
கையில ஒன்னு இடுப்பில ஒன்னு சுமயாக்கிடக்கயில அவிழப்போற தாலி கூடவே சேக்குது சுமைய, இடுப்பில கிடந்தவாணிய திண்ணயில கிடத்தீட்டு சிவப்பீட காலில கிடந்தது குளரயில பக்கத்துவீட்டோட சேந்த ஊரெல்லாம் கூடுது முத்தத்தில.
"ஐயோ என்ட கடவுளே... புருசனைக் குடுத்திட்டு, இந்த ரெண்டையும் எப்பிடி கர சேக்கப்போரனோ"
காத்தில கத்தினதில அவிழுது தாலி.
பொசுக்கின்னு எழுந்து மடிப்பில முடிஞ்ச்சு கிடந்த சேலத்தலப்ப விசுக்கின்னு எடுத்து கண்ணையும் மூக்கையும் துடச்சுப்போட்டு நடந்ததெல்லாம் சொல்லப்போகயில வேர்த்துப்போன சிவப்பியர் அரஉசிரா சாயிராறு திண்ணயில, நடந்தது என்னென்னு தனக்குள்ளேயே அறிஞ்சிட்டு தலயில அடிச்சு அழுராவு மகமாயி, நடக்கிறதையெல்லாம் நெலவபாத்த கிளி மாதிரி பாக்கிராக வீட்டில இருந்த அரக்கச்சட்டையும் அழுக்குப் பாவாடையும்.
நடந்தத தெரிஞ்சுக்காம சிக்குப்பிடிச்ச தலேக்குள்ள கையவிட்டு தேடினது போகயில பரிதமாப்போச்சு தமிழப்பாத்த ஊருக்கு, சின்னவ கலைவாணி பெரியவ தமிழ்வதனா, பேர மட்டும் விதியெண்னோட கூட்டித்தான் வெச்சாக, இப்போ உதுகள் ரெண்டும் தலவிதியத் தேடித்தான் பாக்கோணும்.
அதிஷ்டமும் அறுவையும் கேட்டு வாங்க முடியாது, செல்லத்தாயி அனுபவிச்சு சொல்லுறதும் இதத் தான்.
போனதையெல்லாம் கண்ணீரோட புதச்சிட்டு வாயில வார்த்தயெடுக்கயில மூடிக்கிடந்த படலயோட வாயி மெல்லமாத் திறக்குது மறுபடி, அரஉசிராக் கிடந்த சிவப்பியருக்கு நெஞ்சில விழுது அடி,
சிவப்பியண்ணே சத்தத்தோட முத்தத்தில கூடிக்கிடந்த சனத்தயெல்லாம் விலக்கீட்டு மூஞ்ச காட்டினின்னு சொன்னாரு
"ஊரோட கூடிக்கிடக்கு உருவத்தம்மன் கோயில், மட்டுமுனயில இருந்து வார சனத்தயெல்லாம் எங்க ஊருப்பாத்து திருப்பி விடுதுக மாணவர் அமைப்புக, வார சனத்தயெல்லாம் பந்தல்ல இருக்க வெச்சு வாரன் உங்களிட்ட"
பேச்சு முடியயில கை நீழுது மேட்ச்சட்டயோட, மங்கம்மா கையில கிடந்த சட்டய அவசரமா வேண்டி அரவாசிய போட்டிட்டு கண்ணீரோட நின்ன ராசம்மவ கொஞ்சமா சமாதானப்படுத்தீட்டு ஏறுறாரு சைக்கிள்ல மிதிக்கிராறு செல்லயர்.
