரண சக்தி கொடு பாரினில் எம்
பச்சயினம் வாழ வழி செய்வாய்

தோற்றுவாய் வருவாய் அகிலம் காப்பாய்
பாடி நின் பாதம் தொழுது
நின்னொடு கலை பயின்று
செவி நா பசி தொடுத்து விரதம் தனை காத்து
நின் திருவடி கேட்டு நின்றோம்

இல் அகற்றி உறவ கற்றி பசி தனை கொடுமை செய்
எம் பாவம் தீர் அம்மா எம் விடுதளை கொடு

கொள் உயிர் உனக்கென பிறப்பொடு வாழ்
நீ தருவாயென நம்பிடு இனம் தனை
பரம்பொருள் பிழை அகற்றி யென விதி செய்

கவியோடு கலையெடுத்து நின்
திருவடி சேர்ப்பின் களிப்பொடு விடை கொடு தாயே



வேண்டும் வேண்டும் துணை நீ வேண்டும் அம்மா
பிரிவில்லா என் இனம் பிரிவொடு ஈழம் பெற

மனத்தோடு உறுதி வேண்டும்
நெஞ்சொடு நேசம் வேண்டும்
அவசரமில் சிந்தனை வேண்டும்
அவசியம கனவு வேண்டும்
எடுகோள் பயன் பெற வேண்டும்
அகிலமொடு எம் ஒலி சேர வேண்டும்
சொல்லொடு நீதி வேண்டும்
செப்பு நாவில் உண்மை வேண்டும்
வன்பில்லா சேர்மானம் வேண்டும்
கட்டொடு உணர்வு வேண்டும்
கட்டிலா வீரம் வேண்டும்
தரணி எதிர் புத்தி வேண்டும்
பெண்ணொடு நிகர் வேண்டும்
அறிவோடு அரசியல் வேண்டும்
கள்ளமில்லா அன்பு வேண்டும்
கருணையோடு ஞானம் வேண்டும்
கொடு என செல்வம் வேண்டும்
நல் வழி நீ காட்டிட வேண்டும்

தருவாய் பராசக்தி! அருள்வாய் ஓம் சக்தி!

வெள்ளைப் பூவில் செங் கமலத்தில்
சிம்ம வாகினியாய் அழகொடு வடிவெடுத்து
அமைதி காண ஆசி கொடு

தரணி தடுக்கும் அகிலம் கெடுக்கும்
பார் பறிக்கும் என் தேசக் கண்ணீரை
பரி வோடு துடைத்தெடு

எழுவாய் தேவி வருவாய் தேவி
காப்பாய் தேவி அருள்வாய் தேவி
கல் அகற்றி உன் சக்தி காட்டி

அவதியொடு அல்லல் தொடும் என் இனம் காக்க

Friday, 29 May 2009

பனையோடு விளையாடி - அத்தியாயம்-03

[ நாட்டில நாளுக்கு நாலிடத்தில சண்ட தொடங்கினாலும் காரக்குடிமண்ணும் சுத்தியிருக்கிற சாதிசனமெல்லாம் நின்மதியாத்தன் கிடக்குது, இரும்புத்தொப்பிக்காரங்கள் ஊரக்காணும் வர உரிமை கேக்கிர சனமெல்லாம் உவத்திரவமில்லமா வாழுது இருபது வருசத்துக்கு முன்னால ]


"இதனால காரக்குடி மேட்டுக்குடி மாசியப்பிட்டி மண்மேடு மக்களுக்கு, பெரிய விதானையார் சிவப்பியர் சார்பாவும் கோயில் பரிபாலகசப சார்பாவும் தெரிவிச்சுக்கிறது என்னெண்ட நாள மறுநாள் உருவத்தம்மன் கோயில்ல கொடிய்ரப்போகுது ஊரு சனத்தயெல்லாம் சுத்தபத்தமா நடமடோன்னுமென்னும் சாதி சனம் பாக்காம ஒத்துமையா நிண்டு ஊருக்காகவும் உங்களுக்காகவும் கலந்துக்கொனுமேன்னும் கேட்டுக்கிரங்கோ...."


குழாய் கட்டின வண்டிக்குப்பின்னால ஒடுதுக அரக்கச்சட்டக, சிந்தின மூக்க பாவாடேல தேயக்கிது சிலது.

