
உணர்வுகள் பேசும் புத்தகம்
அந்த வெட்கம்
ஒரு தரம் முகம் பார்க்கும் முன்
தொலைபேசி சிணுங்களில்
சத்தங்கள் பரிமாறலில்
மௌனங்கள் மட்டும் பேசும்
உச்சரிப்பின் வெட்க்கம்
முதல் ஹாய்
பெயர் சொல்லி மறுநிமிஷம்
ஒருநொடி நிசப்தத்தில்
குரல் கூட வாசிக்கும்
ஹார்மோனியம்
இலக்கணப் பிழையின்றி
அடுத்த வார்த்தை தேடும் அரை நொடி
எத்தனை வார்த்தைகள்
தாய்மொழியில் தேடியும்
நலம் விசாரிக்க
இலக்கியம் வழங்கும் அடுத்த வார்த்தை
ஒருவழியாய் மௌனம் கலையும்
முத்தம் கேட்க்காத உதடுகள்
முகம் பார்க்க அழைக்கும்
கனவு காணாத கண்கள்
கவி பாட தேடும்
கண்ணீர் பேசும் வார்த்தைகளோடு
நினைவோடு நினைந்தவளில்
நிலையான வார்த்தைகள்
நிதம் ஒலிக்கும் மென்று
காதுகள் சேமிக்கும் ஒவ்வொரு
உளறல்களின் உச்சரிப்புக்களையும்
செல்லக்கோபம் சின்ன சமாதனம்
ஒற்றையாய் உதட்டுக்கடி
ஓராயிரம் கண் சிமிட்டல்
ஒரு வரிக்கவிதை
மெல்லிய புன்னகை
இத்தனையும் தாண்டி
உன் ஒவ்வொரு திட்டிலும்
எனக்கான அக்கறை
நேரம் தடுமாறும்
தொலைபேசி சுடும்
கால்கள் வழிப்போக்கனாகும்
கைகள் இடம்மாற்றும்
சுற்றம் தொழையும் சூழால் மறக்கும்
நீ நான் பேச்சு மட்டுமாய்
பேச்சுக்களோடு
அருகிலிருக்கும் உன் புகைப்படம்
உதடுகள் அசைக்கும்
முரண்பாடுகளின்றி கண்சிமிட்டும்
புன்னகை செய்யும்
புகைப்படம் காதல் செய்து கவியும் சொல்லும்
வார்த்தைகள் தேடி தேடி
அகாரதிப்புத்தகங்கள் மூடப்படும்போது
உன் உதடுகள் உச்சரிக்கும் அந்தவார்த்தை
“உன்ன மறுபடியும் பாக்கணும்”
ஒரு சொல்லில் தற்கொலை செய்ததுண்டா
ஒற்றை வார்த்தை தூக்கில் இட்டதுண்ட
குரல் ஒன்று இதயம் கிழித்ததுண்ட
எங்கேயாவது
மொழி உயிர் கொள்ளுமா
வலி உணர்ந்திருக்கிறேன்
அந்த ஒரு சொல்லில்
அத்தனை வலியும் உணர்கிறேன்
தொலைபேசி துண்டிப்போடு.....