கூட நின்ன கூட்டமெல்லாம் ராசம்மா கையில ஒன்னு தலயில ஒன்னு முதுகில ஒன்னு தடவிநின்னு திண்ணயில இருக்கவெச்சு சமாதானஞ் சொல்லயில, தள்ளி நின்ன தமிழயும் பக்கத்தில கிடந்த வாணியையும் கையில ஒன்னு இடுப்பில ஒன்னு துக்கிவேச்சு தர தரென்னு உள்ள போயி தீத்திராவு அவிச்சு வெச்ச புட்ட
கடலப்பாத்த மல மாதிரி நடக்கிறதையெல்லாம் பாத்து நின்ன கலைக்கும் சுகுமாரனுக்கும் நடக்குது அறிமுகம்
"டேய் என்னடா பாக்கிறீங்க உவ தாண்டா உங்க அத்த, இதுக ரெண்டும் உங்களுக்கு மச்சாள் முறை தமிழ், வாணி, இவ்வளவு காலமும் மட்டுமுனயில இருந்தாங்க இனி இங்கதான் இருப்பாங்க"
தமிழப் பாத்தா கலைக்கு என்னமோ ஒரு சந்தோசம், இதுல வேற இனி இங்க தான் இருக்கப்போரங்க என்டதும் வாய் கொஞ்சம் கூடவா நீழுது.
அழுதுநின்ன தமிழா சாப்பிட்ட கையோட ஒருகையில கலை பிடிக்க, இடுப்பில கிடந்த வாணிய மாறன் வாங்க இருட்டோட சேரப்போகுது இவக விளையாட்டு, நடக்கிறதா புரியிற வயசு மாறனுக்கு மட்டும் தான், மத்துகள் எல்லாம் ஏதோ நடக்குது ன்னு நினச்சிட்டு தங்க வேலயோட சேர்ந்திட்டாக.
திண்ணயில தொடருது குளறல் சத்தம் சத்தங் கேட்டு வார சனமெல்லாம் வஞ்சனயில்லமா வைக்குது ஒப்பாரி, நடந்ததையெல்லாம் தெரியாம நின்ன சனத்துக்கு புளியமரத்தின நின்ன பேயொன்னு சொல்லுது இவக கதைய.
****************************************
கண்ணீரோட பேசீட்டு, உறங்கப்போன சத்தத்தையும் நித்திர கொள்ளுற சந்துகளையும் எழுப்பவேண்ணாமேன்னு சத்தமில்லாம போகுது சைக்கிள், எழுப்பினாலும் பரவல்லேன்னும் நிலமா சொல்லுது சிவப்பியருக்கு, சந்து பொந்து தாண்டி ஊருக்கு போட்ட கருப்பு வீதியைத் தேடுது செல்லயரோட சைக்கிள். உருவத்தம்மன் கோயில் திருவிழாக்குப் போட்ட வெளிச்சத்த தாண்டி கண்ணையே கூசுது வண்டிகளோட வெளிச்சம், உவ்வளவு வெளிச்சத்த ஒருநாளும் கண்டதில்ல உந்த கருப்பு வீதி,
வெளிச்சம் கட்டின சைக்கிள், கூடவே சேர்ந்த உந்துருளியோட உருளிற டாக்டருக்கு நடுவில இடங்தேடுது இழுத்து வார லாண்ட்மஸ்டர், வண்டிகட்டின மாடுக வழி தெரியாம போகயில நாதிகெட்ட சனமெல்லாம் நடக்குது உருவத்தம்மன் கோயிலப்பாத்து.
அரிசி கொஞ்சம் பருப்பு கொஞ்சம்
சேர்த்து வெச்ச துணி கொஞ்சம்
காணிப்பத்திரம் அடையாள அட்டை
பாயொண்டு படுக்கையொண்டு
சொட்டுமருந்து புட்டிப்பால்
கிடந்த கிடப்பெல்லாம் கையில கிடச்சதில சுருட்டீட்டு உடம்பு போயி உறவு செத்துப் போயி எழவூர்வலம் வருகிது காரக்குடி ஊர்ப்பக்கமா
ஒட்டுமொத்தமா எண்ணியும் எண்ணாமலும் பாத்தா முப்பது குடும்பம் இருக்கும், போனதுகள் போக மின்சினதுகள் இருந்த நிலம் கிடந்த இடம் படுத்த தேசம் பிரிஞ்சு தேடிப்போகயில கண்ணுக்கு தெரிஞ்ச ஊரு காரக்குடிக்கு வந்த சனம் இத்தன.