பத்துநாள் திருவிழாவையும் உபயகாரர்களையும் ஏத்தி நின்ன துண்டுப்பிரசுரத்தில ஊரையே பேசவச்சது
- "உருவத்தம்மன் கோயில் உர்ச்சவத்தற்கு முழுப்பாதுகாப்பு காரக்குடி பேரூர் அமைப்பு"


“நாலிடத்தில நடக்கிறதா பாத்திட்டு எங்கட பிள்ளைங்க ஆரம்பிச்சதுதான் இந்த அமைப்பு... இப்ப எல்லா ஊர்ப்பிள்ளங்க்களும் சேர்ந்து செய்யுதுகள் ஏதோ இதுகலாலவாவது விடிவுகாலம் பிறக்கட்டும்”
வெத்தில போட்ட மணியத்தார் கூடி நிண்ட கூட்டத்திட்ட சொல்ல, ஊருக்கு ஊர் நடக்கிற பிரச்சனயல நிப்பாட்ட நாங்களெல்லாம் ஒத்துமையா நிக்கொனுமேண்டு சந்தில சுருண்டு கிடந்த சனமெல்லாம் வெளியில வந்தது கூடுதுகள் ஊர்க்கதயோட


ஊரே கூடிக்கிடக்கயில கொட்டில்ல கிடக்கிற கன்னுக்குட்டி மட்டும் ஊரப்பாக்காம துள்ளிற மாதிரி நேத்துப் பெஞ்ச மழயில கையில கிடந்த பிரசுரமெல்லாம் நாலா மடிச்ச கப்பலாகிது. தண்ணிலபோர போற கப்பலோட கலையிட மனசும் சேர்ந்து போகயில தன்னில மறக்குது கலைக்கு.

“டேய் கல உதயிங்க கொண்டுவாடா, ஊரே செலவலிச்சு செய்யிரது உனக்கென்ன கப்பல் விடவே ...”

திண்ணயிலயிருந்த முருக்குமீச வெத்தில பெட்டீக்க கையவிட, வெட்ட கப்பலெலாம் தண்ணீல மூழ்கிப்போக, தன்னில திரும்ப கப்பல் செய்யாமலே தண்ணீல போகுது பிரசுரம்.

முறுக்கு மீசேல கோவம் சிவப்பியருக்கு சின்னக்காலில ஓட்டம் கலைக்கு.

ஓட்டம் பிடிச்ச காலுகலெல்லாம் ஒன்னச்சேருது தொடரிது ஆட்டம் கொலகொலய முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா.

-----------------------------------------------------------


கரச்சுவெச்ச சானியெல்லாம் அரிச்சுப்போன அடுப்பங்கரையில மெழுகாக்கீட்டு மங்கம்மா கைய்யக்களுவயில கூட்டம் சேருது வீட்டுத் திண்ணயில

“அடியே மங்கம்மா எழுதிவெச்ச கோயில் கணக்கையெல்லாம் உந்த சாமி படத்துக்குப்பின்னாடி வெச்சிருக்கன் அதக்கொஞ்சம் எடுத்திட்டு வா, அப்பிடியே இவங்களுக்கெல்லாம் தேத்தண்ணியப்போடு கோயில் வேலயில கலச்சுப்போய்ட்டுதுகல் மனுசங்க”

வாழவைக்கும் மண்ணும் தாகம் தீக்கும் தண்ணியும் இன்னும் ருசி மாறாமயிருக்கிறது எங்க மண்ணில்தான் சொல்லிற செல்லத்தாய்க்கு வாயில சக்கர

கணக்கு வழக்கெல்லாம் தேத்தண்ணிக்கோப்பயோட திண்னேலையே போக குசுனீக்கயிருந்த மங்கம்மா களைப்போட கத்தினா

“டேய் மாறன் கலயக்கூப்பிடுடா இருட்டிப்போச்சு “

கதையோட போராடின சுகுமாரனோட கனவக்கலச்சிட்டு வேகவெச்ச சுடுதண்ணிய ஊத்திறா மாவில இரவைக்கு சைய்யப்போற புட்டுக்கு, முந்திரிக்கா கூட்டத்த தேடிப்பொரன் மாறன்

“டேய் அண்ணா திருவிழான்னா இருட்டாதாட, ஒரே வெளிச்சமாயிருக்கிடா “
வெளிச்சத்தில கழண்ட காற்சட்டைய தூக்கிப்போட்ட கலைக்கும் அண்ணனுக்கும் வயசு வித்தியாசம் பத்து.

