Wednesday, 8 July 2009

உனக்குள் நீயே பெண்ணே




உன் மரபுகள் மாற்றுகையில்
மருபுள்ளியில் மனிதம் தேடுகிறது
கலாச்சாரம்


உன் மை விழிகூட
கரையாமல் கண்ணீர் சிந்துகிறது
நாகரீகம்

குனிந்து கிடக்கும் தலைதூக்கி
உன் விம்பம் பார்க்கச்செய்கிறது
நிழல் நீ என நிலம் பார்க்கையில்
நிஜம் எதுவென ஆகாயம் தொடச்செய்கிறது
ஏளனம் ஏமாற்றம் முடிவை தருகையில் முக்கால
முடிவென பெருமிதம் காண்கிறது
ஆணினமே வணக்கம் நாகரீகப்
பெண்களிடம் நீ காட்டும் பண்பிற்கு

சீதனம் கள்ளிப்பால் சிலேடை
அடக்குமுறை சுயசிந்தனை தொழில்
ஒருகால் பேச்சு ஒருகை சுதந்திரம்
வரைமுறை தாலி ஐயோ பாவம்
அரைநூரண்டுகளாய் ஆண் மேல் குற்றம்

சீதனம் அம்மாவிற்கு
அவசரமாய் சமஞ்ச அக்கா விற்கு
அப்படியே அடுத்து சமயும் தங்கைக்கு
எடுத்த பிடியில் ஒரு கை கூடயில்லை
ஏதோ ஒரு மோட்டாரில் உல்லாச பயணம்
பாவம் சுமந்து பழி கொண்டு

கள்ளிப்பால் கையிலில்லை
கையிருப்போடு கணக்குப்போடும்
சாயங்கால முற்றம் விலை பேசும்
பெண்ணின் கற்புக்கு

அடியே பாக்கியம் பக்கத்து வீட்டு
அம்புஜம் பொண்ணு போறாளாம்
வேலைக்கு
போற இடத்தில
பல் துளக்கிக்கு விளம்பரம்மாம்
வியாபாரி பேசாமலா இருப் பான்
விலை

ஊரு சொல்லுது ஊரு வாய்
அத்தனைக்கும் வித்துக்கள்
மணி மணி முத்துக்கள்
எங்கள் வீட்டு அடுப்பங்கரைகள்
பத்தியம் மட்டும் பாவமாய் போன
வீட்டு எஜமான்கள்

பாவாடையில் முடிஞ்சுவெச்ச பத்து காசு
பாளையத்தம்மனுக்கு நேன்துவேச்சு
கடாவெட்டிப் பொங்கள்...
பக்கத்து வீட்டு பசிச்சவாயிறு
பரவாயில காயட்டும்..
அவுசாரி பட்டம் சொல் கொடுக்க
ஒருவாய் சோறில்லா கை கொடுக்க

உன் விதிமுறைகளில் வழுவில்லை
உன் விடுதலையில் காரணமில்லை
ஏதோ கொடுக்க ஏதோ வாங்க
வந்து விட்டது பெண் விடுதலை

உடல் உள்ளம் உனக்கென செதுக்கப்பட்டது
ஆண் வேறு பெண் வேறு
அடிமைத்தனம் இதுவல்ல

பருவங்களின் வெளிப்பாடு பொதுவானது
தாய்மை புட்டிப்பால்
நாகரீகம் இதுவல்ல

கடின உழைப்பு
கருவோடு அலங்காரம்
அடிக்கடி சண்டை
அவசர முடிவு

தாய்மயில்லா பெண்மை
தலைமுடியில்லா கூந்தல்
அணைப்பில்லா படுக்கை
அவசிய தீண்டல்
பொறுப்பில்லா கல்வி
பொருமையில்லா மனை
கட்டவிழ்த்த சுதந்திரம்
கற்பு கடைவீதி
ஆசையில் ஆட்சி
அரியணையில் மூடநம்பிக்கை

அவ்வப்போது இடையூறு
ஐயயோ ஆணாதிக்கம்

இத்தனையும் கொடுப்பவனே
பண்ணுகிறான் ஆணாதிக்கம்

உண்மையில் பெண்மையை
உணர்திலன் அவனே

உடலோடு உள்ளமும்
பெண்மையை உணர்தவன்
காப்பான் என்றும்
மரபுகள் மாறது
இது என்ன பெண் அடிமையா?
ஆண் ஆதிக்கமா?

No comments:

Post a Comment