"வாழிற இடத்தில எங்க சனத்த வாழ விடாமப்பன்னுறதில உந்த அரசுக்கு என்னதான் சந்தோசமோ, பூனைய மடீல கட்டீட்டு சகுனம் பாக்கிற கதையா முடிவ தன்னட்ட வெச்சிட்டு எங்கட இடத்த எடுக்கிறதில என்ன லாபம் வரப்போகுது உவங்களுக்கு, எங்கட சனம் இருக்கிற இடத்தில உந்த கறுப்புத் தொப்பிக்கு என்ன வேல இப்ப, உப்பிடி ஒன்னுமில்லததுக்கு ஊரயே துரத்தி விடுதே இந்த அரசாங்கம், உத எதிர்த்து என்னதான் பன்னுறதோ"
போற வழியில சும்மா கிடந்த செல்லயரோட வாய் சொன்னதெல்லாம் உண்ம சத்தியம்
கிடக்கிற சாதி சனத்தோட நிலயப்பாத்திட்டு, சேர்த்து வெச்ச சோகத்தோட கண் கலங்கிப்போச்சு சிவப்பிக்கு, கத்திற சனத்தோட சேர்ந்து நெலவுக்கு கேக்குமட்டும் ஓ ன்னு ஒப்பாரி வெச்சிட்டு ஒண்ணுமில்லாமப் போயிடோணும் னு கிடந்திச்சு.
ஊரப்பாத்து வந்த சனத்தயெல்லாம் திருவிழாக்குப்போட்ட மோர்ப்பந்தல் தண்ணீர்ப்பந்தல் சக்கரைப்பந்தளோட வலயக்கட பொம்மக்கட இனிப்புக்கட பூக்கட புடவக்கட தட்டுக்கட என்டு போட்டுவச்ச பந்தளில இருத்திவச்சு வேண்டின உதவிகள செய்யுதுகள் காரக்குடி பேரூர் அமைப்பு பிள்ளைங்க.
கூட நின்ன மாரியப்பர் எட்டி நின்ன சிவப்பிகிட்டவந்து நடந்ததெல்லாம் சொல்லயில சிலையாக் கிடக்கிடக்கிற உருவத்தம்மன்னுக்கு உசிரு இப்பவோ அப்பவோ
"ஆறு மாசத்துக்கு முன்னால மட்டுமுனப்பக்கமா ஓர்ப்பாதுகாப்புக்கெனு கருப்புத்தொப்பிக்கும்பல இறக்கிச்சு உந்த அரசாங்கம், வாழிற இடத்தில பாதுகப்பென்னு உந்த சனத்தத்யெல்லாம் அடிமப்படுதினானுகள் அவனுகள், ஜனநாயகமாம் ஜனநாயகம், உப்ப இருக்கிற உலகத்துக்கு ஜனநாயகம் எப்பிடி சரிப்படும், இந்த நாட்டில நாங்க சிருபன்மாதன், ஓட்டுப்போட்டு ஆளுறதெல்லாம் அவனுகதனே, உந்த அரசாங்கத்துக்கு எதிர நாங்க போடுற ஓட்டெல்லாம் காணாமல் போகுது, அப்டி இப்பிடின்னு எப்பிடியாச்சும் ஒருத்தன் ரெண்டுபேர அனுப்பினாலும் அவனுகள் அங்க போய் கேக்கிரதுக்கெல்லாம் கோயில் மாடு மாதிரி தலையாட்டுரங்கள் இல்ல உடனே எழும்பிவரானுகள், என்னதான் செய்யிரதோ"
மாரியப்பர் படிச்சிட்டு சொல்லுறதிலயும் உண்மை யிருக்கு,
செல்லத்தாயி சொல்லிறமாதிரி ஜனநாயக நாட்டில சிறுபான்ம ஓட்டெல்லாம் செல்லா ஓட்டுக தான், நாங்கள் அனுப்பிரவங்களும் ஆளுங்க்கட்ச்சிதான், எங்கட சனத்துக்கு என்னதான் விடிவோ