தலயில ரெண்டு போடு போட்டு வீட்டப்பாத்து கூட்டிவந்து பிடிக்கிற சண்டயில வீட்டில கிடந்த தலையணைக்கு வாயிருந்த ஊருக்கே சங்கு,

“அம்மா உவன அந்த சின்ராசு கூட்டத்தோட சேரவிடாதம்மா, அவனுங்க புத்திதான் உவனுக்கும் வருது, ஆக்களுக்கு முன்னால மட்டுமரியாதஇல்லாம டேய் என்றானம்மா “

கையில கிடந்த தலயான தூக்கி வீசல ,

“டேய் சுகுமாறன் வாட கோயிலுக்கு பந்தல் போடணுமாம், அப்பா ஊர் பெடியன்களையெல்லாம் கூட்டிப்போகச் சொன்னார்”
சின்ராசண்ண மொக்கராசு வீட்டுக்கு முன்னால,

“சரிடா மச்சான் அப்பிடியே உவனுங்க கண்ணனாக்களையும் கூப்பிடு நான் நேரா சந்திக்கு வாரன்”

சைக்கிள்ட சாவி கையில எடுக்கேக்க ஊருக்கு உபதேசம் உனக்கென்ன.


கோஸ்டி சேருது சந்தீல சைக்கிள் சத்தத்தோட மச்சான் சத்தம் கேக்கிது ராத்திர மரத்துக்கு


நேத்துப் பெஞ்ச மழையிட ஈரத்தோட உருவத்தம்மன் கோயில் வீதி நிறையுது இருட்டில குலைக்கிற நாயோட சேர்ந்த நரியோட சத்தத்தோட

மோர்ப்பந்தல் தண்ணீர்ப்பந்தல் சக்கரைப்பந்தளோட வலயக்கட பொம்மக்கட இனிப்புக்கட பூக்கட புடவக்கட தட்டுக்கட சேர சட்டிமுட்டி பூச்சாடி மஞ்ச்சாடி காத்தாடி கைப்பிள்ளன்னு வேண்டினதெல்லாம் வந்திறங்கி மைக்குப் போட்ட பந்த்தள்ளிளையிருந்து ஊருக்குள்ள போட்ட குழாய்க்கெல்லாம் இணப்பக்குடுத்து சுப்ரபாதம் போடயில கொட்டிள்ளயிருந்த மாடுக கண்ணா விழிக்குது, சைக்கிள்ள ஏறின மச்சான் கூட்டம் வீட்டப்பாத்துப்போகிது


ராத்திரீட பந்தல் களைப்பெல்லாம் பாயோட போக படுக்கதொடரிது கால பத்து மணிக்கும்


வரப்பு முடிஞ்சு வீடு வந்த சிவப்பியருக்கு வருது வேல

“ பத்து நாள் திருவிழாவுக்கு வேண்டிய நாடக நாட்டிய கூத்தாடிக் கோஸ்ட்டிக்கு நேரம் குறிக்கோனுமாம்னு பரிபாலக சப கேட்டிச்சு உங்க முடிவுக்கு தான் காத்திருக்காங்க கோயில் சபயில”
ஓட்டி வந்த சைக்கிள்ள நிண்டு கொண்டே சொன்னாரு செல்லயர்

“கோயில் பக்கமா போயி சபயிட்ட சொல்லு இன்னும் பத்தே நிமிசத்தில நிகழ்ச்சி பட்டியலோட வந்திடிறன் எண்டு”
ஊத்தி வெச்ச பழன்சோத்து தண்ணியில வரப்பு களைப்பா போக்கீட்டு உள்ளேயிருந்த நிகழ்ச்சி பட்டியலோட கிளம்பிறார் கோயிலப்பாத்து.

-----------------------------------------------------

கடசிய மிஞ்சிக் கிடந்த மீன் குழம்ப ஒண்ணுமில்லாம ஊத்திக் கழுவீட்டு மச்சச் சட்டியெல்லாம் மூலயில போக பூட்டி வெச்ச சைவச்சட்டியலுக்கு பத்து நாள் உழைப்பு ஒப்பந்த அடிப்படேல

“நாட்டு நிலமா நல்லாயிருந்த எங்கட சாதி சனத்தயெல்லாம் இந்த திருவிழா சாட்டோட கண்டிருக்கலாம், இந்த வருஷம் பிரச்சன பிரச்சன எண்டு சனமெல்லாம் ஊருக்கையே கிடக்குது, எப்ப தான் இதெல்லாம் மாறப்போகுதோ”

சட்டி முட்டியோட பேசின நிலம போய் சும்மா கிடந்த திண்ணயில ஒன்னா சேர்ந்திருக்காக ஊரு போம்பிளக

கதை புரளுது காதுக கேட்கிது தூரத்திலயிருந்த பசுமாடு கூட எழுந்து நின்று தலையாட்டுது

“அம்மா தேத்தண்ணி”

பாயில கிடந்த சுகுமாரன் சுகமாக் கேட்க

“பொருடா வாரன்”

ஊர்க்கதயில கிடந்த மங்கம்மாக்கு வீட்டுநினைப்பு கொஞ்சமாத்திரும்பிது.

