Monday, 25 May 2009

எழுதிக்கொண்டே அழுத எழுதாத என் கவி...

எழுதாத என் பேனா எழுதுகிறது உன்னை பற்றி
“ அம்மா ”

மாதம் பத்து சும்மந்து தள்ளி
மண் தொட்டு வளர்த்தினால்
தாய் நீ பற்றி எழுதாமல் போனேனோ...

தொட்ட மண் கையில் இல்லை சுமந்த வயிறும் அருகில் இல்லை
போனால் போகட்டும் எண்டு பேனாவிடம் சொல்லிலேனோ...

உடல் தந்து உயிர் சுமந்து உருவஞ் செஞ்சு பெத்த பிள்ளயேன்னு பாசம் காட்டி பரிவு சொல்லி
பொத்தி பொத்தி வளக்கிறண்டா என்னு- சொல்லி
சொல்லி வளர்த்தினால் பாசம் மறந்து தொலைந்து போனேனோ...

அரைக்கோதுமைக்கு ஒரு அரிசி மா எடுத்து சுடுதண்ணி உப்பு விட்டு பதமா குளைச்சுவச்சு
தேங்காய் பூவோட நீ செஞ்சு தந்த புட்டு , நாவில இல்லேன்னு எழுதிட மறந்திலேனோ...

காலையில கண்விழிச்சு பள்ளிக்கு அனுப்பயில நெனச்சு நின்ன என்னென்ன..
வங்கியில வேல செஞ்சு வருத்தபடமா பாப்பியோட..
மருத்துவம் படிச்சிட்டு கடைசியில காப்பனோ
இயந்திரத்தோட இணைச்சு நின்னு இயல்பா உன்ன அனைப்பானோ
அத்தனையும் தொலச்சிட்டு பிரிஞ்சேனே வானத்தில..


அழுத கண்ணோட பண்டாரநாயக விமானநிலையம் அனுப்பி வக்கயில உன் மனசுசொன்னது எத்தனையோ..

அதனையும் கேக்குதம்மா ,

கைதனியா போறியே கவனமா போய்டுவாடா...
வளர்ர உடம்புடா வேளா வேளைக்கு சாப்பிடு...
பனிக்குள்ள நிக்காத தடிமன் பிடிச்சிடும்...
ஒழுங்கா பாடிட அம்மாவ மறக்காத...
வார்த்தையில சொன்னதெல்லாம் மனசுல நிக்குதேம்மா

காலமெல்லாம் உன்ன மனசிலேயே நினச்சதினால்
கவிதேல எதுக்கென்னு எழுதாமல் போனேனோ..

பிரிஞ்சாலும் நெனச்சுக்க என் நெனபிருக்கு உன்கிட்ட
அது கூட இல்லாம நிக்கிரேனே ஒத்தயில

பக்கத்தில கார் இருக்க படுத்திருக்க மெத்தை இருக்க
பருவம் இனித்திருக்க பணமும் கூட இருக்க
கடைசியா பார்த்த உன் அழுத முகந்தனே நெஞ்சில...

மண்ணும் எனக்கிருந்து மானமும் துணை நின்னா
காலம் முழுதும் அணச்சிருப்பேன் என்னோட...

இனமே இல்லயேன்னு அழித்தொழிக்கையில பாசம் ஏத்துகிடன்னு ஏக்கத்தோட தள்ளி வெச்சியோ...
பால்குடுக்க தாயிட முலைகூட ரத்தம் மென்னு உன் ரத்தம் குடுத்த என்ன தொலச்சிட்டு நிக்கிரியோ...
உசிரிட அருமை தெரிஞ்சது நீ ஏன்னு உசிரா பாத்த உன் மகன உசிரோட மறச்சு வெச்சியோ...

பக்கம் மட்டும் இல்லேன்னாலும் உசிரா இருக்குன்னு நிம்மதியா உறங்கிறியே
அதுகூட இல்லாம கையில கிடக்கிதே கை குழந்தயொன்னு பிணமா...

கத சொன்ன பாட்டு சொன்ன வரி வரியா பாடம் சொன்ன என் கவிதா உன்னக்கெங்க புரிஞ்சிடுமோன்ன செருக்கில சொல்லிலனோ உன்பெரும...

கடைசியாய் எழுதினேன் கண்ணிறோடு ஒரு கவிதை , அம்மா உன க்கு..

மறந்தது என் பேனா,அம்மா உன்ன மட்டுமல்ல...
உணர்வால செத்து போயும் உசிரோட புதைஞ்சு போயும் மனசாட்சி ஏதுமின்றி மரத்துப்போன என் மண்ணையும் தான்

மறக்கிறேன் மறைக்கிறேன் இத்தோடு உணர்வை ,தொடரட்டும் இயல்பு மறைக்க பட்ட உணர்வுகளோடு, வழமை போல்....

No comments:

Post a Comment