"உவனுகள் பண்ணுற அநியாயத்தப் பத்திட்டு எங்கட பிள்ளங்க ஒன்னுசேர்ந்து எதிர்த்துதுகள், உதனலையே கருப்புத்தொப்பிகும் எங்கட சனத்துக்கும் அடிக்கடி பிரச்சின, எங்கட நிலமயப்பாத்திட்டு ஏதோ ஒரு புண்ணியவான் எங்கட பிள்ளயலிட கையில ஆயுதத்த தூக்கி குடுக்கயில பிரச்சன முத்திப்போச்சு"
மட்டுமுனயில யிருந்து வந்த பொன்னையர் நடந்ததெல்லாம் சொல்லயில, இனி வரப்போற பிரச்சனைய யோசிச்சு ஊரே நடுங்கிப்போச்சு
"உவனுகள் செஞ்சதும் கொஞ்ச நஞ்ச அநியாயமே, எங்கட பொம்பிலப்பிள்ளயல் வீதில போகேலாது, எதிர்துக்கேகிரவன நடுரோட்டில டயர் போட்டு எரிச்சானுகள், காவல்துறைக்கு சொல்லப்போன, சொல்லுறவன் அடுத்தநாள் பிணம், எத்தின நாளைக்குத்தான் எங்கட பிள்ளையால் இத பாத்திட்டு இருக்கும் அதன் அதுகளும் கிடைக்கிற ஆயுதத்தாள தட்டிக்கேட்டுதுகள், அதனாலையே எங்கட ஊர அடிச்சு துரத்திச்சு உந்த வீணாப்போன அரசாங்கம்"
பந்தளுக்க கிடந்த மட்டுமுனப் பெரிசில ஒன்னு பேத்தி போன சோகத்திலேயே இதையெல்லாம் சொல்லிடு கில கிடந்த மண்ண ஏறிஞ்சு சாபம் போட்டிச்சு
கிழவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம், ஏதோ வீண் வம்புக்கு எங்கட பிள்ளகள் ஆயுதம் வேண்டி அரச எதிர்க்குதென்டுறதும் உந்த பத்திரிக்கயல் சொல்லுறதும் அண்டப்புளுகு கூட நின்ன காரக்குடி பெரிசுகள் வந்த சனத்தத்த்பபாத்து கண் கலங்கி சொன்னது இதத் தான்.
வந்த சனத்தயெல்லாம் இறக்கி ஆறுதல் சொல்லீட்டு உருவத்தம்மன் கோயில் வாசலில கூடுது கூட்டம், காரக்குடி பெரிசுகளோட சேர்ந்த காரக்குடி பேரூர் அமைப்பு பிள்ளங்க, கூட்டத்துக்கு தலமா தாங்கிராறு ஊரு விதனயர் என்டு சிவப்பியர், கிட்டத்தட்ட பஞ்சாயத்து மாதிரி.
என்னதான் சட்டம் வந்தாலும் கண்ணக்கட்டி நீதி சொல்லுறத பாக்கிரதிலயும் மனசப் பாத்து மனசோட நேசத்தைப் பாத்து நீதி சொல்லுற பஞ்சாயத்தே மேல் செல்லத்தாயி அறிவச்சொல்லுறதும் உதத்தான்
கூடின பெரிசுகளெல்லாம் இரக்கமா கதைக்கயில, கூட நின்ன விடலைகள் கைகட்டி பாக்குதுகள்
“என்னயிருந்தாலும் எங்க சாதி சனமப்பா அதுகளும் வீடு வாசல இழந்திட்டு எங்கள நம்பி வந்திருக்குதுகள், உதுகளுக்கு வேண்டின உதவியால நாங்கதான் செய்ஞ்சு குடுக்கோணும், குலம் கோத்திரம் பாக்காம இந்த சனத்துக்கு எல்லாரும் உதவோனும்”
இரவிட நெரிசளோட சனத்திட சத்தத்தோட சிவப்பியர் சொன்ன வர்த்த கேட்டு நெலவோட சேர்ந்த காத்தும் கொஞ்சம் நின்னு பாக்குது