--------------------------------------------------------------------

முதல்நாள் கொடியேத்தம் பின்நேரத்திலயிருந்து கச்சேரி ஆரம்பிக்குது.
மயிலாட்டம் ஓயிலாட்டம் பொம்மலாட்டமெல்லாம் முன்னாம் நாள் திருவிழாக்குப் பிறகுதான் கட்டளையா சிவப்பியார் சொல்ல

“அப்போ மூனுநாளைக்கும் நாதஸ்வரம் மேளம் மிருதங்கம் சங்கீதம் பரதம் என்னு கச்சேரியாவது போடுங்கப்பா கல கட்டட்டும்”.

பக்கத்திலயிருந்த பெரிய கருப்பு சிபாரிசு செய்ய பொங்கின சோறு பட்டினிப்பண்டத்துக்கு போனாலும் வடிச்சு கஞ்சியாச்சும் மிச்சமிருக்கு.
ஆக மொத்தத்தில ஊரே தூங்கப்போரதில்ல பத்து நாளைக்கும் நிகழ்ச்சிய நிரப்படுத்தி நேரமெல்லாம் போட்டுமுடிஞ்சும் நேரமாகல்ல இன்னும் மத்தியானச் சோத்துக்கு.

வந்த காரியம் முடிஞ்சு போக போட்டு வெச்ச பந்தலுக்குள்ள தொடருது உள்நாட்டு அரசியல்.

“மட்டுமுனயில தொடர்ந்தும் செல்லடியாக் கிடக்கிதாமப்பா சனங்கலெல்லாம் திக்குத்தெரியாம ஒடுதுகளாம். செத்துப்போன சனத்தமட்டும் உறவு பாக்காம விட்டிட்டு ஊரத்தேடிப் போகுது எங்க சாதிசனங்க காலையில பேப்பர் படிக்க ஈரக்கொலையே நடுங்குதப்பா”

சொன்ன குரலிலேயே தெரியுது நடுக்கம் செல்லையருக்கு,

எல்லாத்தையும் இந்த உருவத்தம்மன் தான் பாத்துக்கணும் உரிம தேடிற எங்கட சனத்துக்கு நாட்டப் பிரிச்சுக்குடுத்தா நின்மதியாப்போயிடும், இந்த சனியரசாங்கத்தால எப்பதான் விடிவு காலம் வரப்போகுதோ
( மனசுக்க தங்கச்சி ராசம்மாவ நினச்சு ஒரு சொட்டு கண்ணீர் கீழ வரயில கையொன்னு ஓடிப்போய் உண்மைய மறைக்குது ஊருக்கு )

உச்சி தொட்ட சூரியனோட எடுக்குது பசி கலயிது கூட்டம், குசினீக்க சமைச்சு வெச்ச கத்தரிக்கா குழம்பு பக்கத்து வீட்டு திண்ணைக்கு தொட்டுக்கொள்ள ஊறுகா

“குழம்ப கொஞ்சம் ஊத்து மங்கம்மா எத்தின நாளானாலும் இந்த கத்தரிக்க

குழம்பிட வாசம் மட்டும் உன்ட கைய பக்குவத்தில இருக்கிடி”
ஊத்தின குழம்பிட ருசி பாக்கயில, அடுப்பங்கரையில போட்ட பழைய துணி மாதிரி நாப்பது வயசிலயும் வந்த வெக்கம் வயசப்பாத்திட்டு மறஞ்சு போகுது

கருத்த மீசேல ஒட்டிக்கிடந்த ஒத்தசோத்த இழுத்து எடுக்கையில, கோவம் வந்த சூரியன் மறயபபாக்குது பூமீக்க

----------------------------------------------------------------------------------------------

குசுனிக்கு பின்பக்க வாசலோட இறக்கிக்கட்டி கூரவேஞ்சு சானி மொழுகி திண்ணகட்டி, வேள்ளான்மேல வெளயிரதோட வீட்டுக்கு வாங்கிரத்தையும் மூடிக்கட்டி மிச்சமிருக்கிற வெங்காயத்த கயித்தில தூக்கிக்கட்டி கொஞ்சமா கிடக்கிற இடத்துக்க கைவிட்டு வெச்ச உரலுக்கு வருது வேல

