Friday, 29 May 2009

பனையோடு விளையாடி... அத்தியாயம் 1


அத்தியாயம் 1

எங்கேயோ தொலஞ்சு போன எல்லைகோடு, வர்த்த கூட தைரியஞ் சொல்லா ஞாபகங்க, உணர்வால செத்துப்போன உறவுக, விளையாட்ட தொட்டில் கட்ட விபரீதமா போன இன விதக, மண்ணுக்கயின்னும் மிச்சமா போக, இதையெல்லாம் சுமந்து கொண்டு, பனங்காட்டுபக்கமா பத்தியமா கட்டின வண்டி பகத்து ஊரு திருவிழாக்கு போறதா போல செம்பாட்டுமண்ண வாரித்துளச்சு வருது பட்டணத்து வண்டி படு வேகமா.


“ இது என்னடா கூத்தாகிடக்கு! சனத்துக்கு குடிக்க கஞ்சிய காணோம் உவனுங்க பூங்கா கட்டபோறாங்களாம் அதுவும் தொழில்நுட்ப பூங்காவாம்.”
சந்த கடையில சனங்க சத்தத்தில கீரயம்மா வெள்ளையம்மா கூவிந சத்தம் மட்டும் பலமா கேட்ட மாதிரி ஊருக்கு வரப்போற உவதிரவத்த பத்தி உண்ணதமா ஒப்பிச்சார் ஊரு பெரிசு மாரியப்பர்.


முப்பது வருஷமா மூச்சபிடிச்சிட்டு முக்காளி அம்மனோட சேர்ந்து முழுசாப்போராடியும் நாலு வருஷமா சாந்தியும் சமாதானமும் மட்டும் சாதாரணமாய் கிடக்கிது. மனுஷனுக்கு வாழ வழியக்கானோம்.
ஆடிச் செவ்வாய்க்கு சோறு வெச்ச காக கூட்டம் மாதிரி வண்டியே கரையிது நாட்ட பத்தி.


இதையெல்லாம் கேட்டுக்கொண்டு வஞ்சத்தில போனதெல்லாம் வார்த்தையோட போகட்டும் வாழ மட்டும் வழி கிடைக்கும் இந்த வாழிற சனத்துக்கு தனக்குள்ளேயே தர்மம் பாடிட்டு தலைசாயிரான் கொஞ்சம் கலைமாறன்.





உடல உருக்கிற வெய்யில், நீண்ட இடைவெளியில கூட கானல் நீரா மாறிப்போக, ஓராயிரம் எல்ல பூமிக்கு ஒத்தபனை மட்டும் பதில் சொல்ல பக்கவாத்தியமா கள்ளிச் செடியும் கத்தாளகண்டும் செம்பாட்டு மண்ணுக்கு பெரும சேக்குது.


மத்தியான மசக்கயில ஒத்த மனுஷன் நடைகாணா கால்நடை மட்டும் கட்சிதமாய் போக அண்டவெளியில நிசப்த பூமியில கேட்கிது ஒருசத்தம் சாஞ்சு கிடந்த மாறனுக்கு விழுது இடி நெஞ்சில,


"உது காலம் காலமா இங்க கேட்ட சத்தம் தனப்பா இப்ப எல்லாம் மாறிபோச்சு, அது வேற ஒண்டும் இல்லையப்பன் உவன் டிரைவர் அடிச்சா பிரேக் தான்.."
நெஞ்சு பயத்த காலத்தில தூக்கி போட்டுட்டு சொன்னார் மாரியப்பர் நடுங்கின குரலில.


விழுந்த அடியும் கேட்ட சத்தமும் புத்திக்குள்ள கிடக்குது இன்னும், எல்லாத்தையும் கண்நீரில கரச்சிட்டு மசக்கயில மடிசாயுது ஊருக்கு போற வண்டி.


