ஆளும் அரசியல் கட்சி
அரசியல் அரியாத்தலைவன்
தொங்கும் வாக்குச்சாவடி
அடிக்கடி தொலையும் வாக்குப்பெட்டி
வன்முறைக்கான தேர்தல்காலம்
தேரிய வருமானம்
இத்தனையிருந்தும் தேடுகி றோம்
இடையில் ஒரு ஜனநாயகம்
எங்கே ஜனநாயம்?
ஒ
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவன்
நீ தானா?
வாக்குகள் மட்டும் உன்னுடயாத?
கட்ச்சிகள் உனக்கில்லையா?
மக்களின் தேர்வென்ராய்
சரி
எதனடிப்படையில தேர்ந்தெடுப்பது
பணத்தின் அடிப்படையிலா? பதவியின் நோக்கத்திலா?
வாக்குகளுக்காக அரசியல் செய்யும் கட்ச்சிக்காகவா?
அறியாமையை தூண்டும் தலைவனுக்காகவ?
இல்லை
ஒரு பிடி அரிசிக்கா? கைப்பிடி சீனிக்கா?
மா விலைக்கா?
இல்லை
மாபெரும் போராட்டங்களுக்ககவா?
புரியவில்லை இந்த பாமரனுக்கு
புறப்படுகிறேன்
அடயலாட்டையை மறக்காத
குழப்பங்கலோடு வாக்குச்சாவடிக்கு
பாதியிலே ஒரு நன்கொடை
பரவாயில்லை
சின்னம் மட்டும் ஞாபகம்
வாழ்கையோடு போராடும் எனக்கு
எதற்கு அரசியல்? என் இந்த வாக்குரிமை?
சொல் ஜனநாயகமே....
உனது நாட்டில் வாக்குரிமை
மக்கட்பண்பாம்...
இந்தப்பைதியக்காரன் புரியவில்லை
உன் நாட்டில் மக்கட்பண்பு
வாக்குரிமை மட்டும்தானென்று...
எனக்கோ அறியாமை
எவன் எழுதிவைத்தான் ஏட்டை
விதிமுறை சொல் உன் தெரிவிற்கு...
ஆயிரம் சட்டம் வாக்குச்சாவடிக்குள்
தேர்ந்தெடுக்கப்படுபவனுக்கு சட்டம் தான் என்ன?
மூடி மூடி மறைத்தது போதும்
முழுதாய் உன் விதிமுறை சொல்...?
வேட்டிக்கும் சட்டைக்கும்
அரசியல் செய்வதா?
சாதிக்கும் இனத்திற்கும்
தலைவனை தேடுவதா?
புரியவில்லை உன் விதி
இந்த அறிவில்லாதவனுக்கு
ஜனநாயகமே எது நீ?
தேர்தலுக்காக மட்டும் கும்பிட்டவனை
பாரளுமன்றம் அனுப்புகிறோமே அதுவா?
அரசியல் அறியாதவனை
உலகாரசியலில் சம்மந்த்தப்படுத்துகிரோமே அதுவா?
அறியாமை கண்டவனை
யாப்புகள் படிக்கச்சொல்கிறேமே அதுவா?
தலைவன் என்றவனை
தலையில் சுமக்கிறோமே அதுவா?
எதில் இருக்கிறாய் நீ?
அது சரி
ஜனநாயகத்தில்
ஏது தலைவன்? ஏது கட்சி?
ஒ
மக்களின் பிரதிநிதி தான்
தலைவனோ
பாமரனின் சேவைச்சங்கங்கள் தான் கட்ச்சிகளோ?
மன்னித்து விடு
புரியவில்லை இன்னும்...
புரட்சிகளின் குழைந்தயா நீ?
அமெரிக்கசுதந்திரப் போர் உன் தாய்
ரஷ் யப் புரட்சி உன் தந்தை
பிரெஞ்சு புரட்ச்சி உன் செவிலி
நீ நோக்கங்களுக்காகப்பிறந்தவன்...
கலியுகத்தில் நீயும் கலங்கமா?
பெற்றவன் புரட்ச்சிஎன்பதால்
ஆயுதக்கலாச்சாரம் மறக்கவில்லையா?
நோக்கம் மறந்த நீ இனி எதற்கு...
கலக்கப்பட்டவனே எதற்கு அரசியலில் பாரமாய்?
மறைந்து போ ஜனநாயகமே
நாய்கட்டு தான் நீ இனி..
அறியாமை ஒழிந்து
அரசியல் அறிந்து
தவழ்ந்து நட
மக்கா நீ புதிதாய் படைக்க
ஒரு அரசியல்...
பொதுநலம் கடைப்பிடி
கொள்கையில் மாறாதே
மனிதம் தேடு
பிரதிநிதி தேர்வுசெய்
அரசியல் கல்
வரலாறு படி
சிந்தனையில் செயற்பாடு
அறியாமை ஒழி
எழுந்து நட...
சீ போகட்டும்..
எனக்கென்ன..
நடப்பது நடக்கும்...
என்னால் முடியுமா?...
இவன் பைத்தியக்காரன்...
வார்த்தைகளை கொலைசெய்
ரகசிய ஒப்பந்தம்..
அரசியல் நகர்வு...
தேச தந்திரம்...
என் நாடு...
பிரதிநிதி சொன்னால்
புரட்சி கிளப்பு ஆட்சியிரக்கு....
பாரளுமன்றம் செல்பவன் உன் சேவகன்...
அவன் பேசுவது உன் வார்த்தைகள்..
ஆட்சி உன்னுடையது..
நாட்டுக்குள் தந்திரமா உனக்கும் தெரியவேண்டும்..
வெளிநாட்டு கை குழுக்கள்கலா எதற்காக?
அறிந்து கொள்
உன் ஆட்சி
உன் மக்கள்
நீ தான் ஆழ்பவன்
நீ தான் அரசு
ஒவ்வொரு தனி மனிதனும்
என் கடமை
என்றிரு
தானாய் பிறக்கும்
புதியதொரு அரசியல்
இனி....
Monday, 25 May 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment