
முழுத்திங்கள் முகம் பதித்து
கண்களில் மின்னல் துளைத்து
செவ்விதழ் உதடுகலென
நீள்தண்டில் மூக்கின் அழகெடுத்து
அவள் எழில் ஓவியமாய்....
தோரணையென ஒற்றை ஜடை
பின்னலோடு பின்னழகு தொட
இளம்பருதியில் வழியும் நதியென
நேர்வகிடின் நெத்திப்பட்டம்
அவள் நெற்றிப்பொட்டை முத்தமிட....
கூந்தல் மல்லிகை வாசம்
உடல் சந்தன வாசம்
கைகள் மகரந்த கோலம்
கால்கள் கோலம் தொட்ட கொலுசு
அவள் நடையில் நடை பழகிடு அன்னம்....
மௌனங்கள் ஆயிரம் மொழியென
புல்லங்குழால் மெல்லிசை குரலென
காலைப்பனித்துளியில் ஞாயிறு வெட்கமென
மின்மின்னிக்காட்டில் தொட்டச்சினிங்கியென கண்சிமிட்டல்
அவள் ஆதி தொடர் அந்தம் சொல்லிடும் கலை....
மார்பு தொடும் நழுவலென சேலைத்தலைப்பொடு
முத்தமிடும் முத்துக்கள் மாலையாய் சண்டையிட
இடைதொடு தடம் பதித்த பாவடை நாடாவோடு
இடையில் கவிபடிக்கு ஒட்டியாணம் யுத்தம் செய்ய
அவள் ஆபரணம் தொடும் ஆடை நுனிகள்.....
காதுகள் ரகசியம் சொல்லி கன்னங்களை முத்தமிடும் தோடு
குரல்வளை கவிபாடி கழுத்தை கொலை செய்யும் மாலை
கால்கள் உன் துள்ளல் சொல்ல இசையமைக்கும் கொலுசு
கைகள் உன் மறைவை ஒழித்து நின்று ஒலியெலுப்பும் வளையல்
அவள் பூட்டிய நகைகளே நாணம் கொள்ளும் அவள் புன்னகை....
மார்கழி குளிரென அடிக்கடி சிலிர்ப்பு
மாங்காய் கடியென அடிக்கடி நாக்கு
காதல்வேதமென அடிக்கடி உச்சரிப்பு
காற்றோடு நாணலென அடிக்கடி நிலம்தேடி
அவள் உணர்வுகள் புரிந்த மெய்யென நான்...
துளிர் காட்டின் துள்ளலென மான்குட்டி
துப்பட்டாவில் இறக்கை விரித்த பட்டம் பூச்சி
தெளித்திடும் புன்னகையில் ஆயிரம் நச்சத்திரம்
சேலை நுனி தலை மறைக்க தோகை விரித்த மயில்
அவள் பிரம்மனின் கண்கள் வரை சித்திரம்....
கொடிபடர் மெல்லிடையவல்
கொஞ்சும் மழலையவள்
தத்திடும் பறவையவள்
கள்ளமில்லா புன்னகையவள்
கவிதை வெட்கமவள்
இயல்பில் அவள் அவள்..........
வெண்ணிலா அருகமர்ந்து
தூக்கம் தட்டியெலுப்பி
காற்றோடு கண் விழிக்கையில்
மெல்லிய புன்னகையோடு வழ்வுதொலைந்தது
அவள் முதல் முறை நெற்றி முத்தமிட்ட நிமிடம்......
தூக்கம் தலைதடுவ மெத்தையெனை
யழைக்க வாவென கனவு வர
மொத்தமாய் உன்னழகு தூக்கம் கெடுக்க
சட்டென கண்கள் கசக்க
அவள் தொலைந்த மணித்துளிகள் கசப்பென...
அன்றொருநாள் அந்திமழை சாரல் செய்ய
செல்லமாய் துளிகள் கூந்தல் நனைக்க
கோபமாய் நெற்றிவழி நீர் துடைக்க
கள்ளமாய் இதயம் கொடு என அவள் கேக்க
அவள் காதல் வரமென என் இதயம் கொள்ளை....
நதியென கூந்தல், நிலவென திலகம்
முகிலென ஆடை, உணர்வென வெட்கம்
உள்ளமென புன்னகை, அழகென சினுங்கள்
அறிவென மௌனம், காதலென தேடல்
அவள் அருகிருந்த நாட்கள் தொலைய...
கண்களில் பட்டும் கைகள் தொடாத புள்ளிமான்
துள்ளி ஓடும் தடம் பதியாத தனித்தீவு
பிரம்மனின் நிலவொளிச்சேர்க்கயின் சிற்பம்
அழகென உயிரெடுத்து அகிலம் வந்தது இவளென
அவள் தனிமையின் ரகசியம் எதுவென....
வில்லொடு புருவம் அவளது மீனென கண்கள்
அருகில் இருந்தும் அவள் தொலைவென சுவாசம்
ஒருகரை அவள் மறுகரை தொலைத்த நான்
தனிமை அவள் விரல் தொட்ட முத்தம்
அவள் கண்களில் மறையும் கானல் நீர் மட்டும் தான்.....
கானல் நீரில் நானொரு மீனவன்
கடை வரை தூண்டிலிட்டு
வானவில் வண்ணத்தில் நானொரு ஓவியன்
கடைவரை தூரிகையில் வண்ணம் தேடி
அவள் வானவில் வண்ணம் தீட்டிய தங்க மீனாய்..

unnai thedi,,,,
ReplyDelete