“ யாரது எங்க செம்பாட்டு மண்ணகருப்பு கோடு போட்டு ரெண்ட பிரிச்சது”
பஸ் நிலையமா நிண்ட ஒத்த பனைமரம் ஊருக்கு போட்ட கருப்பு வீதிய பாத்து கேக்க, செல்லதாயி சொன்னதிலையும் ஏதோ அர்த்தமிருக்கு


“ கருப்பு தொப்பி போட்ட வெள்ளைகாரங்க தான் சும்மா கிடந்த எங்க பூமிய சுமயில்லமா பிரிச்சது”
கடல கிழிச்சு வார கப்பல் மாதிரி கானல் நீர கிழிச்சு கரைதேடி வருது ஒண்டரை மணி வண்டி ஊர பாத்து “காமினி பஸ் செர்விஸ்"

..............................................

(ஊருக்குள்ளயிருந்து...)

“ஒத்த பனைக்கும் ஒத்தையடி பாதைக்கும் ஊருக்குள்ள பேரேண்ட காரக்குடிதன், ஆனா இதையெல்லாம் பாகொனுமெண்ட ஊருக்க போகோணும் போடினடைய பத்து கிலோமீட்டர்.”
தங்க ஊரு பெருமைய மூலக்கடயில அவுத்து விட்டாரு ஊரு பெரிய மனுஷன் சிவப்பியர்.


“பதினெட்டு வருசத்துக்கு முன்னால ரெண்டு பிள்ளையையும் நாட்டுக்கு குடுத்தியே சிவப்பி; இன்னும் ஒரு வழிய காணோம்”
பழைய பாயில ஏதோ போனத போல சிவபிகிட்ட புறுபுறுத்த செல்லயருக்கு கண்ணுல தெரியுது ஏக்கம்.


“என்ன இருந்தாலும் பனமரத்து கிழயிருந்து உவன் பள்ளன் இறக்கிற கள்ளக் குடிச்சு காரமா ரெண்டு வெங்கயாத கடிச்சா பின்னேர வெய்யில் பனியா குளிருமப்பா”
இழந்து போன சோகத்த மது போத கதையில கொஞ்சமா கரச்சறு சிவப்பி.



“உண்மைதான் சிவப்பி இந்த யாழ்ப்பாண எல்லேக்கையே காரைக்குடி கள்ள அடிக்க எந்த ஊர் கள்ளிருக்கு, பனைய மூடிக்கட்டி அடுத்த நாள் காலையில இறக்கிற பதநீர்ல ஒரு சொட்டு வினாகிரி விட்டு பின்னேரத்தில ரெண்டு சொட்டு நாக்கில விட்டா கரும்பும் கசக்குமப்பா”


பின்னேரத்து மகிழ்ச்சிக்கு பாட்டு பாடினாரு செல்லையர்.

.....................................................



“காரைக்குடி வந்திரிச்சி இறங்கிரவங்க இறங்கிங்கப்பா”
எத்தின வருசமாச்சு பஸ்ல இப்பிடியொரு பேச்சுகேட்டு நடத்துனர் சொன்னதும் இத்தன நேரமா கேட்ட தமிழ ஒரு நொடி நினச்சிட்டு நிம்மதியா சுவசிச்சான் சமாதான காற்ற.


எங்க மண்ணிட ஒவ்வொரு கூரையும் அணுவணுவாய் அலசிப் பார்த்தவன் இவன்தான், உடைஞ்சு போன கட்டிடத்தையும் இடிஞ்ச வீட்டிட எச்தையும் வெட்ட வெளியில மிச்சமாபர்திட்டும் நம்ம பூமியில இனி எதிரவன் இல்லையெண்ட களிப்பில் ஆசனம் விட்டு எழுந்தவன் மாறன்.


