நேர இயந்திரம்

கொட்டிலில் ஒன்று
தொட்டிலில் ஒன்று
நிர்வாண வெட்கம்
நிலையறியா புத்தி
பெரியவன் எவனோ
பெறாமகனுக்கு பசிதீர்ப்பவன்
பக்கத்து வீட்டில் பேரம்பேச்சு
ஐந்நூறு ரூபாய்க்கு குட்டி
இரண்டாயிரத்துக்கு தாய்
நூறுக்கு பத்துக் குறைச்சல்
நாணயம் நாகரீகம்
மாட்டுக்கும் ஆட்டுக்கும்
முடியுது வியாபாரம்..
தாய்க்கெண்டு சமயல்கட்டு
குட்டிக்கெண்டு ஊர்க்கோயில்
அம்மா அம்மா சத்தம்
அடுத்த நொடி தாய் மடி
எஜமானி விஸ்வாசம்
சொல்லுது ஆடு...
மாளிக மாட்டுக்கொட்டில்
பக்கத்தில குடிச பண்ண
பன்னிக்கும் மாட்டுக்கும்
தகராறு வேலயில
சட்டத்தில முடிவில்ல எண்டு
சமத்துவம் சொல்லுது மாடு...
ஜனநாயக கரடி பாசிச புலி
இனத்துகில்ல ஆட்சி ...
பணத்திலில்லா உலகச்சந்த
பாராளுமன்றம் பயனுமில்ல
காதல் செய்யுது கிளியும் பருந்தும்
சேர்த்து வைக்குது கொக்கும் மீனும்....
காகம் கும்பிடப்போவதில்லை
கிளி சாலம் செய்வதில்லை
புறா விரதம் பிடிப்பதில்லை
பூச்சி ஞானஸ்தானம் பெறுவதில்லை
இருந்தும் பிறப்பும் இறப்பும்
வேதாந்தம் என்று எலி வேதம் படிப்பதுமில்லை
நாய்க்கெண்டு தாசி வீடு தெரியாது
பூனைக்கு ஏது வப்பாட்டி
கொலைகார மான் கிடையாது
எங்கேயாவது வெட்டுக்கிளி
பொய் சாட்சி சொல்லுமா
சட்டம் தெரியாது சாரைப்பம்புக்கு...
கோழி புரட்ச்சி அறியாது
வரலாறு சொல்லுமா
மாட்டுக்கொட்டில் புரட்ச்சியையும்
நத்தைகூட்டு புரட்ச்சியையும்
புரட்ச்சிகளில் அரசியல் முறையுருவாக்க
சிங்கங்கள் ஒன்றும் புரட்ச்சியாளர் அல்ல
சாஸ்திரங்கள் வரலாறுகள்
ரத்தங்காணும் அருவாக்கள்
புரட்ச்சிகள் யுத்தங்கள்
புதுமை சொல்லும் புத்தகங்கள்
அறிவியலாளர் அகம் பார்ப்பதில்லை
மதவியல் புறம் காண்பதில்லை
வறுமை வாழாவெட்டி
மிருகங்களுக்கில்லை
எரிச்சல் பொறாமை
பறவைகள் உணர்வதில்லை
உதவும் இனமென்று
தத்துவமும் பேசுவதில்லை
கொண்டது பகுத்தறிவு
செய்தது சிந்தனை
பிறந்தது உணர்வு
நினைத்தது உயர்ச்சி
மீண்டும் காட்டில்
கல்லோடு கல் உரசி......

No comments:
Post a Comment