Sunday, 6 December 2009

நின்னை ரதி யென்று





கருவில் கறுப்பென்று
குங்குமப் பூ
கருப்பையில் நீயென்று
காதல் மலர்

சிந்தனை செய்முன்
தொட்டிலில் அழுகுரல்
சிரித்து பழகுமுன்
கைகள் பரிமாற்றம்

ஒட்டின உறவென்று
ஒட்டாத சொந்தமொன்று
எட்டிப் பார்க்கையில்
முடியுது சம்மந்தம்

பட்டு பாவடையில்
தொட்டு பழகையில்
துணை யென்று
சொல்லுது ஊரு

பள்ளிக்கு துணை
பருவம் துணை
சொந்தம் கூடையில்
சொத்துக்கும் துணை

காதுகுத்துக்கு மாப்பிள்ளை
ஆடுவெட்டி பிரமாதம்
மாப்பிளை எங்கோ?
வீதியல பல்லாங்குழி

பனை வளருது
பாவாட தாவணி
தென்னை காய்க்குது
முக்கால் முழுக்கால்

முகம் பார்க்குது
நாணம் சேரல
முத்தம் கேக்குது
சத்தம் சேரல

நாணமும் காதலும்
ரெட்டையில் பிறந்தவை
முத்தமும் சத்தமும்
இரண்டென போனவை



பார்த்தும் பார்த்தும்
ஏக்கம் தோனல
பழகியும் பேசியும்
வார்த்த தேடல

காத்திருந்து கரையல
தெருவோரம் பாடல
கண்ணாடி காணல
காதல் வரல

காலம் வருது
கால் கணக்கு
முடியுது பேச்சு
ஊர் வாயல

முத்தமிடாத உதடு
நினைக்காத மனது
தீண்டலிலா விரல்
நடக்குது முதலிரவு

தொடர் வாழ்
நிசப்த இரவு
காமம் ஏது
காதல் இல்?

கட்டை காற்சட்டை
பட்டு பாவாடை
கேட்டதா காதல்?
சொன்னதா நேசம்

நேரில் பார்க்காமல்
நெருடல் கொள்ளினும்
நின்னை ரதியென்று
நினைக்கச்செய்யும் பந்தம்....

No comments:

Post a Comment