கருத்த உடல் சுருண்டு வளர்ந்த முடிகளுக்கிடையில் செல்லமா எட்டி பார்த்த சின்ன சின்ன நரை முடி, கோவக்கார கண்கள், சின்ன வயசில வீட்டு பழசு மூக்குபிடி மூக்குபிடின்ன மூக்க இழுத்த கிளி மூக்கு, வரிசை சொல்லி கொடுத்த பற்கள்ள கடவாய் பல் மட்டும் தெத்தி, முறுக்கியும் முறுக்காத ஒரு மீசை, ஒரு வாரமா சவரம் சாயாத தாடி, எங்கேயோ மரபு கவிதையில் வாசித்த மாதிரி அகண்ட தோல் பட்டை விரிந்த மார்பு, ஒற்றையடிப் பாதேலையும் சாத்தியமாய் பாயும் கால்கள், ஆயுதம் ஏந்தியே மரத்துப்போன கைகள், இதெல்லாம் இருந்தும் பல நாளா பட்டினி போட்ட உடல்,


மேலேயிருந்த கருத்த பைய எட்டி எடுகயில கிழயிருந்த செருப்பு ஏதோ புறுபுறுக்க, மெல்லமா பார்த்து நொண்டிய நடக்கயில பேருந்து நடத்துனர் சொன்னான்

“நேரமாச்சு கெதியா இறங்கண்ண எண்டு”



வண்டி கடைசிப்படியில கால வெச்ச மாறனுக்கு இந்த பூமியில வைக்க தயக்கம் ஏனோ,


“இந்த எல்லையின் ஒவ்வொரு மண் பிடியிலும் விதைக்கப்பட்ட ஒரு உசிரின் மூச்சிருக்கு, ஒரு வருசமா ரெண்டு வருசமா முப்பது வருசம் முழுசா முடிஞ்சும் மூத்த தலைமுறை கண்டதை இன்னும் காணோம்


எப்படி என் கால்கள் இந்த பூமியை தொடும்,


வண்டியில நிண்டு வரலாற ஒரு கோடு போட்டு சிந்திய இரத்தமும் சிதறிப்போன போன உடலும் இந்த மண்ணுக்கு தானே மாதிரியா போயிற்றே. மாண்பு மிகு பூமியில் மதிப்பில்லா என் கால்கள் எப்படிப் பதியும்.

போர் முனையில் கால் இழந்து, அரைஉசிர கையில பிடிச்சு மீதி உசிர குப்பிக்கு குடுத்த என் குப்பன்கள் சாய்ந்த மண் இது, நான் சாயினும் என் கால்கள் மிதிக்கப்போவதில்லை.

எம் மண்ணின் இனம் காக்க வீட்டுகொரு தலை கொடுக்க குத்த வெச்ச அக்காவ அம்மா கையில குடுத்திட்டு சிட்டாய் சிப்பாய்க்கு போன தம்பியும், குட்டி தம்பி நீயிருட உன் அக்கா நானிருக்கேன்னு பாசத்தின் தவிப்பா படலேக்க புதைச்சிட்டு எங்கெங்கோ போய் ஏற்றதெல்லாம் கற்றுக்கொண்டு மிச்சமிருந்த பாசத்த துப்பாக்கி முனையில துளைசுப்போன என் தங்கையின் உடலை சர்வமும் கொண்டு மிதிச்சு செல்வேனோ.”



கண்மூடி ஒருநிமிஷம் நிகழ்ந்ததெல்லாம் நினைத்திருக்க கண்டவன் அனுப்பின கார் மேகம் சொல்லிச்சு

" விதைக்கப்பட உன் இனம் புதைந்து கிடப்பது எதிரவன் மிதித்த பூமியல்ல அவன் சுவாசித்த காத்திலெண்டு"



இத்தனையும் நினச்ச பின்பும் மாறாத மனதுக்காய் மண்டியிட்டு முத்தமிட்டான் மாவீர மண்ணுக்கு.


"மணியண்ணே ரைட்"
தமிழனுக்காய் இருந்தும் மறையாத ஆங்கில கலப்போடு வேகமாய் பறக்குது காமினி பஸ் சேர்விஸ்.



விளையாட்டு தொடரும்....

No comments:

Post a Comment