மழை நீர் சிந்தி கரையாத வானம்
கண்ணீர் ஏந்தி அழியாத பூமி
கரை படாத காதல்
பூப்பெய்தியும் காய்க்க மறுத்த கனி
கலங்கப்படாத பருவம்
இத்தனயும் தாண்டி
பல ஆண்டுகள்
பெயர் சொல்லி ஆளாகி
முற்றத்தில் முத்தம் பார்த்து
முழுநிலவில் முகம் தேடி
காத்தோடி கடிதம் வரைந்து
கனவோடு சோகம் வளர்த்து
கன்னியெனும் தன்மையது
காலத்தோடு கரைந்திடினும்
உள்ளமது உனக்கென்று
உறவுக்காய் காத்திருந்த
உத்தமிக்கு உவகை செய்ய
வருவான் காதல் கவிஞ்ஞன் இவனென
காலமொடு காத்திருந்த என் கன்னிக்கு
நெஞ்சோடு கவி தெளித்து
நேசத்தோடு மடல் அனுப்பி
பின்னோடு வருவது நாயகனன்றி
நாணம் கலைக்கும் காதலனென்று
முகநூலோடு முகம் பத்திதும்
முழுதும் அறியா பாவையாய்...
காலம் கடந்த முன் நினைவுகள்
கவிதன்னில் சொல்லிடினும்
அறைதன்னில் தனிமைதேடி
மாலைசூடும் நினைவுகள்
கனவுகள் தானென
கண்ணீர் கடன் வாங்குவதேனடி
மனசோடு நினைவு வந்து
மார்போடு கட்டியனச்சு
வரப்போட போனதென்று ...
வீதியோட நடந்து
விரல் நுனி பிடிச்சு
ஊருக்குள்ள பேசி
முடிஞ்சுவெச்ச நேசம்
மஞ்சள் தாலி குங்குமமத்தில்
கடைவது நனவன்று
நெஞ்சோடு சேர்ப்பதேனடி...
காதல் வந்தும் வார்த்தை யின்றி நீ
வார்த்தை தேர்ந்தும் சந்தர்ப்பமின்றி நான்

காலம் வரைந்தும் கவி சொல்லியும்
பாஷைகள் மௌனிக்கும்
இதயம் உச்சரிக்கும்
முற்றும் தீரும் வார்த்தை
முழுதாய் வற்றும் முன்
சற்றும் தாமதம் தள்ளி
உன் விழியருகில்
கனவென்று ஒருதரம்
கைநுனி கிள்ளி
காதலில் பல தரம்
கால்நுனி கீறி
வெட்கத்தில் இருதரம்
நாநுனி கடித்து
மண்பார்த்து தலை தூக்கி
முகம் பார்த்து நாணம் கொள்ளில்
கை நகம் கடித்து
அமுதமான உன் காத்திருப்பு
அழகாய் சொல்லியது
இருவிழி நதியோடி
என் கால் தனை தொட்ட
உன் கண்கள் எடுத்த ஊற்று
கட்டியனத்த தழுவலில்
கரைந்தது காதல்
மறைந்தது நினைவு
காலை தலயணை ஈரமாய்
அமுதமான காத்திரிப்பு தொடர்கிறது
என்றும் உலராத உன் தலையனையோடு
ஜீவனாய் என் கவி தொடர்கிறது
ஜன்னலில் ஒழிந்திருக்கும் உன் முகம்தேடி...
தலையணையோடாவது பேசுகிறது உன் கண்ணீர்
மௌனித்திருக்கும் நான் உன் மடி சாயும்வரை மட்டுமே...

No comments:
Post a Comment