வறுத்து வெச்ச அரிசியும் வறுத்து வெச்ச பயறும் ஒருகைப்பிடி ஒருகைப்பிடின்னு அள்ளிப்போட்டு குத்தயில, திண்ணேலயிருந்த கல மாறிக்குதிக்கயில அரிசியும் பயறும் போடுது தாளம்

சூரியனோட கோவந்தனியமுதல் சுட்டு முடிக்கோனும் பூசைக்கு வேண்டின பலகாரம், சாயங்கால இருட்டோட போன சமஞ்சபொண்ண தேடிற மாதிரி முடிக்கிற வேலைக்கா முழுசா ஓடுது மங்கம்மா ஓட காலுக.

“அம்மா நான் ஒண்ட எடுக்கட்டே”

சுட்டு வெச்ச பலகாரத்த ருசி பாக்கப் போகயில சாமியோட சேர்ந்த சம்பிரதாயத்த உருவாக்கின மனுசங்களுக்கு குழந்தயோட மனசு புரியுமா என்ன

“அடேய் சாமிக்கு படைக்கிரதெட படைக்கமுதல் தொடக்கூடாது” ன்னு சுடுற பலகாரத்த அகப்பேல எடுக்கையில படல கொஞ்சம் போடுது சத்தம்

“அண்ணே சிவப்பி அண்ணே”
நடுங்கின குரலொண்டு கேக்குது படலேக்க

மத்தியானக் கதையில பேசினதெல்லாம் புத்தி சொல்லயில காலுக்கு போற ரத்தத்துக்கு போடுது அணை. திண்ணயில குத்தி வெச்ச கால நிலத்தத் தொடையில நிலங்க்கூட நடுங்குது,

கேக்கிர குரல் உது நெஞ்சோட ஊரிப்போனது பழகிப் பழகி கதுக கேட்ட குரல், படலயோட சத்தம் ராசம்மா குரலாச்சே


பனையோடு விழையாடுவோம்.......

பனையோடு விளையாடி... அத்தியாயம் 2


ஊரோரப் புளியமரம் பக்கத்தில தென்னந்தோப்பு பாகமாய் பாத்த வளராத ரெண்டு பூவரசன். ஒரு மாசமா தண்ணி விட்டும் ஆறு நாள மழபெஞ்சும் ஆறடி போகாத ஆறு பலாக்கண்டுக்கு ரெண்டு பலா மரம். சுத்தி முத்தி பாத்த நாற்பது மரவெள்ளியோட இருபது கத்தரிச்செடி.

பருவம் வந்த வாழப்பூவ பதம் பாத்த காக்காயா எச்சில் கையால துரத்தி அடிச்சார் சிவப்பியர்.

உள்ளேயிருந்த மங்கம்மா திண்ணைய நோக்கி சொல்லிச்சு
" இன்சாருங்க உந்த காக்காயா விட்டிட்டு கெதியா சாபிடுங்கோ" ன்னு

பதமா செஞ்ச சோத்தையும் பாவக்க குழம்பயும் முட்ட பொரியலோட மூக்க பிடிச்சிட்டு முந்தின கத பேச கிளம்பிராறு முலக்கடைக்கு.

“சொன்னது சொல்லிப்போக செஞ்சது செஞ்சுபோக கட்டினவ பேச்ச கரைபடமா முடிக்கிறனே”
தன்னையே கேட்டாரு ஒரு கேள்வி.


"ஏனப்பா வார சனிக்கிழமை மாறனோட திவசம் வருதே ஞாபகம் இருக்கோ" நாளயாண்டேக்குள்ள கடைக்கு போய் சாமான் வாங்கோணும்.

“இந்த மனிசனுக்கு வர வர வண்டீல மாட்டப் பூட்டவே ஞாபகம் வாரதில்ல" அவிச்சு வச்ச பனங்கிலங்க உரிச்சு கொண்டே கேக்கிறா மங்கம்மா.