"நீ சொல்லுறதும் சரிதான் சிவப்பி என்னதான் மட்டுமுன சனத்தோட ஒட்டில்ல ஓரவில்ல எண்டாலும் அதுகல காட்ட இது நேரமில்ல"
இரக்கமா சொல்லுற பெரிய கருப்புக்கு காரக்குடி பெரிசுகலெல்லாம் தலயாட்ட கூடவே சுத்தி நின்ன மரங்களும் ஆட்டி சொல்லுது சம்மதம்
"நாளைக்கு நடக்கப்போற உருவத்தம்மன் விழாவ இந்த வருஷம் தள்ளிவெச்சிடுவம், திருவிழாக்கு வந்த கோஸ்டிகலயெல்லாம் முட்பணத்தோட திருப்பி அனுப்பீடுங்க, மிச்சமிருக்கிற கோயில் பணத்த வெச்சு நாதி யில்லாம கிடக்கிற இந்த சனத்துக்கு எதாவது வழி செய்வம்"
"நீ சொல்லுரது சரி சிவப்பி உதுகள் தங்கட மக்கள இழந்து இங்கவந்து கிடக்கயில திருவிழா அது இதென்ன அதுகளோட மனசும் நொந்து போகும், அதோட ஊரே இப்படிக்கிடக்கயில ஊருக்கே எழவு மாதிரித் தானே, ஏலவூரில திருவிழா செஞ்சா சாமியே எத்துக்காது, அதனால திருவிழாவ தள்ளிப்போட்டு பதினஞ்சு நாள் கழிச்சு பெரியபூசைக்கு ஏட்பபாடு பண்ணுவம், எதுக்கும் பூசாரிய ஒரு வார்த்த கேப்பம்"
ன்னு தலயக்கொஞ்சம் பூசாரி பக்கம் திருப்பயில ஊரே எடுத்த முடிவில இனி என்ன சொல்ல இருக்கு அதான் சாமிகுத்தத்துக்கும் மாரியப்பர் வழி சொல்லிட்டாரே, ஊரோட சேர்ந்து தீட்டில்லமா பெரியபூச பண்ணிட்டா ஊருக்கும் கெடுதல் வராது
ஆந்தயிட சத்தமும் நிலவிட பேச்சும் முடிய முதல் கூட்டம் கலயோனும், அவசரமா தீர்க்கொனும் இந்தப்பிரச்சனயல, கொஞ்சமா மூடிக்கிடந்த ஊர் வாய் மறுபடி திறக்குது.
"ஆறுமுகத்திட காணிக்கு அங்கால சுடலைக்கு எதிர்ப்பக்கம் கிடக்கிற பொறம்போக்கு நிலம் பிலாவடிப்பிள்ளயார் கோயிலுக்கு சொந்தம் அந்தக்காலத்துல ராசயர் எழுதி வெச்சது, இப்ப அது பரிபாலக சபேட்ட கோயில் சொத்தா கிடக்கு, சுடலைக்கு பக்கமெண்ட படியா கோயில் வேலைக்கு பயநில்லயெண்டு சும்மாதான் கிடக்குது இருபது வருசமா அதில இதுகளுக்கு குடிச செய்து குடுப்பம், எத்தின நாளைக்கு தான் கோயில்லையும், குளத்திலயும் இதுகல்ட சீவியம் போகும்"
சொல்லி முடிக்கயில, பிள்ளையார் கோயில் பரிபாலகர் செல்வமய்யர் இந்த புண்ணியத்தில தனக்குமொரு பங்கிருக்குமெண்டு உருவத்தம்மனப்பாத்து ஒரு கும்பிடு போட்டு உடனே சம்மதம் சொல்லீட்டு
“வேண்டின உதவிய நான் செய்ரன் சட்டப்படி எல்லாம் சிவ்வப்பியன்னே செய்து குடுத்தா சரி”
ன்னு சொல்ல, ஊரிட மனசப்பாத்த கோயில் மணி தான அடிக்குது அதிகாலக்காத்தில,
