Tuesday, 26 May 2009

கல் அன்றெடு காதல் செய்

திங்களொடு பரிதிதனில்
நின் விழி சேர் மருவில்

பாலொடு தேனினிது
பருவமுன் உடல்தொடுதின்

காரிருள் நீளருவம்
நறுகூந்தால் நிலந்தொடுதின்

புன்னகை தொடு வெட்கம்
காதலிவன் கை தீண்டின்


மஞ்சமொரு பஞ்சு தலை
யணைத்தொரு துணையெனில்
கன்னியிவள் கன்னமதில்
தொடரிடு முதல் முத்தம்


வெட்கமொரு சேலைதனில்
தொலைத்திடு விரல்நுனிகள்
சொல்லுமொரு ரகசியமது
பொன்னியின் மறுதலை


அச்சமோடு நாணந்தனில்
கொன்றிடு பெண்மையது
மடத்தோடு பயிர்ப்பதை
செப்பிடு சீதை என

முத்தமது இச் என
மறைத்திடு நாச்சுவை

கலையது கொள் என
காண்பது விழிச்சுவை

வருடலின் தொடுவென
நினைப்பதில் மெய்ச்சுவை

குழலது வாழ்மல்லி
உயிரொடு நறு மணச்சுவை

காதலோடு காமஞ்செய்
உணர்வது ஜஞ்சுவை

கவியொடு உவமைகள்
சேர்ந்தெழுதென்றில்
நின் அழகோடு இறகது
வரை ஓவியம்


நெற்றி யொடு வழிநீர்
அழித்திடு திலகமெனில்
ஒட்டுமொரு துடிஎன
சேரது உயிர்க்கொடி


தொடுதலின் அணை நாளிகை
தொடர் திருடு மதில் சேர்க்கை


இரவது பகலது
இறை வரை மூர்க்கம்
காதலோடு தீண்டலது
கடை வரை இலக்கியம்


எத்தனை நிமிடமது
கையொடு அணைத்தெழ
அத்தனை நிமடமென
கண்ணீர் கரை காதல்

மரண நொடிதனும்
செவ்வென இவ்விச்சை....


செய்தது செய்தென
மறியாத மஞ்சனை...

பஞ்சொடு கமலமததில்
இலக்கண மறை 'எச்' சங்கள்
வாழ்வோடு வாழ்தனில்
சூளிருள் 'மச்' சங்கள்

தொடுதலில் தீண்டலில்
தொடரிடு சுகமிது
பிறப்பித்து தொடரெனில்
தொடுதென முதல் சுகம்


நின்னொடு நின்னுயிர்
காப்பதும் காண்பதும்


களைந்திடு கவலையது
கனிந்தொரு தொடர்காதல்....

நின்னொடு னானது
தொடுப்பது கையன் றில்

உயிரொடு உடலது
பிரிந்திடு உறுதி

அன்றில் நின்றன்
ஆத்மாவின் நிழலொடு
தொடர் வாழ்.....

No comments:

Post a Comment