மறந்து போன ஞாபகத்த மனசுக்குள்ள தேடீட்டு மரத்துப்போன நெஞ்சோடு கிளம்பிராறு முலக்கடைக்கு
( மத்தியான மசக்கயில செல்லையர் ஞாபகத்துக்கு வர பனங்கல்லு வாசனையும் வந்து போகுது)

------------------------------------------------------------------------------------------------------




கையில ஒரு கருத்தப்பை அறுந்து போன செருப்பு எங்கேயோ பார்த்த மாதிரி புதுசா பாத்தான் காரைக்குடிப் பெயர் பலகைக்கு பக்கத்தில நிண்ட சொந்த ஊர்க்காரன் கலைமாறன்

பட்டணத்து பஸ் வாரத்துக்கெண்டே அகலமாப் போட்ட வீதி ஏதோ மழபெஞ்ச சந்திரன ஞாபகப்படுத்தும். தூரப்பர்த்தா ஏதோ வெள்ளித்தட்டும் வெண்கலப்பதக்கமும் தான் கிட்டப்போயி மெல்லப்பார்த்த கிடக்கிற குண்டுகுழியெல்லம் முன்சீலதான்

செல்லத்தாயி சொல்லிறதிலயும் உண்மையிருக்கு எங்கேயோ கிடக்கிற நிலவுக்கு காதலிய ஒப்பிடிறியே இதுக்குத்தான என்டு.





வீதியோரம கிடக்கிற பஸ் நிலையம் ஊரு சனத்தையே பெருமப்படுத்திது. நாலுபக்க பெட்டீக்க மூண்டு பக்கம் மட்டும் முழுசா மூடி வெளிப்பக்கமா திறந்த வாசல் வெச்சு விலாசமா ஜன்னல் கட்டி வெள்ளயடிச்ச பூச்சுக்க கிழிஞ்சுபோன சுவரொட்டீக்க வெள்ளைய தேடினாலும் ஆறுமாசமா ஒட்டின கிழிஞ்சல்கள் பட சுவரொட்டி மட்டும் வெள்ளப்பூச முழுசா மறைக்குது. எங்க ஊருக்கு வார சனம் வெய்யில்ல வேகாக்கஊரு சனம் கூடிக்கட்டினது இந்த சின்ன மடம் பேரு மட்டும் காரைக்குடி பஸ் நிலைய மனை

முன்னால சுந்தரம் மாஸ்டர் வீடு பின்னால விழுது விட்ட ஆலமரம். தூரமா தெற்குப்பக்கம் காத்தடப்போன ஆலங்காடி கூடிர வேப்பமரத்தடிச்சந்த, ஊருக்கு ரெண்டு செட்டி கட, ஒருமாரி ஆட ஒருவத்தம்மன் கோயில் துணைக்கு ஒரு பிலாவடிப்பிள்ளயார், நாலா பக்கமும் டீடிப்பாத்தா நாலு முலக்கட மூணு வெதுப்பகம் டீக்கடையோட மூண்டில ரெண்டு மூக்கயனுக்கு சொந்தம்.

இது போக இருபது ஒத்தயடிப்பாத ஆறு மேட்டுப்பள்ளம் அறுபது வாய்க்கால் வயலுக்க பதினஞ்சு குறுக்குச்சந்து பதினாறு மூலச்சந்து. எழுபது வரப்பு தோட்டத்தோட கிடக்க.

மொத்த ஊருமே வந்து போகிது ஒரு நிமிசத்தில, வந்ததில ஒன்னயுமே காணோம். மிச்சமா கிடக்கிற பெயர்ப்பலகயோட ஏதோ பேச்சுவார்த்த செஞ்சிட்டு காணாத ஊற தேடிப்போறான் கால்நடையா.





போரவழியில காணாதது சனத்தையும் வேளிகளையும் தான் மனசுக்குள்ள மாமன் மச்சான் பேசிறதெல்லாம் மனப்பாடமா கேக்கிது, ஊரு சனத்திட உலருவாய் பேச்செல்லாம் காதுக்குள்ள கத்திற கவுளிச்சத்தம் மாதிரி.

சாதி பிரிச்சு சம்மந்தம் செஞ்சுக்காட்டியும் சாதி சனமெல்லாம் ஒத்துமயத்தான் வழ்ந்திச்சு.

காரைக்குடி ஊருக்கே இவங்கதான் நாட்டாமக்கார மாதிரி அப்பெல்லாம் விதானையார் குடும்பமெண்டு சொல்லுவினம்.

அந்தக்காலத்தில சிவப்பியர் விதானக்கிட்ட உதவின்னு கேட்டுநின்னா வித நெல்ல கூட விசுக்கென்னு குடுத்துடுவாங்க. இந்தக் குடும்பத்துக்கு ஊரே கட்டுப்படுது.
பெரியப்பன் சித்தப்பன் அத்தை மாமன் மச்சினன் சொந்தக்கரனா இவங்க குடும்பத்துக்கு மட்டும் உடையார் வீதின்னு வீதியே வெச்சிருக்காங்க, இருந்தும் ஊரு கட்டுப்படுதென்டா இவங்க மனசுக்குத்தான்.