கிட்டத்து உறவு துரத்து உறவின்னு வந்த சனத்தில ஓரவுக்கரங்க அஞ்சு போக மிதமாயிருக்கிற இருபத்தஞ்சயும் காரக்குடிக்கு சொந்தமாக்கிரங்க ஒறவு பாக்காம
"சரியப்பா நாலயிலயிருந்து வேல நடக்கட்டும், வந்தசனத்துக்கு சாப்பாட்டுக்கு ஒரு வழியப்பாத்திட்டு வெய்யில் வர முதல் வீட்டப்பாத்துப்போவமப்பா நேத்தில யறிந்து தூன்காமக்கிடக்கு சனம்" அரத்தூக்கத்தில நிண்ட பெரியகருப்பு கட்டலயாக் கேக்க,
குடிச போடும் மட்டும் சாப்பாட்டு செலவும், பொரம்போக்கு நிலத்தில குடிச போடுரத்துக்கும் கோயில் காசோட எங்க உழப்பும் இருக்குமென்னு காரக்குடி பேரூர் அமைப்பு சொல்லயில எட்டிப்பாத்த சூரியனுக்கு தெரியுது களைப்பு
ஒத்த நாளில ஒரு கூட்டத்தில இத்தன முடிவ எந்த சனம் ஒத்துப்பாக, அதுதான் காரக்குடி மண்ணோடயும் எங்க சனத்தோடயும் பெரும, சாதீன்னு சொல்லி வெட்டிக்கிருவாக ஒட்டிக்கிருவாக, ஆனா பிரச்சனென்னு வந்தா ஊரே சேந்திருவாக அதுக்காக சாதிய விட்டுக்கிற சனமில்ல இந்தசனம், எல்லாம் உதவின்னு செய்வாக ஒட்டுறவு வெச்சுக்க மாட்டாக
இருந்தாலும் வழா வந்த சனத்த ஊரோட சேத்துக்கிற மனசு எத்தின சனத்துக்கு வரும், உருவத்தம்மன் கிடக்கிற ஊருக்கு அப்பிடியொரு நல்ல மனசு
அரத்தூக்க பெரிசெல்லாம் வீட்டப்பாத்துப்போகயில, விசயம் தெரிஞ்ச சுகுமாரன் கோஷ்டி கோயிலப்பாத்து வருது,
வந்தசனத்துக்கு வேண்டின சாப்பாட்டுக்கு வழிய உதுகள் பாக்கட்டுமெண்டு பெரிசுகளெல்லாம் சொல்லயில மச்சான் கூட்டத்துக்கு வருது வேல, பேரூர் அமப்போட சேருது மச்சான் கூட்டம். விடலப்பசங்க பஞ்சாயத்து தொடருது.
இந்த சனத்துக்கு வந்த நிலமா தான் நாளைக்கு எங்களுக்கும் அதுக்கு முதல் ஏதாச்சும் பண்ணனும், உதயெல்லம் உடனே நிப்பட்டோனும், நாளைக்கு நாங்களும் ஊரவிட்டு போற நெலம வந்திரிச்சென்ன
மச்சான் கூட்டமும் பேரூர் அமைப்பும் சேர்ந்து கேக்குது கேள்வி தங்களுக்குள்ள,
ஊரக்காக்காத்தன் எங்க அமப்பையே ஆரம்பிச்சம், இப்ப உந்த அரசாங்கம் பண்ணுற அநியாயங்கலப்பாத்த எங்களால என்ன தான் செய்ய முடியும்
உதவிக்கு வந்த விடலக்கூட்டம் ஊரக்கப்பத்தப்பாக்கயில கூடகேட்டு நின்ன பொன்னையர் சொல்லுறாரு அதுக்கு வழி
மட்டுமுனையில நட்ன்ததுகலயெல்லம் அறிஞ்ச மனுசரிவர், அதனால மனுஷன் வழி சொன்ன சரியாத்தானிருக்கும்
சுகுமாரன் சொல்லயில வேகமா வந்த வண்டியொன்னு அடிக்குது பிரேக் கோயில் வீதீக்க.
பனை வளரும்....

No comments:
Post a Comment