சொத்தெல்லாம் மொத்தமா கிடந்தாலும் பூட்டி வெச்ச பட்டுத்துணி மாதிரி பத்திரமா பத்திரம்மா கிடக்கோனும் வீட்டு அலுமாரிக்க. நாலு காசு கிடந்ததாலும் கட்டிற சீல மாதிரி வெளியில தெரியோனுமென்டா நாலு பேருக்கு குடுக்கோனும் செல்லத்தாயி மனசு மறைக்காம சொல்லுறது இதத்தான்


சிவப்பியர் நாட்டமா பண்ண ஊருக்க ஊருக்கெண்டு ஒத்துப்போன குடும்பங்க ஐநூறு இருக்கும். சிவப்பியர் குடும்பம் பதினாலு போக குருக்கள் பூசாரி பரிபாலகரெண்டு உருவத்தம்மன் கோயிலுக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் செலவில்லாம பன்னிரெண்டு குடும்பம். ஊருக்க மூட நம்பிக்கைக்கும் இவங்கதான் காரணம் ஊரிட அறிவான பக்திக்கும் இவங்கதான்.

காரைக்குடி மட்டுமில்ல நாட்டுக்கே சோறுபோடா வித விதைச்சு அருவசெய்ய அறுபதா வெள்ளாளர் குடும்பம். போகம் முடிஞ்சு போகம் வர காத்திருக்கிரதால இந்தக் குடும்பங்களுக்கு தனிப்பெரும

சலவ செய்ய நாலு வண்ணன் குடும்பமா, ஊரு பெரும சொல்ல பனமரத்து பயன் தேடி இடுப்பில ஒரு பை கட்டி கள்ள இறக்க பதினஞ்சு பள்ளன் பன்ந்தோப்ப சொந்தமாக்கி.

ஊருக்காரங்கள அழகாக்க மூணு சவரக்கரர் ஊரில ஒன்னு போன ஒப்பிக்க ஆறு பரயன்கள் குடும்பம் குடும்பமா வாழ்ந்து போக. மிச்சமிருந்த சனமெல்லாம் தொழிலுக்கேத்த சாதி பிரிச்சாக, வாழ்க்க மட்டும் நடத்துறாங்க எதோ ஒரு வட்டத்துக்க

இவக சாமிவிட்டு சாமிகும்பிடுவாங்க, ஊரு விட்டு ஊரு பிழைப்பாங்க. முறுக்கு மீசேல கிடக்கிற நர முடிய மறைக்காமல் போனாலும் போவாக சாதி விட்டு சாதி மட்டும் மால மாத்திக்க மாட்டங்க அப்பிடியொரு பெருந்த்ன்ம இந்த ஊர்க்காரன்களுக்கு. காதலிச்ச மட்டும் சாதி போகும்னா ஊரே வேட்டிகிடுவாங்க இந்த சாதியில்லா காதலுக்கு, காதலுக்கே சாதி போட்டு வேலி போட்ட பெரும இவங்களுக்குத்தான்.



“நம்ம சனத்தில ஒருத்தன் கூடவா ஊருக்கயில்ல”
வேட்டிப்பனைக்கும் ஒட்டாத காத்துக்கும் ஒப்பன போட்டுக்கேட்டான் மாறன், எவ்வளவு கேட்டும் ஒரு பதில் இல்ல ஒரு பயனில்லா.

செல்லத்தாயி சொல்லிறமாதிரி “மரங்களெல்லாம் பேசத்தொடங்கினா நாட்டில மழைக்கே பஞ்சமிருக்காது”

காதுக்க சொல்லாம மனசுக்கையே சொல்லிட்டு வெட்ட வெளியில இவனுக்கே விரிச்ச செம்ப்பாட்டு கம்பளத்தில தனியா நடந்து போறான் கலை மாறன்.




கல்வீடு மணவீடு குடிசைவீடு கூரவீடு தகரவேலி கிடுகுவேலி ஒலவேலி கல்மதில் கட்டுமதில் இருந்த அடையாளத்தில சின்னம் கூட மிச்சமில்ல. ஊரையே வண்டி கட்டி நாடுகடத்தீட்டாங்களோன்னு தனக்குள்ளேயே தலப்பா கட்டி நடக்கிறான் நாலுகிலோமீட்ட்ர்.

கண்டதெல்லாம் காணாமல் போனாலும் இந்த வெய்யில் மட்டும் உசிர வாங்குது. உச்சந்தலயில ஒளியிட வீச்சுப்பட்ட உள்ளயிருக்கிற நரம்பெல்லாம் சூடாக்கி உசிரக்கேக்குது. கொஞ்சமா சூட்டத்தனிப்பமென்டா ஒரு பயலில்லா ஊருக்க ஏது தண்ணி, வீச்ச மறைக்க நிழல் கேட்டா பட்டமரமெல்லாம் மொத்தமா காயிது. உடம்பிட சூட்ட உச்சந்தலயில எட்டிப்பார்த்த வேர்வய ஒத்தக் கையால வீசிப்போட்டு கரையத்தேடிரான் கானல் நீருக்கனின்டு.

உச்சி வந்த வேர்வைத்துளியும் நிட்க்கமாட்டேங்க, வீசிப்போன ஒத்தக்கையும் விடமாட்டேங்க. வேர்வைக்கும் விரல்களுக்கும் மகாபாரதம். போருக்குப்போன அருச்சுனன் போல சுத்தி முத்திப்பாக்கிறான் உறவுக்காரன, பகைவனாக்கூட ஒருத்தனில்ல.

கண்ணக்கட்டி மூச்சுமுட்டி நடைபாதேல இடம் தேட முழிச்சுப் பார்த்த பாதியில கிடக்கிது உருவத்தம்மன்.

முட்டின மூச்சு முழுசா போயிருச்சோ கட்டின கண்ணும் காணாமல் போயிருச்சோ நிக்கிறது ஊரிலயா இல்ல வெட்டியான் கூட வேளுத்துப்போன சுடலேலையா?, மகாபாரத போரில வெற்றியாச்சு வேர்வைத்துளிக்கு, வேர்த்துப்போச்சு கலைக்கு
தடுமாறின காலோட தடம்மாறாம போயி இடிஞ்சு போன கோயில் படியில இருக்கிறான் நடந்தது அறிஞ்சும்.




கூரையில்லாத கோயில், துப்பாக்கி சூடுபட்டே ஓட்டயாப்போன பாவப்பட்ட சுவர், ஓட்டரயடிக்காத அறையில கிடக்கிற மணிகள் சொல்லுது கர்ப்பக்கிரகமெண்டு, களவாடப்பட்ட கோயில் சிலக்கிடயில கண்ணகிசில மட்டும் சிலம்போட.
தூரமா தெரியுது வத்திப்போன கேணி துவண்டுபோய் கிடக்கிது கருவேலங்காடு கோயில் வீதீக்க, மிச்சமா கிடக்கிறது கோயில் கல்லும் வளஞ்சுபோன சூலகமும்தான்.


சுருட்டமுடிக்குள்ள கையவிட்டு ஏதோ தேடீட்டு காத்தில சாயிர கத்தரிச்செடி மாதிரி ஓட்ட விழுந்த சிவரில சாய்து தல, காத்தில சிரிக்குது கோயில் மணி.
"தொலஞ்சதயெல்லாம் எப்ப தரப்போரா உறுவத்தாம்மா, இதுக்கா இத்தன கஷ்டமும் பட்டோம்”
ன்னு காத்திலையே கத்தீட்டு தொலஞ்சதயெல்லாம் தேடப்பொரான் மாறன், தேடிரதயெல்லாம் தொலைக்குது சூரியன்


கல் மனச போனாலும் கள்ளமில்லாமல் பேசுவாலே தமிழ், விரச்சவனயெல்லாம் விலாசீட்டு மச்சான் மச்சான்னு தோழாத்தட்டுவான்களே சின்ராசு மயில்சாமி கோயிலன். படிச்ச மாஸ்டர் பரதேசி சாமியார், அம்மா மகமாயி அப்பா சிவப்பியர் அண்ணன் சுகுமாரன் இன்னும் எத்தினையோ முகங்க சொச்சத்தில வந்தது போக.

உருப்படியா நின்ன காக்காயொன்னு கரயாம சொல்லிச்சு இவங்க பிழப்ப,

பச்சயிலயில காக்கயோட பாசத்த துடச்சிட்டு கட்டின கண்ணுக்கு சொல்லிக்குடுக்கிறான் கொஞ்சம் கலஞ்சுபோக.



இன்னும் விழையாடுவோம்......